சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும்!

Added : பிப் 28, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 இவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும்!

இவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும்!

அ.சேகர், சிதம்பரம், கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, பயங்கரவாதம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இப்போது, மீண்டும் தலை துாக்கி விட்டதோ என்ற அச்சம்உருவாகியுள்ளது.நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட, 127 ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளில், 33 பேர், தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். எந்த அளவுக்கு, தமிழகத்தில் இவர்கள் ஊடுருவி விட்டனர் என்பதை, இதன் வாயிலாக அறிய முடிகிறது.அதிலும், கடலுாரைச் சார்ந்த, ஒரு முஸ்லிம் இளைஞர், தலைவனாக இருப்பது, அதிர்ச்சியாக உள்ளது.ஐ.எஸ்.ஐ.எஸ்., இயக்கத்துடன், வங்கதேச பயங்கரவாத இயக்கமும்,தமிழக முஸ்லிம் தீவிரவாதிகளும் இணைந்து செயல்படுவதாக சொல்லப்படுகிறது.நாகர்கோவில் அருகே, உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, தமிழக காவல் துறைக்கே சவால் விடும் வகையில், முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் வளர்ந்து விட்டது, வருத்தம் அளிக்கிறது.தற்போது, சி.ஏ.ஏ.,வுக்கு எதிராக, சென்னை, வண்ணாரப்பேட்டையில் துவங்கியுள்ள, இஸ்லாமியர் போராட்டம் திசை மாறி, ஆங்காங்கே கலவரங்கள் ஆக மாறும் சூழ்நிலை உருவாகி விட்டது; இது, ஹிந்து- - முஸ்லிம் இடையே உள்ள நட்புக்கு கேடு விளைவிக்கும்.ஏற்கனவே, இங்கு பல தீவிரவாத கருத்துக்களை பரப்பும், பல முஸ்லிம் அமைப்புகள் செயல்பட்டு வருவதை, உளவுத்துறை அறியும்.இன்று, அமைதி பூங்காவாக திகழும், தமிழகத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், சி.ஏ.ஏ.,வுக்கு எதிரான போராட்டத்தை துாண்டி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, இங்கு சில சுயநல அரசியல் கட்சிகள், மறைமுகமாக ஆதரவு தருகின்றன.இதை, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு உண்மையான, ஹிந்துவும் கவனித்து வருகிறார். இஸ்லாமிய சகோதரர்கள் வீதியில் நின்று போராடுவதை, முற்றிலும் யாரும் விரும்பவில்லை.சி.ஏ.ஏ.,வால், இவர்கள் உரிமைகள் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்தால், அதை சட்ட ரீதியான முறையில் போராடி வெற்றி பெற வேண்டும். அதை விட்டு அமைதிக்கு பாதிப்பு உண்டாகும் வகையில், போராட்டங்கள் நடத்தி வந்தால், அதுவே,வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி விடும்.போராட்டத்தில் ஈடுபடும், இஸ்லாமிய சகோதரர்கள் யோசிக்காமல் செய்யும் போராட்டம், நிச்சயம் அவர்களுக்கு எதிராக திரும்பி விடும். வேற்றுமையிலும், ஒற்றுமையாக வாழ்வதற்கு, தமிழக இஸ்லாமிய சகோதரர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும்!

வீணாகஜாதியைஇழுக்காதீர்கள்!

