பொது செய்தி

இந்தியா

ஜாலியன் வாலாபாக் படுகொலை நேரில் பார்த்த 123வயது தியாகி மறைவு

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 29, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
ஜாலியன் வாலாபாக் படுகொலை பார்த்த,123 வயது தியாகி,மறைவு

பெங்களூரு: ஜாலியன் வாலாபாக் படுகொலையை, நேரில் கண்ட, மூத்த சுதந்திர போராட்ட வீரர் சுதாகர் சதுர்வேதி, 123, நேற்று முன்தினம் அதிகாலை பெங்களூரில் காலமானார்.
பெங்களூரின் பலேபேட்டில், 1897ல் பிறந்தவர் சுதாகர் சதுர்வேதி. இவர் கன்னடம், சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி என நான்கு மொழிகளில் புத்தகம் எழுதியுள்ளார். பத்திரிகையாளருமான இவர், அதிக ஆண்டுகள் வாழ்ந்த மூத்தவர் என்ற சாதனை பட்டியலில் சேர்க்கப்பட்டார்.


latest tamil news



நாட்டின் சுதந்திர போராட்டத்துக்காக, தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இவர், மகாத்மா காந்திக்கு தட்டச்சராக பணியாற்றினார். 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்.கடந்த, 1919 ல் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த போராட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலையை நேரில் கண்டவர் சுதாகர் சதுர்வேதி. இவர் வேதங்கள், மந்திரங்கள் அறிந்தவர் என்பதால், ஜாலியன் வாலாபாக்கில் கொல்லப்பட்ட அனைவருக்கும், இறுதி சடங்கு செய்யும்படி, இவருக்கு, மகாத்மா காந்தி உத்தரவிட்டார். பெங்களூரு ஜெயநகர், 5வது பிளாக்கில் வசித்து வந்த இவர், நேற்று முன்தினம் அதிகாலை காலமானார். சாம்ராஜ் பேட்டை மயானத்தில் இறுதி சடங்கு நேற்று முன்தினம் மாலை நடந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை நேரில் கண்டவர்களில், மீதியிருந்த இவரும் மறைந்துவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
01-மார்-202013:47:31 IST Report Abuse
Rafi ஆங்கிலேயர்கள் ஆயுதத்தை விட பயந்தது அகிம்சையை, ஆங்கிலேயனே தேவலாம் என்ற நிலையில் நாடு போய் விடுமோ என்ற அச்சம் மக்களுக்கு வந்து விட்டது.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
29-பிப்-202019:38:06 IST Report Abuse
Lion Drsekar அதை விட மிக அதிக அளவில் தற்போது நடத்திக்கொண்டு இருக்கிறார்கள், கொடுத்து வைத்தவர் ஒரே ஒரு கொலையைத்தான் பார்த்தார்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
29-பிப்-202019:37:56 IST Report Abuse
Lion Drsekar அதை விட மிக அதிக அளவில் தற்போது நடத்திக்கொண்டு இருக்கிறார்கள், கொடுத்து வைத்தவர் ஒரே ஒரு கொலையைத்தான் பார்த்தார். இங்கு ஒவ்வொரு கட்சி ஒவ்விரு பெயரில் தினம் தினம் அரங்கேற்றிக்கொண்டு வருகின்றனர், யாரும் எந்த சமூக விரோதிகள் மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை, நீதித்துறையம் சாட்சி இருந்தால் மட்டுமே விசாரிப்பதால் இது ஒரு முழு நேர தொழிலாக ஆகிவிட்டது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X