டில்லி கலவரத்தை அரசியலாக்கும் காங்.,: பா.ஜ., கண்டனம்

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
RajDharma, BJP, Sonia, soniaGandhi, DelhiViolence, ravishankarprasad, ravishankar, பாஜ, காங்கிரஸ், காங், சோனியா, சோனியாகாந்தி, ரவிசங்கர்பிரசாத், ரவிசங்கர்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: சொந்த கட்சியின் சாதனைகளே கேள்விக்குறியாக இருக்கும்போது காங்கிரஸ் தலைவர் சோனியா, அரசின் கடமை குறித்து எங்களுக்கு பாடம் சொல்ல தேவையில்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் தெரிவித்துள்ளார். முக்கிய விஷயத்தை அரசியலாக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

டில்லி கலவரம் தொடர்பாக சோனியா தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர். அதில் டில்லி கலவரத்தை ஒடுக்க முடியாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தன் கடமையிலிருந்து தவறிவிட்டார். எனவே, அவரை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும்' எனக்கூறப்பட்டிருந்தது.


latest tamil newsடில்லியில் நிருபர்களிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: சோனியா, தயவு செய்து எங்களுக்கு ராஜதர்மா(அரசின்கடமை) குறித்துபாடம் சொல்லாதீர்கள். தொடர்ந்து விதிமீறல், ஓட்டு வங்கி அரசியல் ஆகியவையே உங்களின் சாதனையாக உள்ளது.கபில் மிஸ்ரா போன்றோரின் கருத்துகளை கட்சி எப்போதும் ஆதரிப்பது இல்லை. அவரின் கருத்திற்கு மூத்த கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது உள்துறை அமைச்சர் கோபத்தில் உள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றிற்காக அனைவரும் அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டிய முக்கியமான விஷயத்தை அரசியலாக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
29-பிப்-202012:35:50 IST Report Abuse
Malick Raja மனிதநேயமற்ற ,ஏன் மனசாட்சியற்றவர்களை தேடவேண்டாம் இதோ நானிருக்கிறேன் என்று வந்து தன்னை அடையாளபடுத்தியது ஒரு வகை இயல்பு .. டெல்லி சாலைகளில் கூட அடுத்தவர் அனுமதியுடனோ அல்லது டெல்லி வாசியுடன் மட்டுமே பயணிக்கவேண்டும் என்ற நிலை வந்துள்ளதும் உண்மை .. இனி கயவர்கள் அடையாளப்படுத்தப்படுவர் என்பதும் உண்மை
Rate this:
Share this comment
Cancel
FUCK_DINAMALAR - nammaoor,மயோட்
28-பிப்-202020:44:22 IST Report Abuse
FUCK_DINAMALAR அமைச்சரே நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது.ஜவர்ஹலால் நேருவிற்கு அடுத்து மக்கள் உங்களுக்கு தான் வாக்களித்து உள்ளனர்.அவர்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தமால் முக்கியம் இல்லாத பிரச்சனைகளை கையில் எடுத்துள்ளீர்கள்.இதில் அடக்குமுறை வேறு.உங்கள் அரசின் கையாலாகாத்தனம் வெட்ட வெளிச்சம் ஆகிறது.
Rate this:
Share this comment
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
28-பிப்-202020:02:04 IST Report Abuse
மனிதன் டில்லி கலவரத்தை அரசியலாக்குவதா??????? அதே, உங்கள் அரசியல்தானே அதை கலவரமாகவே ஆகியது??? seyyalaam
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X