பயங்கரவாத நிதியுதவியை பாக்., நிறுத்த வேண்டும்: ஐ.நா.,வில் இந்தியா ஆவேசம்

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 29, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
terrorist, india, pakistan, Unhrc, NRC, belgium, pak, terrorism,  பயங்கரவாதம், இந்தியா, பாகிஸ்தான், பாக், பெல்ஜியம், ஐநா, என்ஆர்சி, பெல்ஜியம்,

இந்த செய்தியை கேட்க

ஜெனீவா :'பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்தி உள்நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை அகற்ற பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாக். குற்றம்சாட்டியிருந்தது. இதை மறுத்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர குழுவின் முதன்மை செயலர் விமர்ஷ் ஆர்யன் பேசியதாவது:உலக நாடுகளின் அனைத்து கூட்டங்களிலும் இந்தியா குறித்து தவறான தகவல்களை அளித்து சர்வதேச சமுதாயத்தை திசை திருப்ப பாக். முயற்சிக்கிறது.அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜம்மு காஷ்மீர் முன்னேற்றத்தை சீர்குலைக்க பாக். பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளித்து வருகிறது. இந்நிலையிலும் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் ஜம்மு காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. பாக். பத்து அம்சங்களை பின்பற்ற வேண்டும் என இந்தியா கோருகிறது.

முதலாவதாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும். பாக்.கில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அகற்றப்பட வேண்டும். காஷ்மீரில் சட்டவிரோதமாக ஆக்ரமித்த பகுதியில் இருந்து பாக். வெளியேற வேண்டும். மத வழிபாடு சட்டத்தை தவறாக பயன்படுத்தி சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறையை நிறுத்த வேண்டும். ஹிந்து, சீக்கியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மையின பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்வதை தடுக்க வேண்டும்.பாக். பிற நாடுகளில் தற்கொலைப் படையாக செயல்படவும் பயங்கரவாத செயல்களை மேற்கொள்ளவும் சிறுவர்களை தேர்வு செய்கிறது. இதை நிறுத்த வேண்டும். சிந்து பலுசிஸ்தான் போன்ற மாகாணங்களில் அரசுக்கு எதிராக கருத்து கூறும் பத்திரிகையாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் காணாமல் போகின்றனர் ; படுகொலை செய்யப்படுகின்றனர். இதை பாக். தடுக்க வேண்டும்.


latest tamil news



உள்நாட்டில் ஜனநாயகத்தை காக்க நிலையான சீர்திருத்தங்களை செய்ய வேண்டும். பாகிஸ்தானில் மனித உரிமைகள் எப்படி மதிக்கப்படுகின்றன என்பது பற்றி உலகுக்கு தெரியும். அன்னிய சக்திகளின் சீர்குலைப்பு முயற்சிகளுக்கு மத்தியிலும் இந்தியா சிறுபான்மையினர் உட்பட அனைத்து மக்களின் நலன் காத்து ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்றி வருகிறது. இதுவும் உலக நாடுகளுக்கு தெரியும்.ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு அங்கம். இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து கருத்து கூற இஸ்லாமிய கூட்டமைப்புக்கு எந்த தகுதியும் கிடையாது. தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து சரிவர ஆராயாமல் பெல்ஜியம் கருத்து கூறியுள்ளது. இந்தியாவுக்கு மிக நெருக்கமான பெல்ஜியம் சரியாக ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டும் .இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
01-மார்-202007:31:38 IST Report Abuse
 nicolethomson இந்த பத்து அம்சத்த்தோடு சுடலை கான் , உதயகுமார் , டேனியல் காந்தி , சைமன் , ஜவாஹிருல்லா போன்றோரை அந்நாட்டு வஜிரிஸ்தான் மாநிலத்திற்கு தலைமை பதவிக்கு பரிந்துரையுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
29-பிப்-202019:13:48 IST Report Abuse
Lion Drsekar இங்கு பல லட்சம் கோடிக்கு நடந்து கொண்டு இருக்கும் புழக்கத்தை நிறுத்தங்கள் .மறைக்கப்பட்ட நிஜங்கள் என்ற பெயரில் தினம் தினம் பல ஆயிரம் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன , குறிப்பாக பெண்கள் இப்படியும் பேசுவார்களா என்று நினைக்கும் அளவுக்கு இந்த பணம் விளையாடுகிறது . நாட்டின் ஒற்றுமை சீர்குலைக்கும் வகையில் இந்த பணம் விளையாடுகிறது, முதலில் இதை அறவே அறுத்தால் மட்டுமே ஜனநாயகம் செழிக்கும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
MANITHAN -  ( Posted via: Dinamalar Android App )
29-பிப்-202018:32:45 IST Report Abuse
MANITHAN பயங்கரவாதத்தை பாகிஸ்தான் உடனே நிறுத்த வேண்டும்!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X