பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் தென்னை நார் உற்பத்தி பாதிப்பு: ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

கோவை: உலகை அச்சுறுத்திவரும் கொரோனா பாதிப்பால், பொள்ளாச்சியில் இருந்து சீனாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் தென்னை நார் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.



latest tamil news




இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தென்னை சார்ந்த தயாரிப்புகள் சீனா, அமெரிக்கா, தென்கொரியா, இங்கிலாந்து உள்ளிட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின், மொத்தத் தென்னை நார் உற்பத்தியில், 50 சதவீத உற்பத்தி கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி செய்யப்படுகிறது.


latest tamil news





சீனாவிற்கு 90 சதவீதம்

கோவை மாவட்டத் தென்னை நார் உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளதாவது:
பொள்ளாச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தென்னை நார்களில் 90 சதவீதம் சீனாவிற்குச் செல்கிறது. அங்கு அவை மெத்தை, கால்மிதி, அணிகலன்கள் மற்றும் பொம்மைகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.கடந்த ஜனவரியில், சீன புத்தாண்டிற்காக அங்குள்ள தொழில்நிறுவனங்களுக்கு விடுமுறையளிக்கப்பட்டது. அதன்பின், கொரோனா பாதிப்பால் தொழிற்சாலைகள் திறக்கப்படவில்லை.


latest tamil news




இதனால், பொள்ளாச்சியில் இருந்து அனுப்பப்பட்ட தென்னை நார்கள் சீனத் துறைமுகங்களில் தேங்கியுள்ளன. ஜனவரி மாதத்திற்கு முன் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தென்னை நார்களுக்கான தொகை இன்னும் கிடைக்கவில்லை. மேலும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுக்கான ஆர்டர்களும் கிடைக்கவில்லை. இந்தக் காரணங்களால் ரூ.700 கோடி அளவிலான தென்னை நார் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், பொள்ளாச்சியில் இயங்கிவரும் பெரும்பாலான தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. அவற்றில் பணிபுரிந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


latest tamil news





நார்க் கட்டிக்குப் பாதிப்பில்லை!


'தென்னை நார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான தொழிற்சாலைகள் தென்னை நார்க்கட்டி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. நார்க்கட்டிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அங்கு மண்ணுக்குப் பதிலாக அவை பயன்படுத்தப்படுகின்றன. இதன் வர்த்தகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை' என, தென்னை நார்க்கட்டிகள் ஏற்றுமதி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
29-பிப்-202001:55:48 IST Report Abuse
கதிரழகன், SSLC சீனாக்காரன் நம்ம நாரை வெச்சு சாமான் செஞ்சு லாபம் பாத்தானில்ல? அந்த தொழிலை இங்க செஞ்சு லாபம் பாருங்கடா. கச்சா பொருள் ஏற்றுமதி நமக்கு அவமானம். கடைசி பொருள் வரை நாமளே செய்யணும் வித்து லாபம் பாக்கணும்
Rate this:
Share this comment
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
28-பிப்-202020:37:22 IST Report Abuse
mrsethuraman  நிலைமை சீராகும் வரைக்கும் அரசு இவர்களுக்கு வட்டியில்லா கடன் அல்லது மானியம் வழங்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
AMERICAN THE GREAT👍 - Khobar,சவுதி அரேபியா
28-பிப்-202016:49:32 IST Report Abuse
AMERICAN THE GREAT👍 65 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஏன் சுயசார்பு பொருளாதார நாடாக இந்தியா மாறவில்லை ? எவனாவது காங்கிரஸ் கைத்தடி பதில் சொன்னா கேட்டுக்குவேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X