மறைந்த ஆர்.சுப்புலட்சுமி உடலுக்கு அமைச்சர்கள், பிரமுகர்கள் அஞ்சலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மறைந்த ஆர்.சுப்புலட்சுமி உடலுக்கு அமைச்சர்கள், பிரமுகர்கள் அஞ்சலி

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (2)
Share

திருச்சி : 'தினமலர்' பங்குதாரர் அமரர் ஆர்.ராகவனின் மனைவி சுப்புலட்சுமி அம்மாள் உடலுக்கு, பல்துறை பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். 'தினமலர்' திருச்சி, வேலுார் பதிப்புகளின் ஆசிரியர் முனைவர் ஆர்.ராமசுப்பு, வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோரின் தாய் சுப்புலட்சுமி, 77, நேற்று முன்தினம் மாலை, திருச்சியில் காலமானார்.அவரது உடல், திருச்சி கன்டோன்மென்ட், பேர்ட்ஸ் ரோட்டில் உள்ள, அவர்கள் இல்லத்தில், பொது அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.


அமைச்சர்கள் அஞ்சலி
latest tamil newsஅமைச்சர்கள் செல்லுார் ராஜூ, வெல்லமண்டி நடராஜன், உதயகுமார், விஜயபாஸ்கர், வளர்மதி, காமராஜ், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, பரஞ்சோதி, நல்லுசாமி, கே.கே.பாலசுப்பிரமணியன், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலர் குமார், முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா, தி.மு.க., முதன்மைச் செயலர் நேரு, எம்.பி., திருச்சி சிவா, எம்.எல்.ஏ.,க்கள் ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சேகரன், அன்பில் பெரியசாமி, கருணை ராஜா ஆகியோர், மலரஞ்சலி செலுத்தினர்.

தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா, மாநில வர்த்தக அணி நிர்வாகி விஜயகுமார் ஆகியோர், நேரில் வந்து, அஞ்சலி செலுத்தினர். பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா, மாநில பொதுச் செயலர் கே.டி.ராகவன், முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் பார்த்திபன், மாவட்ட தலைவர் ராஜேஷ், மாவட்ட நிர்வாகிகள் இல.கண்ணன், சரவணன், ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியன், சரவணன், ஒன்றிய தலைவர் கண்ணன், சுதேசி இயக்க மாநில பொறுப்பாளர் இளங்குமார் சம்பத் ஆகியோர், அஞ்சலி செலுத்தினர்.

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன், தலைமை நிலைய செயலர் மனோகரன், அமைப்புச் செயலர் சாருபாலா, மனோகரன், மாவட்ட செயலர்கள் ராஜசேகரன், சீனிவாசன், கல்லணை குணா ஆகியோர், அஞ்சலி செலுத்தினர். ம.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் வெல்லமண்டி சோமு, சேரன், அடைக்கலம், காங்கிரஸ் முன்னாள் மேயர்கள் எமிலி ரிச்சர்டு, சுஜாதா, த.மா.கா., நிர்வாகிகள் நந்தா செந்தில்வேலு, புலியூர் நாகராஜன் ஆகியோர், அஞ்சலி செலுத்தினர்.


ஓய்வுபெற்ற டி.ஜி.பி., பாலச்சந்திரன், மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ, மத்திய மண்டல ஐ.ஜி., அமல்ராஜ், திருச்சி சரக டி.ஐ.ஜி., பாலகிருஷ்ணன்; டாக்டர்கள் நரசிம்மராவ், சுனில் சீனிவாசன், பாலசுப்பிரமணியன், செந்தில், முகமது சுல்தான், சீனிவாசன், காமராஜ், லயன்ஸ் பன்னீர்செல்வம் ஆகியோர், அஞ்சலி செலுத்தினர். கன்னியாஸ்திரி ஜெபம், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க புரவலர் தீட்சிதர் பாலு, ஹேமநாதன், கலை பண்பாட்டுத்துறை முன்னாள் இணை இயக்குனர் குணசேகரன், கிரடாய் ஆனந்த், ஆக்சினா குரூப்ஸ் மேலாண்மை இயக்குனர் ஜெயகர்ணா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, பொதுச் செயலர் கோவிந்தராஜூலு, தமிழ்ச்செல்வம், இந்திரா கணேசன் கல்விக் குழும செயலர் ராஜசேகரன், வி.எச்.பி., தமிழ்நாடு நிறுவன தலைவர் வேதாந்தம், கிரிஜா ஆகியோரும், அஞ்சலி செலுத்தினர்.
latest tamil news

தினமலர் பங்குதாரர் மறைந்த ஆர்.ராகவன் மனைவி ஆர்.சுப்புலட்சுமி உடலுக்கு பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா அஞ்சலி செலுத்தினார்.
பிரஸ் கிளப் புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டமான், சிவானி கல்வி குழும தலைவர் செல்வராஜ், 'மங்கள் அண்டு மங்கள்' மூக்கபிள்ளை, சுரேஷ் மூப்பனார், ரவிமுருகையா, ஜென்னி ஜோசப் லுாயிஸ் ஆகியோரும், அஞ்சலி செலுத்தினர். திருச்சி பிரஸ் கிளப் நிர்வாகிகள், திருச்சி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள், தில்லை மெடிக்கல் மனோகரன், முத்தரையர் சங்க இளைஞரணி நிர்வாகி ராம் பிரபு, தனலட்சுமி சீனிவாசன் குழும தலைவர் சீனிவாசன், செயலர் நீல்ராஜ், துணைத் தலைவர் கதிரவன் ஆகியோர், அஞ்சலி செலுத்தினர்.

