பொது செய்தி

தமிழ்நாடு

நேர்மையான எஸ்.ஐ.,க்கு நேர்ந்த கதி: பெட்டிக்கடை வைக்கும் பரிதாபம்

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (86)
Share
Advertisement
மாங்குடி, ராஜ்குமார், எஸ்ஐ, போலீஸ், நேர்மை, அதிகாரி, பணிமாறுதல், பெட்டிக்கடை,

இந்த செய்தியை கேட்க

தென்காசி: நேர்மையாக செயல்பட்ட எஸ்.ஐ., ராஜ்குமார், பல்வேறு நெருக்கடிக்கு உள்ளானதால் ஆதங்கப்பட்டு ராஜினாமா செய்தவர், தற்போது பெட்டிக்கடை வைக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள மாங்குடியை சேர்ந்த ராஜ்குமார், 2006ல் சிறைத்துறை போலீசாக பணியில் சேர்ந்தவர், நேர்மையாக இருந்ததால் அந்த பணியில் நீடிக்க முடியவில்லை. பின்னர் 2011ல் எஸ்.ஐ., தேர்வில் தேர்ச்சி பெற்று, கன்னியாகுமரி மாவட்ட சட்டம் ஒழுங்கு எஸ்.ஐ.,யாக தனது 2வது இன்னிங்சை தொடங்கினார்.

நேர்மையை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ராஜ்குமார், கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்தி லாரிகளை பிடித்து வைத்தார். லாரிகளை விடுவிக்குமாறு அரசியல் ரீதியிலான அழுத்தம் வந்ததால் அவரை வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.


latest tamil news


அதன்பின்னரும் நேர்மையான பணியை தொடர்ந்து செய்ததற்காக அவருக்கு கிடைத்த பரிசு என்னவோ, சென்னையில் அமைந்தகரை, அம்பத்தூர், அண்ணாநகர், அடையாறு என அடுத்தடுத்து மாற்றப்பட்டார். அதுமட்டுமல்லாமல் அவரது சம்பள உயர்விலும் அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்துள்ளனர்.

பின்னர், சென்னை ஆயுதப்படை பிரிவு, தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் போலீஸ் ஸ்டேசன் என பணியில் சேர்ந்த 9 ஆண்டுகளில் பணிமாறுதல்கள் மட்டும் அவருக்கு தொடர்ந்து வந்துள்ளது. ஆனாலும் மனம் நோகாமல் பணியாற்றிய ராஜ்குமாருக்கு சம்பளமும் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை என மேலதிகாரி வரையில் புகார் தெரிவித்துள்ளார்.


latest tamil news


குடும்பத்தேவை, தனது மூன்று குழந்தைகளின் கல்வி, மருத்துவம் போன்ற செலவினங்களுக்கு பணம் இல்லாமல் சிரமப்பட்டுவந்த ராஜ்குமார், கடந்த பிப்.,15ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் ஆதங்கமாக பதிவிட்டிருந்தார். போலீஸ் பணியின் கஷ்டங்களை கொட்டி தீர்த்த அவர், விரும்பி பணியில் சேர்ந்து, வெறுத்து வெளியேற விரும்பும் கடைநிலை அடிமை ஊழியன், என பதிவிட்டார். நேர்மைக்கு என்றுமே ஆதரவு இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, ராஜ்குமாரின் சொந்த ஊரை சேர்ந்தவர்களும், கடைசியாக அவர் பணியாற்றிய தருவைக்குளம் கிராமத்தாரும் மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி மனு அளித்தனர்.

இது குறித்து மாங்குடி மக்கள் கூறுகையில், ராஜ்குமாருக்கு கடந்த ஜன., மாத சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் நெருக்கடிக்குள்ளான அவர், தன்னையும் லஞ்சம் வாங்க வைத்திடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்தார். அதுமட்டுமல்லாமல், கூலி வேலை பார்க்கப்போவதாக கூறி, இளநீர் கடையில் வேலை கேட்டார், தூத்துக்குடியில் மீன்பிடித்தொழிலுக்கும் செல்ல முயன்றார். எஸ்.ஐ., என்பதால் யாரும் வேலையில் சேர்க்கவில்லை. தற்போது சொந்தமாக பெட்டிக்கடை வைக்க திட்டமிட்டுள்ளார், என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Selvaperumal - kuwait,குவைத்
03-மார்-202017:10:03 IST Report Abuse
R.Selvaperumal மனம் தளராமல் இருங்கள் ...நேர்மை ஒருநாள் வெல்லும் ....
Rate this:
Cancel
D. Subramanian - Indore, M.P.,இந்தியா
03-மார்-202011:41:14 IST Report Abuse
D. Subramanian நேர்மைக்கு பிறப்பிடம் மற்றும் திறமைக்கு ஆதரவு தரும் புதிய அரசியல் கட்சிகள் இவருக்கு இடம் கொடுக்கலாமே? அது சரி அந்த மாதிரி கட்சிகள் இன்று எதுவும் கிடையாது என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்கு கேட்கிறது.
Rate this:
Cancel
thirumal - chennai,இந்தியா
03-மார்-202011:36:30 IST Report Abuse
thirumal கையூட்டு பெற்றால் ஜெயிலுக்கு வாங்கள் என்கின்றனர்... நேர்மையாக இருந்தால் வீட்டிற்கு போங்கள் என்கின்றனர்.... இந்த கலிகாலத்தில் வாழ்வது அவ்வளவு எளிதில்லை என்று தினமும் நிரூபித்து கொண்டே இருக்கின்றனர். மூன்று குழந்தைகளை அவர் எப்படி வளர்த்தெடுப்பார்? பேசாமல் நேர்மையாளர்கள் சங்கம் என்று ஒன்று ஆரம்பித்து நிதி பெற்று இவரைப்போன்றவர் குடும்பத்திற்கு உதவி செய்தால் பணியில் இருந்து விலகாது நாட்டிற்கு நன்மை செய்திடுவார் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X