அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோமாவில் இருப்பவர் பெயரில் அறிக்கையா?: திகைக்கும் திமுக.,வினர்

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (137)
Share
Advertisement
KAnbazhagan, DMK, GeneralSecretary, Sign, Stalin, திமுக, பொதுச்செயலாளர், க_அன்பழகன், அறிக்கை, கையெழுத்து

சென்னை: கோமாவில் இருக்கும் திமுக., பொதுச்செயலாளர் க.அன்பழகன் பெயரில் திமுக., தரப்பில் வெளியான அறிக்கையால் அக்கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.

தி.மு.க., பொதுச் செயலாளர் க.அன்பழகன், 97, உடல் நிலை பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். வழக்கமாக தி.மு.க.,வின் முக்கியமான அறிக்கைகள் அவரது பெயரில் தான் வெளியாகும். ஆனால் தற்போது இரு எம்எல்ஏக்களின் மறைவு காரணமாக நாளை (பிப்.,29) நடைபெறவிருந்த திமுக எம்.பி.,க்களின் கூட்டத்தை ஒத்திவைப்பதாக வெளியான அறிக்கை கூட பொதுச் செயலாளர் அன்பழகன் பெயரில் வருகிறது. இத்தகைய செயல் கட்சியினரிடைய திமுக மீதான நம்பகத்தன்மையை குலைத்து விடுகிறது.


தி.மு.க., பொதுச் செயலாளர் அன்பழகன், உடல் நிலை பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

latest tamil news



இது குறித்து திமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், திமுக.,விற்கு ஆலோசகர் என்ற பெயரில் திமுக காப்பான், அரசியல் சாணக்கியர் பிரசாந்த் கிஷோர் பாண்டே போன்றவர்களை நியமித்ததால் கட்சியின் பாரம்பரியம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

இது போன்ற முக்கிய அறிக்கைகளை திமுக தலைவர் ஸ்டாலினோ, மேல் மட்ட தலைவர்களோ வெளியிடுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பத்து நாட்களாக கோமாவில் இருக்கும் ஒருவர் பெயரில் அறிக்கை வெளியாவதற்கும், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடைத்தேர்தலின் போது, தீவிர சிகிச்சையில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரல் ரேகை பதிவு செய்தார் என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஒவ்வொரு நிகழ்விலும் திமுக தலைமை என்ன முடிவெடுக்கிறது என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்த காலம் கருணாநிதியோடு முடிந்து விட்டது போல, என்றார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (137)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahendhirun Ramalingam - Cuddalore,இந்தியா
05-மார்-202017:01:36 IST Report Abuse
Mahendhirun Ramalingam கணினி நகலாக இருந்தாலும் காய் ஒப்பம் விட்டுதான் வெளியிடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
04-மார்-202004:18:24 IST Report Abuse
Bhaskaran Ellaaam padukayilthaanaa adapaavame
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
02-மார்-202012:44:57 IST Report Abuse
narayanan iyer இது நவீன உலகம். கணினி நகல். அதற்கு கையெழுத்து தேவையில்லை. திரு. அன்பழகன் தேர்தலில் நிற்கவில்லை என்று எண்ணுகிறேன். யாராவது விளக்குவார்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X