அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுககாரன் கல்லெடுத்து எறிவான்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
அமைச்சர், ராஜேந்திரபாலாஜி, அதிமுக, பொதுக்கூட்டம், காங்கிரஸ்காரர்கள்,

விருதுநகர்: எம்.ஜி.ஆர்., கையை பிடித்து வந்தவர்கள் தான் அதிமுக.,வினர் என்றும், அமைதியாக இருக்க நாங்கள் காங்கிரஸ்காரர்கள் அல்ல என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள சுந்தரபாண்டியம் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூட்டத்தில் பேசியதாவது: ஜெயலலிதாவிற்கு 72 வயது, எம்.ஜி.ஆர்.,க்கு 103 வயது என சொன்னால் நம்ப முடிகிறதா? இறக்கும் வரையில் அடிமைப்பெண் படத்தில் நடித்தது போல் இருந்தார் எம்.ஜி.ஆர்.,. வயதான தோற்றத்தில் அவரை பார்க்கவில்லை. உடல்நிலை சரியில்லாமல் விதி வசத்தால் ஜெயலலிதா இறந்துவிட்டார்.


latest tamil news


திமுக தலைவர் ஸ்டாலின், மதக்கலவரத்தை தூண்டிவிட்டு ஆட்சியை பிடிக்க நினைக்கிறார். குடியுரிமை சட்டத்தால் முஸ்லிம்கள் யாராவது பாதிக்கப்பட்டார்களா என முதல்வர் பழனிசாமி கேட்டதற்கு பதில் கூறாமல் சட்டசபையில் இருந்து ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார்.

அதிமுக.,வினர் காந்தி கையை பிடித்து வந்தவர்கள் அல்ல, எம்.ஜி.ஆர்., கையை பிடித்து வந்தவர்கள். அதனால் வீரத்தோடு தான் இருப்போம். அமைதியாக இருக்க நாங்கள் காங்கிரஸ்காரர்கள் கிடையாது. அதிமுக., காரன், விசில் அடிப்பான், சவுண்டு விடுவான், தேவைப்பட்டால் கல்லெடுத்து எறிவான். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
29-பிப்-202012:24:37 IST Report Abuse
Malick Raja .. லஞ்சஊழலில் மிகுந்த சொத்துக்கள் அனைத்தும் பட்டியல் சரியாகிவிட்டது ..
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
29-பிப்-202012:24:16 IST Report Abuse
Malick Raja புழலில் வசிக்க இருப்பதை எண்ணிக்கொண்டிருப்பதின் விளைவாகவும் இருக்கும் ..
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
29-பிப்-202006:38:25 IST Report Abuse
PANDA PANDI இந்த அமைச்சர் செய்திக்கு இந்த செய்தி BETTER. இந்தோனேஷியாவில் குறுகிய வயதில் கர்ப்பமாவது அதிகரித்து வருகிறது. இது குறித்து அந்நாட்டின் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியான சிட்டி ஹிக்மாவாட்டே என்ற பெண் சமீபத்தில் அளித்த பேட்டி தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்கள் கர்ப்பமாவது குறித்து அவர் அளித்த பேட்டி: ஆண்கள் நீச்சல் குளத்தில் குளிக்கும்போது விந்தணுக்களை வெளியேற்றினால், அவை தண்ணீரில் கலந்துவிடுகிறது. ஆகையால் தண்ணீரில் எல்லாம் முடிந்துவிடுகிறது. அதுபோல்தான் இந்த பேச்சு..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X