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வைச் சேர்ந்தவர், எம்.பி., - எஸ்.ஆர்.பாரதி. இவர், 'ஹிந்துக்களுக்கு எதிரி,தி.மு.க., இல்லை; அந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களும், கோவிலுக்குச் செல்கின்றனர்; நெற்றியில் குங்குமம், திருநீறு அணிகின்றனர். நாங்களும் ஹிந்துக்கள் தான்' எனகூறியுள்ளார்.இது மட்டுமின்றி, 'தி.மு.க., தலைவர் குடும்பத்தினர் கோவிலுக்குச் செல்வதை பெரிது படுத்துகின்றனர். பிரஷாந்த் கிஷோர்,தி.மு.க.,வை பயன்படுத்துவதை பார்த்து, மற்ற கட்சியினர் வயிற்றெரிச்சலை அடைகின்றனர்' என, கூறியுள்ளார்.ஹிந்துக்களோடு பிராமண சமூகத்தை சேர்த்து பார்ப்பதும், பேசுவதும், திராவிடக் கட்சியினர், வாடிக்கை தான். அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எல்லாபிராமணனும், ஹிந்து. ஆனால், எல்லா ஹிந்துவும், பிராமணன் இல்லை.தி.க.,வின் நிறுவனர், ஈ.வெ.ரா., தொட்டு, அண்ணாதுரை, கருணாநிதி உள்ளிட்ட திராவிட கட்சித் தலைவர்கள் அனைவரும், ஹிந்து மதத்தையும், அந்தணர் குலத்தையும் இழிவுபடுத்தியேவந்துள்ளனர்.இத்தருணத்தில், முதல்வர் நாற்காலியைப் பிடிக்க வேண்டும் என, குட்டிக்கரணம் போடும்,தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கட்சி விழாக்களில் குத்துவிளக்கு ஏற்றுகிறார். ஹிந்துக்களுக்கு சாதகமாக பேசுகிறார்; இது, பிரஷாந்த் கிஷோரின் வழிகாட்டுதலில் செய்யப்பட்ட ஏற்பாடா எனதெரியவில்லை.'ஊருக்கு இளைத்தோர் அல்ல, அந்தணர்கள். அவர்கள், ஊருக்கு உழைத்தோர்' என்பதை, பா.ஜ.,வை சேர்ந்த, செய்தி தொடர்பாளர், திருப்பதி நாராயணன் அருமையாக விளக்கியுள்ளார்.ஹரிஜன் ஆலயப்பிரவேசம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்தது, வைத்தியநாத அய்யர் தலைமையில் என்பதையும், தி.மு.க., மறக்கலாகாது. இன்று, தமிழ் தமிழ் என, வாயளவில் பேசி, தி.மு.க., நாடகமாடுகிறது. அன்று, சத்தமில்லாமல், அடக்கமாக தமிழுக்குத் தொண்டாற்றிய,உ.வே.சா.,வையும், சூரியநாராயண சாஸ்திரியையும்,தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நினைவில் கொள்ள வேண்டும்!உங்கள் பேச்சு, கட்சி சார்ந்து மட்டும் இருக்கட்டும்; வீணாக, ஜாதியை இழுக்காதீர்கள்!

தமிழருவி மணியன்ராசியில்லாத நபர்கிடையாது!

