கோர்ட் செய்தி

தமிழ்நாடு

போராட்டம் நடத்த அரசு டாக்டர்களுக்கு உரிமையில்லை: உயர்நீதிமன்றம்

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
doctors, strike, chennaihighcourt, highcourt, அரசுடாக்டர்கள், சென்னைஉயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றம், போராட்டம்

இந்த செய்தியை கேட்க

சென்னை: அத்யாவசிய பணியில் உள்ள அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வு, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதன் பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட சில டாக்டர்களை டிரான்ஸ்பர் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.


latest tamil news


இதனை எதிர்த்து பாலசுப்ரமணியன் என்ற டாக்டர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரித்த நீதிமன்றம், டாக்டர்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டதை ரத்து செய்ததுடன், அத்தியாவசிய பணியில் உள்ள அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை. நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் டாக்டர்களின் கோரிக்கைகளை தமிழக அரசுபரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA G india - chennai,இந்தியா
29-பிப்-202000:15:49 IST Report Abuse
SIVA G  india மக்கள் கொடுக்கும் வரிகளால் அரசு நடப்பதும், கடனுக்கு வட்டி கட்டுவதும். எல்லோருக்கும் எஜமானர் பொது மக்களே.அவ்வாறு உள்ளபோது பொது மக்களுக்கோ ,பொது சொத்துகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் சமபந்த பட்ட அரசு ஊழியர்கள்/ஜாதி தலைவர்கள்/மத தலைவர்கள்/ அரசியல் கட்சிகள் தலைவர்கள் என யார் மூலமாக நடந்தாலும் அவர்களின் சொத்துகள் பறிக்கப்பட்டு குறைந்தது இரண்டு வருடமாவது சிறை தண்டனை தரப்பட வேண்டும் என்ற சட்டம் வேண்டும். அண்ணல் அம்பேத்கார் அவர்களால் சட்டம் இயற்றும் போது, இப்படி பட்டவர்களுக்கான தண்டனை இயற்றியிருந்தால் பல உயிர்களுக்கும், சொத்துகளுக்கும் பங்கம் வந்து இருக்காது. பல வருடங்களுக்கு முன் கர்நாடகத்தில் சினிமா நடிகரின் இறுதி ஊர்வலத்தினால் பல உயிர்கள் பலியாகின.இது போல பல இடங்களில் நடந்துள்ள போது பொதுஜனம் வாய் மூடி மௌனமே காக்க வேண்டியுள்ளது. பொது மக்களுக்காக தற்போது நீதி துறை பொறுமையாகவும், அழுத்தமாகவும் சாட்டையை சுழற்ற ஆரம்பித்துள்ளது.
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
28-பிப்-202015:59:12 IST Report Abuse
நக்கீரன் பல லட்சம் மக்கள் பணத்தை சம்பளமாக வாங்கிக்கொண்டு தேவையற்ற வேலை நிறுத்தம், போராட்டங்கள் செய்யும் அரசு ஊழியர்களை உடனே வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இன்றைக்கு வேலை நிறுத்தங்கள் அரசை மிரட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதமாகிவிட்டது. இதற்க்கு அரசும் ஒரு காரணம். ஓட்டு வாங்கி ஜெயிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு மக்களின் பணத்தை திருட்டு கழகங்கள் வாரி இறைத்ததன் விளைவை இன்றைக்கு அனுபவிக்கிறோம். இந்த திருட்டு கழகங்கள் ஒழிந்தால்தான் தமிழ்நாடு முன்னேறும்.
Rate this:
Share this comment
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
28-பிப்-202014:56:37 IST Report Abuse
a natanasabapathy Vakkeelkall poraada laam neethimaankal yen aal intha vazhakkai nadatha mudiyaathu yenru kooralaam maruthuvarkal mattum poraada koodaathaam sattathukku yethiraaka saalaiyai marithu poraada laam thappillai avarkall meethu kaavalthurrai nadavadikkaikal yedukka koodaathu yenna theerppukalo
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X