பெங்களூரூ: திருடச் சென்ற இடத்தில் அசதியானதால் தூங்கிய திருடன் போலீசாரிடம் வசமாக சிக்கினான்.
திருடுவது என்பது ஒரு எளிதான காரியமல்ல. அதற்கு தைரியத்துடன் கவவனமும் தேவை. பல கொள்ளை சம்பவங்களில் திருடுபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். ஒரு சில நேரங்களில் தாங்கள் அறியாமல் செய்யும் சிறு தவறுகளால் போலீசிடம் மாட்டிக் கொள்வார்கள்.

அப்படி ஒரு சம்பவம் தெற்கு கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. மாநிலத்தின் தெற்கு பகுதியை சேர்ந்த உப்பினங்கடி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்று உள்ளது.சுதர்ஷன் என்பவர் இப்பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பீகார் மாநிலத்தை சேர்ந்த அனில் சஹானி என்பவன் திருட வந்துள்ளான். வழக்கம் போல வீட்டின் மேல்பகுதியை பிரித்து வீட்டிற்குள் சென்றுள்ளான். வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை அனைத்தையும் திருடி மூட்டையாக கட்டி விட்டு புறப்பட தயாரானான்.

அப்போது அங்கிருந்த சோபாவை கண்ட திருடன் அனில் சஹானி சிறிது நேரம் தூங்கி செல்லலாம் என முடிவெடுத்து தூங்கினான். காலை விடிந்ததும் வீட்டின் உரிமையாளர் வீட்டின் மேல் பகுதி பிரித்து இருப்பதை கண்டுஅதிர்ச்சி அடைந்தார். வீட்டின் அனைத்து அறைகளிலும் சென்று பார்த்த அவர் ஒரு அறையில் இருந்த சோபாவில் திருடன் அனில் சஹானி நிம்மதியாக தூங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து திருடனை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE