ஒடிசா முதல்வர் பட்நாயக் வீட்டில் மம்தா அமித்ஷா சந்திப்பு

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement

புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்கின் வீட்டில் மம்தா பானர்ஜி , அமித்ஷா நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர்.



latest tamil news




மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் கிழக்கு மண்ட கவுன்சில் அமைப்பு இயங்கி வருகிறது. இதன் துணை தலைவராக ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் இருந்து வருகிறார். நாட்டின் கிழக்கு மாநிலங்கள் இந்த அமைப்பின் கீழ் இணைந்துள்ளது. இந்த அமைப்பின் கூட்டம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்க மாநிலமுதல்வர் மம்தாபானர்ஜி, பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சராக பதவியேற்று கொண்ட பின்னர் அமித்ஷா முதன்முறையாக ஒடிசா மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். நாட்டில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள சி.ஏ.ஏவிற்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் தனது மாநிலத்தில் அமல்படுத்த போவதில்லை என கூறி வருகிறார்.


latest tamil news



இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர் மாநிலமுதல்வர் நவீன்பட்நாயக் தன்னுடைய வீட்டில் அனைத்து தலைவர்களுக்கும் விருந்து அளித்தார். அப்போது அமித்ஷாவும் மம்தா பானர்ஜியும் நேருக்கு நேராக அமர்ந்திருந்தனர். இது குறித்து பரபபரப்பாக பேசப்பட்டது.
இருவரும் நேருக்கு நேராக சந்தித்தது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட போது சி.ஏ.ஏவை பற்றி பேச வில்லை என மம்தா கூறினார். தொடர்ந்து அவர் தற்போது டில்லியில் தற்போது உள்ள பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். அதன்பின்னர் அரசியல் பற்றி விவாதிப்போம் என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
01-மார்-202011:22:39 IST Report Abuse
Sanny இந்திய பாரம்பரிய உணவு சாப்பிடுறாங்க, பாரம்பரிய உடையுடன் இருக்கிறாங்க, ஆனால் பாருங்க ஸ்பூன் பாவித்து சாப்பிடுறாங்க.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
01-மார்-202005:46:48 IST Report Abuse
meenakshisundaram அதுக்காகத்தானே திமுக காரன் எல்லா நிகழ்ச்சிலேயும் biryani தர்றான்?
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
01-மார்-202005:38:43 IST Report Abuse
Sanny இவங்க எல்லாம் நடிகர்கள் மாதிரி, மேடையில் ( திரையில் ) தான் எதிரியாய் வில்லனாய் நடிப்பாங்க, மாற்றவேளைகளில் இவங்க ஒன்னுக்குள் ஒன்னு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X