உன்னைப் போல் ஒருவன்? புடின் ஒரு புரியாத புதிர்

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 29, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement

ரஷ்யாவின் இரும்பு மனிதர் விளாடிமிர் புடின். அதிபர், பிரதமர் என, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவின் அதிகார சிகரத்தில் இருப்பவர். வல்லரசாக இருந்த சோவியத் ரஷ்யா சிதறுண்டு போன பின், ரஷ்யாவை அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ ரீதியாக, துாக்கி நிறுத்தியவர்.



latest tamil news



ரஷ்யாவின் உளவு அமைப்பான கே.ஜி.பி.,யின் உயர் பொறுப்பில் இருந்தவர். சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினுக்கு பின், நீண்ட காலமாக பதவியில் இருப்பவர். 1997ல், போரிஸ் எல்சின் பிரதமராக இருந்தபோது, கிரம்ளின் மாளிகையில் நுழைந்தார். அவரை எப்.எஸ்.பி., என்ற உள்நாட்டு உளவு அமைப்பின் தலைவராக நியமித்தார் எல்சின். 1999ல், எல்சின் பதவியை ராஜினாமா செய்தபோது, ரஷ்யாவின் இடைக்கால பிரதமரானார் புடின். 2000ம் ஆண்டு, அதிபரானார்; 2008ம் ஆண்டு வரை, இரு முறை அதிபராக இருந்தார்.தனது கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, எதிராளிகளே இல்லை என்ற நிலையில், மூன்றாவது முறை அதிபராக தேர்வாக, அந்நாட்டு அரசியல் சட்டம் குறுக்கே நின்றது.


latest tamil news



எனினும், தனது அரசியல் சீடர் டிமித்ரி மெத்வதேவ் என்பவரை அதிபராக நியமிக்க ஏற்பாடு செய்தார்.அப்போதும் அதிகாரத்தை விட்டுத்தராமல், பிரதமராக புடின் பதவியேற்றார். பின், 2012ம் ஆண்டு அரசியல் சட்டத்தை திருத்தி, மூன்றாவது முறையாக அதிபரானார். அதிபர் பதவிக்காலம் நான்கில் இருந்து, ஆறு ஆண்டு காலமாக உயர்த்தப்பட்டது.கடந்த 2018ம் ஆண்டு பதவிக்காலம் முடிந்த பின், மீண்டும் நான்காவது முறையாக அதிபராகி உள்ளார். அவரது பதவிக்காலம், 2024ல் தான் நிறைவடைகிறது. தற்போது, 67 வயதாகும் புடின், அதற்கு பின்னரும் ஆயுள் வரை அதிபர் என்ற இலக்குடன், ரஷ்யாவில் அசைக்க முடியாத ஆளுமையாக திகிழ்கிறார்.


ஆள் மாறாட்ட அதிபர்?


latest tamil news


புடின் குறித்து பல்வேறு சர்ச்சைகள், உலகம் முழுவதும் உலா வருகின்றன. அதில், அதிர்ச்சிக்குரிய ஒன்று, 2000ல் அதிபராக பதவியேற்ற புடின் தான், இப்போதும் பதவியில் இருக்கிறாரா, என்பது தான். தற்போது அதிபராக இருக்கும் புடின் நிஜமா, 'டூப்'பா? என, சிலர் சந்தேகம் கிளப்புகின்றனர்.'அதிபர் புடின், பாதுகாப்பு காரணங்களால் தன்னை போல் உருவ ஒற்றுமை கொண்ட பலரை, 'செட்-அப்' செய்து பொது இடத்தில் உலவ விடுகிறார். உண்மையான புடின் யார் என்பதே குழப்பமாக இருக்கிறது' என பல தகவல்கள் வருகின்றன.


நிஜமானவரா நீங்கள்?


புடின் பதவியேற்று, 20 ஆண்டுகளான நிலையில், அவர் குறித்த மர்மங்களுக்கு விடை தேடிய, 'டாஸ்' செய்தி நிறுவனத்தினர், அவரிடமே சிறப்பு பேட்டி எடுத்தனர்.


latest tamil news





'நீங்கள் தான் நிஜ புடினா?


'ஆம்... நானே தான்.


சிக்கலான இடங்களில், 'டூப்' நபரை அனுப்பி வைப்பீர்களாமே?


அப்படி எதுவும் இல்லை. ஆனால், என்னை போன்ற உருவ ஒற்றுமை கொண்ட நபர்களை பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தும் யோசனை இருந்தது. குறிப்பாக, 1999-2000 ஆண்டில் செசன்யா, வடக்கு காக்கசஸ் பகுதியில் பிரிவினைவாதிகளுக்கு எதிராக நடந்த போரின்போது, ரஷ்யாவில் பல இடங்களில் தாக்குதல் நடந்தது. பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்த தருணங்களில், 'மாற்றான்'களை உருவாக்க, அதிகாரிகள் கூறிய யோசனையை நான் நிராகரித்து விட்டேன்.'ஆள் மாறாட்டம்' எதுவும் இல்லை என, புடின் மனம் திறந்து கூறினாலும், அவரை பொறுத்தவரை, ரஷ்ய வரலாற்றில் என்றும் ஒரு புதிர் தான்.

-நமது நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
01-மார்-202007:01:06 IST Report Abuse
Natarajan Ramanathan புதின் தனது காருக்கு பெட்ரோல் பங்கில் அவரே பெட்ரோல் நிரப்பும் காட்சி எல்லா ஊடகங்களிலும் வந்ததே. அது கண்டிப்பாக என்னைப்போல் ஒருவன் கதைதான்....
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
29-பிப்-202023:07:11 IST Report Abuse
Rpalnivelu //பிடல் காஸ்ட்ரோ வுக்கு பிறகு எனக்கு பிடித்த தலைவர் புடின்//. பிடல் காஸ்ட்ரோ வளமாக இருந்த கியூபாவை பிச்சைக்கார நாடாக்கியவர் இவரும் வாரிசு அரசியல் நடத்தியவர்தான் இவருடைய தம்பிதான் இன்றைய கியூபா அதிபர்
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
29-பிப்-202022:56:40 IST Report Abuse
Rpalnivelu புடின் டிரம்ப் மோடி போன்றோரை ஒழித்து கட்ட ஒரு தனிப்பட்ட நபர் கோடிக்கணக்கில் பணத்தை இறைக்கிறார் மேலும் விபரங்களுக்கு போன வார துக்ளக் இதழ் தலையங்கம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X