சீ.கிருஷ்ணமூர்த்தி, மதுரை யிலிருந்து எழுதுகிறார்:'தமிழருவி மணியன் ராசியில்லாத மனிதர்' என,வாசகர் ஒருவர், இதே பகுதியில் கடிதம் எழுதி இருந்தார். அவருக்கு, சில உண்மை சம்பவங்களை நினைவூட்டவிரும்புகிறேன்...கடந்த, 1996 சட்டசபை தேர்தலில், த.மா.கா., -தி.மு.க., கூட்டணியை ஆதரித்தார், தமிழருவி மணியன்; அப்போது,தி.மு.க., ஆளும் கட்சியாக வளர்ந்தது. 2001 சட்டசபை தேர்தலில், த.மா.கா., - அ.தி.மு.க., கூட்டணியை ஆதரித்தார்; அப்போது, அ.தி.மு.க., ஆளும் கட்சியாக மாறியது.கடந்த, 2004 லோக்சபா தேர்தலில்,அ.தி.மு.க.,வுக்கு எதிரான, தீவிர பிரசாரத்தை,தமிழருவி மணியன் மேற்கொண்டார்.அந்த தேர்தலில், அ.தி.மு.க., 40 லோக்சபா தொகுதிகளிலும் தோல்வியுற்றது. 2006 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் -தி.மு.க., கூட்டணியை ஆதரித்தார், தமிழருவி மணியன்; அப்போது,தி.மு.க., ஆளும் கட்சியாக உருவெடுத்தது.'கடந்த, 2016ல் சட்டசபை தேர்தலில், ஜெ., மீண்டும் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. தீய சக்தி,தி.மு.க., வெற்றி பெறக்கூடாது' என, தமிழருவி மணியன் தீவிர பிரசாரம் செய்தார்; தி.மு.க.,வும் வீழ்ந்தது.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு எதிராக, தமிழருவி மணியன் அமைத்த கூட்டணி, மாபெரும் ஓட்டு வங்கியை பெற்று, இரண்டு லோக்சபா தொகுதிகளை கைப்பற்றியது.தமிழக வரலாற்றில் பிரதான எதிர்க்கட்சியான,தி.மு.க., 40 லோக்சபா தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது மட்டுமல்ல, கன்னியாகுமரி தொகுதியில், டிபாசிட்டை பறி கொடுத்தது.தமிழருவி மணியன் பக்கமே, வெற்றி இருக்கும் என்பதற்கு, நல்லஉதாரணங்கள் இவை!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
01-மார்-202009:28:01 IST Report Abuse
venkat Iyer அ.சேகர் அற்புதமாக குறிப்பிட்டு இருந்தார்.சிஏஏ வுக்கு இந்துக்கள் பலரும் குறல் கொடுப்பதாக நாகப்பட்டினம் மாவட்டம் (வடக்கு மாவட்டம்)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விஷப் பிரச்சாரங்களை செய்து வருகின்றது.அதில் அசாமின் முதலமைச்சர் சையத் அன்வார் தைமூர் குடிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும், குடியரசு விருது பெற்ற முகமது சனாவுல்லா அகதிப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் வரும் நாட்டின் ஜனாதிபதி பக்ருதீன் அலிஅகமதுக்கு குடியுரிமை கேள்விக்குறியாகும் பட்டு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். உண்மையில் பாரதத்தில் பிரிவினைகளோடு வாழ்ந்து வருவதை எனது கிராமத்தில் கீழ்கண்ட விஷயங்களில் இருந்து காணலாம்.1.இன்று நாகூர் தர்க்காவிற்கு இந்துக்கள் சென்று வருகின்றனர்.அங்கு பணம் கொடுத்துவிட்டு வருகின்றனர்.2.மேலும் முஸ்லிம்கள் விவசாயம் செய்வதை அறவே விட்டுவிட்டனர்.ஆனால் இந்துக்கள் லாபமோ நஷ்டமோ தொடர்ந்து லாபம் நஷ்டம் பார்க்காமல் விவசாயத்தை பார்க்கின்றனர்.முஸ்லிம்கள் வெளிநாடுகளில் சம்பாதித்த பணத்தினை ஒரு காலத்தில் வங்கிகளில் நிரந்தர வைப்பில் போட்டு வந்தது கடன் பெறுபவர்களுக்கு பெறும் உதவியாக இருந்தது.இன்று ஜமாத்தில் அவர்களின் பணம் வைக்கப்பட்டு முஸ்லிம்களின் வியாபார வளர்ச்சிக்கு ஷேர் கோல்டன் போல லாபம் பெறப்படுகிறது.இதனால் அனைத்து வியாபாரத்தில் இவர்கள்தான் முன்னனியில் உள்ளார்கள்.பின்புலத்தில் இவர்களின் வளர்ச்சிக்கு இந்துக்கள் தான் உதவியாக முதன்மையாக உள்ளார்கள்.ஆனால் வேலை வாய்ப்புகள் அனைத்தையும் முஸ்லிம்களுக்கே கொடுக்க வேண்டும் என்று ஜமாத்தினல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்.கிராம கோவில் விழாக்களுக்கு வியாபாரம் செய்யும் முஸ்லிம்கள் பண உதவி செய்வதை நிறுத்த வேண்டும் என்பதை ஜிமாத்தில் உத்தரவினை போட்டு உள்ளார்கள். ஆனால் இன்று மெக்கா செல்ல அரசு மானியம் ஐம்பது சதவீதம் கொடுக்கிறது.