இதே நாளில் அன்று

Added : பிப் 28, 2020
Share
Advertisement
 இதே நாளில் அன்று

பிப்ரவரி 29, 1896 மொரார்ஜி தேசாய்

குஜராத் மாநிலம், படெலியில், 1896, பிப்., 29ல் பிறந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று, அரசு பணியை துறந்தார். 1934 மற்றும் 1937ம் ஆண்டில் மும்பை மாகாண வருவாய் துறை மற்றும் உள்துறை அமைச்சராக பணியாற்றினார். 1952ல், மும்பை மாகாண முதல்வராக பொறுப்பேற்றார். முன்னாள் பிரதமர் நேருவின் அரசில், தொழில் துறை அமைச்சராகவும், பின், நிதியமைச்சராகவும் பணியாற்றினார். இந்திராவின் ஆட்சியில், துணை பிரதமராக இருந்தார்.அதிக முறை, அதாவது, 10 முறை, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அவசர நிலையை எதிர்த்ததால், சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைக்குப் பின், ஜனதா கட்சியில் இணைந்தார். காங்., சாராத, முதல் பிரதமராக, 1977ல் பொறுப்பேற்றார். 1995, ஏப்., 10ல் காலமானார். இந்தியாவின், 'பாரத ரத்னா' மற்றும் பாகிஸ்தானின், 'நிசான் --- இ- - பாகிஸ்தான்' விருதுகளை பெற்ற, ஒரே இந்தியர்.அவர் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X