புவனேஸ்வர்: குடியுரிமை திருத்த சட்டம் பற்றி எதிர்கட்சிகள் தவறான கருத்துகளை பரப்புவதன் மூலமாக கலவரத்தை தூண்டுகின்றன என உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பாஜ., சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) ஆதரவாக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மம்தா உள்ளிட்ட எதிர்கட்சிகள், சிஏஏ., முஸ்லிம்களின் குடியுரிமை பறிப்போகும் என தவறான கருத்துகளை பரப்புகின்றனர். அவர்கள் மக்களை தூண்டி கலவரத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த சட்டம் குடியுரிமை வழங்குவதற்காக தான் இந்த சட்டமே தவிர, யாருடைய குடியுரிமையும் பறிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE