பொது செய்தி

தமிழ்நாடு

பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 29, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

திருப்பூர் : ''பொதுத்தேர்வு நேரம், 2:30 மணி நேரத்தில் இருந்து, 3:15 மணி நேரமாக உயர்த்தியுள்ளது' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.



latest tamil news




திருப்பூரில் முதலிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி கூடுதல் கட்டடத் திறப்பு விழா மற்றும் 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி நுாற்றாண்டு விழாவில் பங்கேற்ற, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்காக, மாநிலம் முழுவதும், 3 ஆயிரத்து, 12 தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டை விட கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டம் என்பதால், தேர்வு நேரத்தை, நடப்பாண்டு உயர்த்தியுள்ளோம்.


latest tamil news




காலை 10:00 மணிக்கு துவங்கும் தேர்வு, மதியம், 1:15 மணி வரை நடக்கும். முதல், 15 நிமிடங்கள் வினாத்தாள் படிப்பதற்காக ஒதுக்கப்படும். கடந்தாண்டை விட அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தேசிய அளவில் தமிழகத்தில் தான் கல்விக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி, மனித வாழ்க்கைக்கு அவசியம். அதை அனைவரும் பெற வேண்டும் என்பதே, அரசின் நோக்கம். மூச்சு நின்றால் மட்டுமே உயிர் போனது என்று கூற முடியாது.முயற்சி நின்றால் கூட உயிர் இல்லை என்பது போல் தான். எனவே, மாணவர்கள் முயற்சியை கைவிடக் கூடாது.

பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பள்ளியில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்தை அரசே வழங்கும். இவ்வாறு, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-பிப்-202016:50:42 IST Report Abuse
தமிழ் எதுக்கு தாழ்த்தப்பட்டவர்க்கும் சிறுபான்மையினருக்கும் கூடுதல் மார்க். விடைத்தாள்ள பேரும் நெம்பரும் மட்டும் எழுதிட்டு வெத்து பேப்பர கொடுத்துட்டா 100/100 மார்க் போட்டுடலாம்.நல்லா இருக்கும் இல்ல.
Rate this:
Share this comment
Cancel
periasamy - Doha,கத்தார்
29-பிப்-202011:14:24 IST Report Abuse
periasamy குழப்பவாதிகளான உங்கள் அனைவரின் பதவியை காலி செய்ய வேண்டும் என் வீட்டுப் பிள்ளைகளை நேற்று தேர்வுக்கான அனுமதிநேரம் கேட்ட பொழுது இரண்டரை மணி நேரம் என்கிறார்கள் தேர்வோ நாளை மறுநாள் என்னங்கடா ஒரே தாமச பண்றீங்க
Rate this:
Share this comment
Cancel
பச்சையப்பன்,கோபால் புரம். கூடுதல் நேரம் ஒதுக்கி என்ன யூஸ்!? சிறுபான்மையினர்க்கும் தாழ்த்தப்பட்டோர் மக்களுக்கும் கூடுதல் மார்க்குகள் வழங்கப்பட வேண்டும். எல்லா வகுப்பிலும் ஆல் பாஸ் முறை கொண்டு வரப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
JIVAN - Cuddalore District,இந்தியா
29-பிப்-202012:04:06 IST Report Abuse
JIVANகோமாளி புத்தி இன்னும் அப்படியே இருக்குனு காட்டுது...
Rate this:
Share this comment
Covim-20 - Soriyaar land,இந்தியா
29-பிப்-202012:46:24 IST Report Abuse
Covim-20ஏன்... பரீட்சை எழுதாமலேயே உயர்ந்த மதிப்பெண்களில் தேர்ச்சி என்று அறிவித்தால் இன்னும் நன்றாக இருக்குமே... நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்கியது போதவில்லையா?? எத்தனை சலுகைகளை பெற்றாலும் அறிவும் புத்தியும் சற்றும் வளரவே இல்லையே உங்களுக்கெல்லாம்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X