முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு: மஹா., அமைச்சர்

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (64)
Share
Advertisement
NawabMalik, Maharashtra, Minister, Reservation, Muslim, NCP, ShivSena, நவாப்மாலிக், மஹாராஷ்டிரா, அமைச்சர், முஸ்லிம், இடஒதுக்கீடு

மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் புதிய மசோதா சட்டசபையில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் காங்., தேசியவாத காங்., கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியமைத்துள்ளது. சிவசேனா அமைச்சரவையில் உள்ள சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் நவாப் மாலிக் (தேசியவாத காங்., கட்சியை சேர்ந்தவர்) தெரிவித்துள்ளதாவது:

தற்போதைய சட்டசபை கூட்டத்தொடர் முடிவதற்குள், மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்னர் இது தொடர்பான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


latest tamil news


வேலைகளிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். முந்தைய பாஜ.,-சிவசேனா கூட்டணி ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும் கூட பாஜ.,வால் நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
29-பிப்-202011:40:37 IST Report Abuse
Malick Raja உண்மை உறங்குவதில்லை .. நீதி வலுவாகாமல் இருப்பதில்லை. நேர்மை வலிமையடையாமல் இருக்கப்போவதில்லை .. சத்தியம் நிலை நிற்காமல் இருந்ததும் இல்லை இனி இருக்கபோவதுமில்லை . அறிவிலிகளுக்கு அழிவு மட்டுமே மருந்தாக இருக்கும் .. அநீதி ,வஞ்சகம் ,கொடுமை ,போன்றவற்றிக்கு தீர்ப்பு தீ.. யாகவே மாறும் ...
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
29-பிப்-202007:52:35 IST Report Abuse
ஆரூர் ரங் என்ன படிச்சாலும் கடைசியில் ஆஸாதி கோஷம்போட்டு ஆயுதம் எடுப்பவனுக்கு இடவொதுக்கீடு வேஸ்ட்
Rate this:
Share this comment
Rafi - Riyadh,சவுதி அரேபியா
29-பிப்-202022:08:39 IST Report Abuse
Rafi தீவிரவாதி, தேச துரோகி குண்டு வெடிப்பவர்கள் என்று கொடுஞ்ச்சொல் சுமந்தவர்கள் நாடெங்கிலும் நடத்துகின்ற போராட்டங்கள் அமைதியாகவும் தேசிய கொடி பட்டொளி வீசியத்தையும், மாறாக தேச பற்றுகொண்டவர்கள் என்று கூறி மக்களை குழப்பி ஆதாயம் அடைந்தவர்கள் நடத்திய போராட்டம் ஆயுதத்தை காலங்காளம்மாக எடுத்தவர்கள் யார் என்பதை நாட்டில் இப்போது நடந்த கலவரம் மூலம் யாரும் சொல்லாமலே புரிந்து கொண்டார்கள்....
Rate this:
Share this comment
Rafi - Riyadh,சவுதி அரேபியா
29-பிப்-202022:14:16 IST Report Abuse
Rafi மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட 15 சதவிகிதம் இருக்கின்ற இஸ்லாமியர்கள் 5 சதவிகிதம் கூட அரசு பதவியிலோ, கல்வியோ பெறவில்லை என்பதை நீதிமன்றம் உணர்ந்து இட ஒதுக்கீடு வழங்க உத்திரவிட்டும் சமூக ஒத்துழைப்பிற்கு எதிரானவர்கள் முட்டுக்கட்டையாக இருந்துள்ளார்கள் என்பது புலனாகின்றது....
Rate this:
Share this comment
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
29-பிப்-202005:57:24 IST Report Abuse
Raja . பதவியில் அதிகாரத்தில் அமர்ந்தாலும் அவர்கள் முஸ்லிமாகதான் இருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் அதிகாரி மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் முஸ்லிமாக இருந்தால் அவரை அருகில் உட்கார வைத்து அவருக்கு செய்ய வேண்டியதை உடனடியாக செய்து கொடுத்திட தன் கீழ் உள்ளவர்களுக்கு உத்தரவிட்டார். இந்து கிறிஸ்தவராக இருந்தால் கடுகடுஎன்று சீறிப்பாய்ந்தார். ஆனால் இந்து எந்த பாரபட்சமும் பார்க்காமல் பாகுபாடு இல்லாமல் பணி செய்கிறார். இதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். மைனாரிட்டிகளுக்கு அரசு வேலை கொடுப்பதே தவறு.
Rate this:
Share this comment
Rafi - Riyadh,சவுதி அரேபியா
29-பிப்-202023:08:42 IST Report Abuse
Rafi அபாண்டமான குற்றசாட்டு. அது உண்மையாக இருந்தால் வன்மையாக கண்டிக்கதக்கது. இஸ்லாமை நடைமுறைக்கு கொண்டு வந்த எங்கள் நபி அவர்கள் காலத்தில், ஒரு சவ ஊர்கோலம் செல்கின்றது, அப்போது நபி அவர்கள் எழுந்து மரியாதைக்காக நின்றார்கள், அருகில் இருந்த தோழர்கள், அது இஸ்லாமியர் அல்ல என்கிறார்கள், அதற்க்கு நபி அவர்கள், உலக வாழ்க்கையை விட்டு வெளியேறிவிட்டார் மீண்டு அவர்கள் வர போவதில்லை, மதம் கடந்து மரியாதை செய்ய வேண்டும் என்றார்கள். அவருடைய ஆட்சியில் அரசு பணத்தை சொந்த தேவைகளுக்காக தனக்கோ, அல்லது தன் குடும்பமோ பயன் படுத்துவது கூடாது அது தப்பு (ஹராம்) என்றார்கள். அவருடைய கடைசி காலத்தில் உணவுக்காக ஒரு யூதரிடம் தங்களின் உடையை அடமானம் வைத்துவிட்டு கடைசி வரை மீட்காமல் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். அவருடைய ஆட்சியில் யூதர்கள் பொருளாதார செழிப்புடன் இருந்ததை வரலாறு கூறுகின்றது. மனித நேயத்தை இஸ்லாம் வலியுறுத்துகின்றது, இந்தியாவில் நடந்த பல பேரிடர்களில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு அபாரம் என்பதை பல ஊடகங்கள் பாராட்டியுள்ளதை நீங்களும் அறிவீர்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X