ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: உடனடியாக மீட்க முதல்வர் கடிதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: உடனடியாக மீட்க முதல்வர் கடிதம்

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (7)
Share
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மீனவர்கள், ஒப்பந்த அடிப்படையில் ஈரான் நாட்டில் தங்கி மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.தற்போது, 'ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள தமிழக மீனவர்கள், தாயகம்

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மீனவர்கள், ஒப்பந்த அடிப்படையில் ஈரான் நாட்டில் தங்கி மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.



latest tamil news



தற்போது, 'ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள தமிழக மீனவர்கள், தாயகம் திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது' என, மீனவ அமைப்பினர் தமிழக அரசிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மத்திய அரசுக்குத் தமிழக முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளாவது:ஈரானில் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்கள். அங்கு, கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால், மீனவர்கள் உடனடியாகத் தமிழகம் திரும்ப தயாராக உள்ளனர். ஆனால், அங்கிருந்து வெளியேற வழியின்றி தவித்து வருகின்றனர்.ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம், உடனடியாகத் தமிழக மீனவர்களை மீட்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


latest tamil news



'ஈரானில் கடற்கரை பகுதிகளில் தங்கியுள்ளது தமிழக மீனவர்கள் சரியான உணவுவசதி இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதியும் கிடைப்பதில்லை. அவர்களை உடனடியாகத் தாயகத்துக்கு மீட்டு வர வேண்டும்' தமிழக மீனவர் ஒருங்கிணைப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X