பொது செய்தி

தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரம்

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 28, 2020
Share
Advertisement
நகர்ப்புற, உள்ளாட்சி தேர்தல், ஏற்பாடு,மாநில ,தேர்தல் ஆணையம் தீவிரம்

சென்னை :நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளில், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள், தீவிர கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.

தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில், 1.50 லட்சத்திற்கு மேற்பட்ட பதவிகள் உள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 27 மாவட்டங்களில் உள்ள, 91 ஆயிரத்து, 975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, 2019 டிச., மாதம், இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் உட்பட அனைத்து மாவட்டங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டி உள்ளது. இதற்காக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில், வார்டுகளை மறுவரையறை செய்ய, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி, வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.சமீபத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. மார்ச், 5ம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், கருத்து கேட்பு கூட்டங்கள் நடக்க உள்ளன. மார்ச், 10ம் தேதிக்குள், ஒன்பது மாவட்டங்களில், இந்த கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளை, மார்ச், 20க்குள் முடிக்க, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கருத்து கேட்பு கூட்டங்களில் பெறப்படும் புகார்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, வார்டு மறுவரையறை பட்டியல் இறுதி செய்து, அரசாணை வெளியிடப்பட உள்ளது. இப்பணிகள் முடிந்ததும்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் ஒன்பதுமாவட்ட ஊரக தேர்தல் குறித்த அறிவிப்பு, ஏப்., முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக, தேர்தல் ஆணைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X