பொது செய்தி

தமிழ்நாடு

'இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை'

Added : பிப் 28, 2020
Share
Advertisement
 'இன்னும் என்னால்  ஜீரணிக்க முடியவில்லை'

சென்னை :இந்தியன் - 2 பட விபத்தில் பாதித்தவர்களுக்கு, 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ள, இயக்குனர் ஷங்கர், 'அந்த சம்பவத்தை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை' என, கூறியுள்ளார்.லைக்கா தயாரிப்பில், கமல் நடித்து வரும், இந்தியன் - 2படத்தை, ஷங்கர் இயக்குகிறார்.
சமீபத்தில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில், மூவர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக, கமலும், லைக்கா நிறுவனமும் கடிதம் வாயிலாக மோதிக் கொண்டனர். மேலும், சம்பவம் தொடர்பாக, லைக்கா நிறுவனம், கமல், ஷங்கர் உள்ளிட்டவர்களிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஷங்கர் வெளியிட்ட அறிக்கை:இந்தியன் - 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியில் இருந்தும், வேதனையில் இருந்தும், இன்னும் மீளவில்லை; மீள முயற்சிக்கிறேன்.ஒரு மாதம் முன்புதான், என்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு, என்னை உலுக்கி விட்டது. நல்ல உதவி இயக்குனர் அமைவது, மிகவும் கடினம். ஒரு சரியான உதவி இயக்குனர் அமைந்து விட்டார் என்ற, என் சந்தோஷம் நீடிக்காதது, என் துரதிர்ஷ்டம். கிருஷ்ணாவின் இல்லத்திற்கு சென்றிருந்த போது, அவரின் தாயார், என்னிடம் கதறியது, என்னை இம்சிக்கிறது.
படப்பிடிப்பின் போது, எனக்கு தேவைப்படும் போதெல்லாம், டீ, காபி என எது கேட்டாலும், என் அருகிலேயே நின்று, உடனுக்குடன் கொடுத்து உதவிய மதுவை, அன்று சவக்கிடங்கில் பார்த்ததும் உடைந்து விட்டேன்.கலைத்துறையில் இருந்த சந்திரன், இந்தியன் - 2 செட்டில் ஒரு மாதம் வேலை இருக்கிறது என்று விரும்பி, வேலைக்கு சேர்ந்தார் என்று, கேள்விப்பட்ட போது துக்கம் தாளவில்லை. எவ்வளவோ பாதுகாப்பும், முன்னேற்பாடுகளும் செய்திருந்தும், சற்றும் எதிர்பாராமல் நடந்த, அந்த விபத்தை சிறிதும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X