கேரள ஏர்போர்ட் வழக்கு ஐகோர்ட்டுக்கு மாற்றம்

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி : திருவனந்தபுரம் விமான நிலையத்தை, 'அதானி' குழுமத்திற்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து, தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதை மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.



latest tamil news



கடந்த ஆண்டு, திருவனந்தபுரம் விமான நிலையம் உள்ளிட்ட, ஆறு விமான நிலையங்களை, நிர்வகிக்க விடப்பட்ட ஏலத்தில், அதானி குழுமம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த கேரள அரசு, திருவனந்தபுரம் விமான நிலையத்தை, அதானி குழுமத்திற்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது.


latest tamil news



ஆனால், மாநில அரசின் அந்த மனுவை, தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான பிரச்னை என்பதால், அதை உச்ச நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என கூறியது. இதையடுத்து, கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. அதை, நேற்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்த மனுவை, மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கே மாற்றி உத்தரவு பிறப்பித்தது. அதில், உயர்நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
29-பிப்-202017:28:07 IST Report Abuse
Apposthalan samlin என்ன கால்பந்து மாதிரி உதைத்து விளையாடுகிறீர்கள் ...
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
29-பிப்-202005:08:29 IST Report Abuse
blocked user கம்மிகள் ரஷிய கம்பெனிக்கு குத்தகைக்கு கொடுக்கவேண்டும் என்று சொல்கிறார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X