லுாப்ரா பார்வையற்றோர் சங்க தாமஸ் மற்றும் குழுவினர், ரோவர் கல்விக் குழும சேர்மன் வரதராஜன், ஜான் அசோக், ராமகிருஷ்ணா கல்லுாரி தலைவர் சிவசுப்பிரமணியன், செயலர் விவேகானந்தன், லயன் டேட்ஸ் பொன்னுதுரை, விக்னேஷ் கல்விக் குழும கோபிநாத் ஆகியோரும், அஞ்சலி செலுத்தினர்.

நாகப்பா கார்ப்பரேஷன் லட்சுமணன், நாகப்பன், கரூர் வக்கீல் சங்க தலைவர் மாரப்பன், கரூர் செந்தில்நாதன், அன்புநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ், ஹமீது பிரதர்ஸ், கே.எம்.எஸ்.ஹக்கீம், அகில பாரத ஹிந்து மகா சபா துணைத் தலைவர் ராகவன், கே.ஏ.எஸ்.ராமதாஸ் ஆகியோரும், அஞ்சலி செலுத்தினர். கல்யாணி கவரிங் உமாநாத், நவநீதா பில்டர்ஸ் ஆனந்த், பாலகிருஷ்ணன், மணி கார்ப்பரேஷன் மணி, பி.எல்.ஏ., சிதம்பரம், பி.எல்.ஏ., பழனியப்பன், ஊக்கடை ராஜேஷ் ஆகியோரும், அஞ்சலி செலுத்தினர். ஆறுநாட்டு வேளாளர் சங்க நிர்வாகிகள், வேலுார் சாய் சிட்டி சென்டர் ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ், முன்னாள் எம்.எல்.ஏ., சேகரன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி லோகநாதன், ரவிசாமி ஆகியோரும், அஞ்சலி செலுத்தினர்.

வர்த்தகர்கள் வேலுார் மாவட்ட தி.மு.க., இளைஞரணி கம்பன், முன்னாள் மேயர் சுஜாதா, வக்கீல் சரவணன், ஸ்ரீரங்கா மோட்டார்ஸ் ஊழியர்கள், தாயார் மல்டி சர்வீஸ் நிர்வாகி தாயார் சீனிவாசன், வக்கீல் ராஜகோபால் ஆகியோரும், அஞ்சலி செலுத்தினர். சவுடாம்பிகா கல்விக் குழும தலைவர் ராமமூர்த்தி, செயலர் செந்துார்ச்செல்வன், தாய் ரெஸ்டாரென்ட் மோகன், கஜப்பிரியா ஓட்டல் மேலாண்மை இயக்குனர் நவபவித்ரா உட்பட உள்ளூர் அரசியல் கட்சியினர், அரசு அலுவலர்கள், கல்வி நிறுவன தலைவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பல்துறை பிரமுகர்கள், சுப்புலட்சுமி அம்மையார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா: 'தினமலர்' ஆசிரியர் ஆர்.ராமசுப்பு, வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோரின் தாயார் சுப்புலட்சுமி மறைவு வருத்தமளிக்கிறது. அ.ம.மு.க., பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன்: என் நீண்ட நாள் நண்பர்களான ஆர்.ராமசுப்பு, ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோரின் தாயார் சுப்புலட்சுமி மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவா: ராமசுப்பு, கோபால்ஜி இருவரும், இரு ஆண்டுக்கு முன், தங்கள் தந்தையை இழந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள், தாயாரையும் இழந்துள்ளனர்.

'தினமலர்' நாளிதழில் பணியாற்றும் அனைவரையும், அன்புடன் உபசரித்த தாயார், இன்று நம்முடன் இல்லை என்பது, வேதனையை தருகிறது. தி.மு.க., சார்பிலும், தலைவர் ஸ்டாலின் சார்பிலும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அமைச்சர் விஜயபாஸ்கர்: பத்திரிகை உலகில் முத்திரை பதித்துக் கொண்டிருக்கும், 'தினமலர்' ஆசிரியர் ஆர்.ராமசுப்பு, வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோரின் தாயார் சுப்புலட்சுமி மறைவுக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தாயாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, மன ஆறுதல் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.

நாகை எம்.பி., செல்வ ராஜ்: 'தினமலர்' பங்குதாரர் மறைந்த, ஆர்.ராகவன் மனைவியும், ஆசிரியர், ஆர்.ராமசுப்பு, வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோரின் தாயாருமான, ஆர்.சுப்புலட்சுமி இயற்கை எய்தினார் எனும் செய்தியறிந்து துயருற்றேன். அவருடைய குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா. பாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: ஆர்.சுப்புலட்சுமி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.உடல் தகனம்
இரண்டு நாட்களாக, திரளான பொதுமக்கள், ஆர்.சுப்புலட்சுமி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்குகள், நேற்று பிற்பகல், 3:00 மணிக்கு நடந்தன. பின், திருச்சி பறவைகள் சாலையில் உள்ள, அவரது வீட்டில் இருந்து, இறுதி ஊர்வலம் துவங்கியது. ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் உள்ள, திருமங்கை மன்னன் படித்துறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல், குல வழக்கப்படியான சடங்குகளுக்கு பின், எரியூட்டப்பட்டது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X