போர்க்குற்ற தீர்மானத்திலிருந்து இலங்கை விலகல்: ஐ.நா., ஆணையர் கண்டனம்

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

ஜெனிவா: மனித உரிமை பேரவையின் 43வது கூட்டத் தொடர், ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. இதில், ஐ.நா., சபையின் மனித உரிமை ஆணையாளர் மிஷேல் பெஷலட் பேசியதாவது:latest tamil news


இலங்கை அரசு, நாட்டு மக்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும். சிறுபான்மை மக்களின் தேவைகளை அறிந்து, நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது மாயமானவர்களைக் கண்டறிய அமைக்கப்பட்ட ஐ.நா., அலுவலகத்திற்கு உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை. காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பொது மக்களுக்கும், ஊடகங்களுக்கும் இருக்க வேண்டிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வித்தியாசமான முறையில் நடத்தப்படுவது வருத்தமளிக்கிறது. நல்லிணக்கம், மனித உரிமைகளை முன்னோக்கிக் கொண்டு செல்வது குறித்தான தீர்மானத்தில் இருந்து விலகுவதாக இலங்கை அரசு தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது. மேலும் இந்த போர்க்குற்ற தீர்மானத்திலிருந்து விலகியிருப்பது நல்லிணக்கத்தைத் தடுக்கக்கூடும்.
இலங்கை நடந்த போர்க்குற்றம் மற்றும் விதி மீறல்கள் குறித்து, இதுவரை கவனம் செலுத்தப்படாமல் இருக்கிறது. இதனால், புதிய விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படுவதில் நம்பிக்கை கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


இதற்கு பதிலளித்துப் பேசிய, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன, 'இலங்கை மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் தான், 30/1 தீர்மானத்திலிருந்து விலக அரசு தீர்மானித்துள்ளது. இலங்கையின் சட்ட வரையரைக்குள் நின்று, பிரச்சனைகளுக்குத் தீர்வை பெற அரசு முயற்சிக்கும்' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
28-பிப்-202022:18:53 IST Report Abuse
Krishna Its SriLankan Peoples Wish But Few War-Criminal Politicians Wish But Misuse People's Name
Rate this:
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
28-பிப்-202021:25:43 IST Report Abuse
Palanisamy T கொலைகாரர்கள் என்று தாங்கள் செய்தக் குற்றங்களை ஒத்துக் கொள்வார்கள் இதை விட இலங்கைப் பிரதமர் இந்தியா வந்து போனப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டது இவ்வளவுக் காலம் கழித்து திரைக்குப் பின்னால் என்னதான் நடக்கின்றதென்று இன்னும் விளங்கி கொள்ளமுடியவில்லை. எதையோ மறைக்கப் பார்க்கின்றார்கள்.
Rate this:
Cancel
28-பிப்-202019:59:53 IST Report Abuse
நக்கல் ஒருத்தனும் மதிக்காத அந்த ஐநா செத்த சபையை குழி தோண்டி புதைக்கிற வேளை வந்துவிட்டது...
Rate this:
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
29-பிப்-202003:35:59 IST Report Abuse
Palanisamy Tஇந்திய அரசு ஐ நா மனித உரிமை அவையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கை மேல் போர்க் குற்ற விசாரணையை கொண்டு வரவேண்டும் அப்படிச் செய்யவில்லையென்றால் இந்தியா ஐநா மனித உரிமை ஆணையத்தில் மற்ற நாடுகளால் மரியாதைக்குரிய நாடாக தேர்ந்தெடுத்திருப்பதில் எந்த மரியாதையுமில்லை. ஒருவேளை இலங்கையிலுள்ள போராளி இயக்கம் போர் நடந்தப் போது இந்தக் கடும் குற்றங்களைகளை செய்திருந்தால் இந்நேரம் இலங்கை அரசு சும்மாயிருந்திருக்காது. இதிலிருந்து தெரியவில்லையா யார் உண்மையானக் குற்றவாளிகளென்று. அண்டை நாடு நட்பு நாடென்பதால் இலங்கை ஆட்சியாளர்கள் மேல் இந்திய அரசு பரிவுக் காட்டுவது நீட்டுவது தவறான அணுகுமுறையாகிவிடும். தமிழக மக்கள் மத்திய அரசுக்கு அழுத்தங்கள் கோடுக்க வேண்டும். மோடி அரசு குடியுரிமைச் சட்டம் கொண்டு வந்தது உண்மையென்றால் இலங்கையில் சிறும்பான்மை மக்களான தமிழர்களை அவர்கள் பாதுகாக்க முன் வரவேண்டும். தமிழக பாஜக வினர் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதில் காட்டும் அக்கறையை இதில் கொஞ்சம் காட்டுங்கள் இனிமேல் நடப்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X