இந்த செய்தியை கேட்க
புதுடில்லி: டில்லியில் நடந்த கலவரத்தில், வன்முறையில் ஈடுபட்ட 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 123 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டில்லியில், கலவரம் காரணமாக, ஒரு வாரமாக நிலவி வந்த பதற்றம் குறைந்து, மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது. பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று திறக்கப்பட்டன. வீடுகளுக்குள் முடங்கி கிடந்த மக்கள், தற்போது வெளியே வரத் துவங்கியுள்ளனர். பலி எண்ணிக்கை, 42 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், டில்லி கலவரம் தொடர்பாக, 123 முதல் தகவல் அறிக்கைகள், போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. வன்முறையில் ஈடுபட்டதாக, 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கலவரம் நடந்த பகுதிகளைச் சேர்ந்த இமாம்கள், மவுலவிகளை, டில்லி போலீஸ் உயரதிகாரிகள் நேற்று சந்தித்து, இயல்பு நிலை திரும்ப ஒத்துழைப்பு தரும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
கலவரத்தில் வீடுகளை இழந்துள்ள மக்களுக்காக, ஒன்பது நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில், அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டுள்ளன. டில்லியில் பள்ளி தேர்வுகள் நடப்பதால், தேர்வு மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி, மாநில அரசுக்கும், டில்லி போலீசாருக்கும், டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE