சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பல்லடம் வங்கி கொள்ளை: டில்லியில் ஒருவர் சிக்கினார்

Updated : பிப் 28, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் ஒருவரை, போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.latest tamil news
பல்லடத்தை அடுத்த வே.கள்ளிப்பாளையம் கிளை பாரத ஸ்டேட் வங்கியில், கடந்த, 24ல், லாக்கரை உடைத்து, 600 சவரன் நகை மற்றும் 18.50 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப் பட்டது. கொள்ளையர்கைளை பிடிக்க, எஸ்.பி., திஷா மிட்டல் தலைமையில், ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடந்தது.வங்கியில் கிடைத்த தடயங்கள், அருகிலுள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளின் அடிப்படையில், தனிப்படையினர், மேற்கு வங்கம், பீகார், ஒடிசா உட்பட வட மாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், டில்லியில் ஒருவர் சிக்கியுள்ளார்.


latest tamil newsஇது குறித்து, போலீசார் கூறுகையில், 'டில்லி சென்ற தனிப்படை போலீசார், கொள்ளையில் தொடர்புடைய ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர் மீது, ஏற்கனவே டில்லி போலீஸ் ஸ்டேஷன்களில் பல வழக்குகள் உள்ளது. விரைவில், இதில் தொடர்புடையே மேலும், இருவரையும் பிடித்து, பல்லடத்துக்கு அழைத்து வருவோம்,' என்றனர். கொள்ளை சம்பவத்தில், நகைகளை இழந்த வாடிக்கையாளர்களுக்கு பதில் கூற முடியாமல், வங்கி அதிகாரிகள் விழி பிதுங்கி நிற்கும் நிலையில், கொள்ளையன் ஒருவர் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani iyer Vijayakumar - Coimbatore,இந்தியா
01-மார்-202012:19:30 IST Report Abuse
Mani iyer Vijayakumar ஏன் தமிழ் நாட்டின் பலேபலே ...டில்லியில் இருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Mani iyer Vijayakumar - Coimbatore,இந்தியா
01-மார்-202012:18:00 IST Report Abuse
Mani iyer Vijayakumar நகை காணாமல் போனால் அதற்கு வங்கி தான் மாற்று ஏற்பாடு செய்யவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
sahayadhas - chennai,இந்தியா
29-பிப்-202011:35:33 IST Report Abuse
sahayadhas கடன் வாங்கி கொள்ள அடிகிறான் பணக்கார வட இந்தியன் . களவு செய்து கொள்ளை அடிகிறான் சாதாரன வட இந்தியன் .
Rate this:
Share this comment
Jaya Ram - madurai,இந்தியா
29-பிப்-202017:41:18 IST Report Abuse
Jaya Ramமத்திய அரசு நீட் என்றபெயரில் கொள்ளையடிக்கிறது நமக்கு உரிமையன நமது வரிப்பணத்தில் கட்டிய கல்லூரி மருத்துவ இடங்களை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X