இந்துக்களுக்கு காசி ராமேஸ்வரம் செல்ல எந்த உதவியையும் செய்வதில்லை.இந்துக்கள் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு முஸ்லிம்கள் பட்டாசு வெடித்த காலம் உண்டு.அதனை இப்பவெல்லாம் செய்யகூடாது என்று எனது முஸ்லிம் நண்பரே வருத்தப்பட்டு கூறியுள்ளார்.அரசியல்வாதிகள் டிவிகளில் முஸ்லிம் பண்டிகையை கொண்டாடுவதை நம்மால் பார்க்கமுடியும்.அரபு நாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் ஒரு தொழிலாளர் போன்றுதான் பணியில் அங்கு அதிகமாக அமர்த்தப்படுகின்றனர்.ஆன்ல் இந்தியாவில் அவர்களுக்கு வேலை வாய்ப்பில் இடம் ஒதுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுகின்றனர்.அவர்கள் இப்போதெல்லாம் இந்துக்கள் பள்ளிகளிலோ அல்லது கல்லூரிகளிலோ படிப்பது கிடையாது.அவர்கள் முஸ்லிம் பள்ளிகளிலும் ,கல்லூரிகளிலும் படிக்கின்றார்கள்.வேட்டி கட்டும் முஸ்லிம்களை கட்டாயப்படுத்தி கைலி கட்ட சொல்வதுடன் தாடி குருதா போன்றவற்றை வைத்துகொள்ள ஜமாத்தில் கட்டாயப்படுத்தி சொல்லியுள்ளார்கள்.இந்திய வளர்ச்சிக்கும்,சமுக வளர்ச்சிக்கும் அவர்களின் பங்கு குறைந்துவிட்டது என்று சொல்லலாம்.அதிக பணத்தினை கொடுத்து இடத்தை பலரும் வாங்கி ஒட்டு மொத்த ஊரே அவர்கள் கையில் இருக்கும் நிலை வந்துவிட்டது.உதாரணத்திற்கு நாகை மாவட்டம் மயிலாடுதுறை கடைதெருக்கள் மற்றும் பல வீடுகள் இவர்களது கைக்கு சென்றுவிட்டது.இவர்கள் நடத்தும் பள்ளிக்கு வெள்ளிகிழமை விடுமுறைவிடுகிறார்கள்.அவர்களது பண்டிகையை முக்கிய படுத்தி விடுமுறை விடுவதால் அங்கு படிக்கும் இந்து மாணவர்களுக்கு இடையூறாக உள்ளது.மம்பாயில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜம்மு ,அஸ்ஸாமில் தீவிரவாத தாக்குதல்கள் நடை பெறுவது பாகிஸ்தான் முஸ்லிம்கள்தான் காரணம்.மேலும் இங்கு வியாபாரம் செய்யும் முஸ்லிம்களின் லாபங்களில் ஒரு பகுதி முஸ்லிம்களின் வளர்ச்சி அல்லது தீவிரவாதத்திற்கு பயன்படுவதாக சொல்லலாம்.பிரியாணிக்கு அலையும் இந்துக்கள் முஸ்லிம்களுக்கு கைகூலிகளாக இருக்கின்றனர்.நம்மை சுற்றியுள்ள நாடுகள் மத நாடுகளாக பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் நாம் என்பது சதவீதம் இருக்கும் நிலையில் நாம் ஏன் இந்து நாடாக பிரகடனப்படுத்தகூடாது.இந்துக்களின் முதலீடுகள் இந்தியாவில் வைக்கப்படுகிறது.முஸ்லிம்இளின் கருப்பு படங்கள் பல லாக்கரில் யாருக்கும் பயன்படாத கையில் வங்கிகளில் வைக்கப்பட்டு இருந்த போது மோடி அவர்களின் பணமதிப்பிழப்பு கொண்டு வந்த போது முதலில் பயந்தவர்கள் முஸ்லிம்கள்தான்.இதற்கு பின்னர்தான் அனைத்து பள்ளிவாசலில் நடத்தப்படும் ஜமாத் மூலம் பண சேமிப்பு பயன்பாடு மற்றும் கடன் போன்றவற்றை அவர்களுக்குள் உள் வங்கி செயல்பாடுகளை நடத்தி வருகின்றனர்.எனது நண்பர் ஜமாத் வாயிலாக வியாபாரம் 14% வட்டியில் ஆண்டுக்கு கிடைக்கும் வகையில் கொடுப்பதால் முஸ்லிம்கள் ஜவுளி ,இரும்பு,மற்றும் நகை,கிராமங்களில் மளிகை கடை போன்றவற்றில் பெரும் முதலீடாக செய்வதால்,பெரிய கடைகளுக்கே வாங்குபவர் செல்லும் மனநிலையில் இருப்பதால் இவர்களது வியாபாரம்தான் இன்று முன் நிற்கின்றனர்.சிஏஏ அமல்படுத்தினால் பணம் வருவது போவது கண்காணிக்கப்பட்டுவிடும்.
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
29-பிப்-202011:06:57 IST Report Abuse
karutthu அப்படினா தமிழருவி மணியன் வரும் சட்டசபை தேர்தலில் ரஜினியோட சேர்ந்து எம் எல் எ க்கு போட்டியிடலாமே
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
29-பிப்-202007:29:39 IST Report Abuse
Darmavan ஹிந்து சகோதரர்கள் என்று எந்த முஸ்லிமும் சொல்வதில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X