டிரம்பின் இந்திய பயணம் ; அமைச்சர் மைக் போம்பியோ பெருமிதம்

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 29, 2020
Share
Advertisement

வாஷிங்டன் : ''அதிபர் டிரம்பின் இந்திய பயணம், அந்த நாட்டின் மீது, அமெரிக்கா எவ்வளவு மதிப்பு வைத்துள்ளது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது,'' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ கூறியுள்ளார்.



latest tamil news



அமெரிக்க அதிபர் டிரம்ப், இரண்டு நாள் பயணமாக, சமீபத்தில் இந்தியா சென்றிருந்தார். ஆமதாபாதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரமாண்ட கூட்டத்தில் உரையாற்றினார். அங்குள்ள சபர்மதி ஆசிரமத்துக்கும் சென்றார். இது குறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ கூறியதாவது: இந்தியா மீது, அமெரிக்கா எவ்வளவு மதிப்பு வைத்துள்ளது என்பதை, அதிபர் டிரம்பின் பயணம் நிரூபித்துக் காட்டியுள்ளது. அதிபர் டிரம்பின் ஆட்சிக் காலத்தில், இந்தியாவுடனான நட்பு, பல மடங்கு அதிகரித்துள்ளது.


latest tamil news



சுதந்திரம், தனி நபர் உரிமை, சட்டம் - ஒழுங்கு ஆகிய முக்கிய அம்சங்கள், இரு தரப்பு உறவை, மேலும் பலப்படுத்தியுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்காசிய பிராந்தியத்துக்கான இணை அமைச்சர் அலைஸ் ஜி வெல்ஸ் கூறுகையில்,''அதிபர் டிரம்பின் இந்திய பயணம், இரு தரப்பு உறவை பலப்படுத்தியுள்ளது. இரு நாடுகளும் மேலும் இணைந்து செயல்படுவதற்கு, இந்த பயணம், பெரிதும் உதவி புரிந்துள்ளது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X