பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் கதவில் தலைவர்கள் படம் அகற்றுவது குறித்து அமைதி பேச்சு

Added : பிப் 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 கோவில் கதவில் தலைவர்கள் படம்  அகற்றுவது குறித்து அமைதி பேச்சு

ஈரோடு: தலைவர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ள, கோவில் கதவை அகற்றும் விவகாரம் தொடர்பாக, ஆர்.டி.ஓ., அமைதி பேச்சு நடத்தினார்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, நஞ்சைகாளமங்களம், மன்னதாம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற குலவிளக்கு அம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.கோவில் முகப்பில், மர வேலைப்பாடுகள் கொண்ட கதவில், ஈ.வே.ரா., அன்னை தெரசா, அண்ணாதுரை, முன்னாள் பிரதமர் நேரு, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் என, 28 தலைவர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மொடக்குறிச்சி ஒன்றிய தெற்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலசுப்பிரமணியத்திடம் மனு அளித்தனர்.அதில், 'ஹிந்து சமய ஆகம விதிகளுக்கு முரணாக, கோவில் கதவில் உள்ள தலைவர்களின் படங்களை அகற்ற வேண்டும்' என, தெரிவித்திருந்தனர்.இது குறித்த அமைதி பேச்சு, குலவிளக்கம்மன் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. ஈரோடு, ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை வகித்தார். ஹிந்து முன்னணியினர், பா.ஜ.,வினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.ஆர்.டி.ஓ., முருகேசன் கூறுகையில், ''மக்களின் கோரிக்கையை ஏற்கிறேன். மனுவாக எழுதி கொடுத்தால், கலெக்டர், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் காண்பித்து, உரிய தீர்வை ஏற்படுத்துவோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
05-மார்-202012:23:39 IST Report Abuse
Jayvee ஹிந்து அறநிலையத்துறை கிருத்துவ திராவிட தீவிரவாதிகளின் கைக்கு சென்றுவிட்டது.. பழனிசாமி நெத்தியில் உள்ள பொட்டை அழித்துவிடுங்கள். இல்லை என்றால் அவர்களாய் உங்கள் நெற்றியில் சிலுவை வறிந்துவிடுவார்கள்
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
29-பிப்-202013:51:23 IST Report Abuse
s.rajagopalan அரசியலில் நடக்கும் அநியாயங்களுக்கு அளவே கிடையாதா ...கொல்லன் பட்டறையில் 'ஈ' க்கு வேலை என்பார்கள் ....இந்து தெய்வங்களை செருப்பால் அடித்த ஈ வே ரா வின் உருவத்தை கதவில் பதித்த மடையனை செருப்பால் அடிக்க வேண்டும் ....உடனே அகற்றப்படவேண்டும் .... யாருடைய ஒப்புதலுக்காகவும் காத்திருக்க தேவையில்லை ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X