பொது செய்தி

இந்தியா

12 ஆயிரம் சிசுக்கள் உயிரிழப்பு; 2 லட்சம் குழந்தைகளுக்கு எடை குறைவு

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில், 2 லட்சம் குழந்தைகள் எடை குறைவாக பிறந்துள்ளதாகவும், அதில், 12 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.



latest tamil news



உலக சுகாதார அமைப்பின் விதிப்படி, பிறக்கும் போது, 2.5 கிலோவிற்கும் குறைவான எடையுள்ள குழந்தைகள், குறைந்த பிறப்பு எடை பிரிவின் கீழ் சேர்க்கப்படுகின்றன. குறைந்த எடை குழந்தையின் இறப்புகளுக்கு, முதன்மையான காரணமாகக் கருதப்படுகிறது.
மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப், ''2018-19ம் ஆண்டில் 1.5 கிலோவிற்கும் குறைவான எடையில், 2.11 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. அதில், 22,179 பேர் மும்பையில் பிறந்தவர்கள். இதில், சுகாதார முகாமைத்துவ தகவல் அமைப்பின் (எச்.எம்.ஐ.எஸ்.,) அறிக்கையின்படி 13,070 குழந்தைகள் குழந்தைப் பருவத்திலேயே இறந்துள்ளனர். இதில், 1,402 இறப்புகள் மும்பையில் பதிவாகியுள்ளது,'' எனத் தெரிவித்துள்ளார்.


latest tamil news



குழந்தைகள், பிறக்கும் போதே எடை குறைவாகப்பிறந்து இறப்பதும், நல்ல எடையுடன் பிறந்து போதுமான ஊட்டச்சத்து உணவு கிடைக்காமல் இறப்பதும் இந்தியாவில் அதிகரித்து வருவதாக, உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
29-பிப்-202004:44:34 IST Report Abuse
Mani . V டிஜிட்டல் இந்தியா ஹே ஒருவருக்கு பத்து லட்சத்துக்கு ஆடை ஹே இன்னொரு பக்கம் சிசுக்கள் மரணம் ஹே.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
28-பிப்-202022:31:14 IST Report Abuse
ஆரூர் ரங் முக்கிய காரணம் சில மதத்தவர் இடைவெளியின்றி அடிக்கடி கூடுதல் பிள்ளைகளைப் பெறுவதும் கர்ப்பகாலத்தில் உடல்நலத்தை கவனிக்காமல் விடுவதும்தான் உணவு கிடைத்தாலும் தாய்மார் சமவிகித உனவு உண்பதில்லை துரித உணவுகளை உன்பதால்கூட சத்துக்குறைபாடு ஏற்படும்.மற்றபடி கர்ப்பிணிகள் சிசுக்களுக்கானரூ 9000 கோடி பிரதமரின் போஷன் அபியான் திட்டம் போதுமான ஊட்டச்சத்துக்களை அளிக்கும் ஒன்று. பிரச்னை என்னவென்றால் எத்தனைதான் அரசு பிரச்சாரம் செய்தலும் மக்கள் அதனை கவனிப்பதில்லை சில மாநிலங்களும் தங்கள் பங்கு நிதியை பயனாளிகளுக்கு சரிவரக் கொடுப்பதில்லை. ஆனாலும் பெற்றோர்களுக்கல்லவா கூடுதல் பொறுப்பு?
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் கோட்சே பெண்கள் கர்பமாகாமல் இருந்தாலே போதும். இப்படிப்பட்ட குழந்தை மரணங்கள் ஏற்படாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X