பொது செய்தி

இந்தியா

எட்டு முக்கிய துறைகள் வளர்ச்சி 2.2 சதவீதம்

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 29, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி : கடந்த ஜனவரி மாதத்தில், நாட்டின் முக்கிய துறைகள், 2.2 சதவீதம் வளர்ச்சி கண்டிருப்பதாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.



latest tamil news



இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: நாட்டில் உள்ள முக்கிய எட்டு துறைகள், கடந்த ஜனவரி மாதத்தில், 2.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. இதற்கு நிலக்கரி, சுத்திகரிப்பு பொருட்கள், மின்சாரம் ஆகிய துறைகளில் உற்பத்தி அதிகரித்தது காரணமாக அமைந்துள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், உள்கட்டுமான துறையில், 1.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அதிகரித்துஉள்ளது.


latest tamil news



நிலக்கரி, சுத்திகரிப்பு பொருட்கள், மின்சாரம் ஆகிய துறைகளில், உற்பத்தி முறையே, 8 சதவீதம், 1.9 சதவீதம், 2.8 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை வாயு, உரம் ஆகிய துறைகள் வளர்ச்சி குறைந்து, எதிர்மறையாக உள்ளன. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல், ஜனவரி வரையிலான காலகட்டத்தில், முக்கிய துறைகளின் வளர்ச்சி குறைந்து, 0.6 சதவீதமாக உள்ளது. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில், வளர்ச்சி, 4.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-பிப்-202020:26:07 IST Report Abuse
ஆப்பு ஜ வ ஹ ர் லா ல் நே ரு எட்டெழுத்து. எட்டு துறைகளில் வளர்ச்சி குறைவு. நேருவோட சதின்னு இப்பவாவது புரியுதா? எங்களை குறை சொல்லாதீங்க.
Rate this:
Share this comment
Cancel
29-பிப்-202007:10:14 IST Report Abuse
தமிழ் காசா பணமா.சும்மா அள்ளிவிட வேண்டியதுதான்.
Rate this:
Share this comment
Cancel
29-பிப்-202005:44:15 IST Report Abuse
ஆப்பு பாரதிய ஜனதா கழகத்தின் சாதனை பாரீர்.. பாரீர்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X