பொது செய்தி

இந்தியா

கன்னையா குமார் மீது தேசதுரோக வழக்கு: டில்லி அரசு ஒப்புதல்

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 29, 2020 | கருத்துகள் (77)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார், மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்ய டில்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது.latest tamil news


டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார், மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்ய டில்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2016 ம் ஆண்டு ஜேஎன்யு., வில் நடந்த போராட்டத்தின் போது தேசத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கன்னையா குமார் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் மீது தேச துரோக வழக்கு தொடர போலிசார் டில்லி அரசிடம், அனுமதி கேட்டனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், தற்போது டில்லி அரசு, கன்னையா குமார் மீது தேசதுரோக வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட உமர்காலித், அனிர்பன்பட்டாச்சார்யா, அகிப் உசேன், உமர் குல் ஆகியோர் மீது தேசதுரோக வழக்கு தொடரப்படும்.

கடந்த 2016 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேஎன்யு., வில் நடந்த போராட்டத்தின் போது தேசத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கன்னையா குமார் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் மீது தேச துரோக வழக்கு தொடர அனுமதி கேட்டு டில்லி அரசிடம், 2019 ஜன.,14, டில்லி போலீசின் சிறப்பு பிரிவினர் அனுமதி கேட்டிருந்தனர். இது நிலுவையில் இருந்தது. இதனையடுத்து, நினைவுட்டல் கடிதம் அனுப்பும்படி போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டது.


latest tamil news


இதனையடுத்து, டில்லி போலீசின் சிறப்பு பிரிவினர், கடந்த வாரம் கன்னையா குமார் மீது தேச துரோக வழக்கின் கீழ் வழக்கு தொடர அனுமதிக்கும்படி ஆம் ஆத்மி அரசுக்கு கடிதம் அனுப்பினர்.இதனை ஏற்று கொண்ட டில்லி அரசு, கன்னையா குமார் மீது தேசதுரோக வழக்கு தொடர அனுமதி வழங்கியுள்ளது. டில்லி அரசின் அனுமதியை தொடர்ந்து, இந்த போராட்டத்தில் பங்கேற்ற உமர்காலித், அனிர்பன்பட்டாச்சார்யா, அகிப் உசேன், உமர் குல் உள்ளிட்டோர் மீது தேசதுரோக வழக்கு தொடரப்படும்.
இது தொடர்பாக கன்னையா குமார் டுவிட்டரில், என் மீது வழக்கு தொடர அனுமதி அளித்த டில்லி அரசுக்கு நன்றி. இந்த வழக்கை தீவிரமாக எடுத்து கொண்டு, விரைவு நீதிமன்றத்தில் உடனடியாக விசாரணையை துவக்கும்படி போலீசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். இதன் மூலம் டிவியில் விவாதம் நடப்பதை தவிர்த்து, கோர்ட் மூலம் நீதி கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏ ராஜிவ் சதா கூறுகையில், இது வழக்கமான நடைமுறை. எந்த வழக்கிலும் தலையிடுவதை மாநில அரசு கொள்கையாக கொண்டிருக்கவில்லை என்றார்.
டில்லி பா.ஜ., தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில், தற்போதைய அரசியல் சூழ்நிலையை மனதில் கொண்டு, கன்னையா குமார் மீது வழக்கு தொடர கெஜ்ரிவால் அனுமதி வழங்கியுள்ளார். இந்த முடிவை வரவேற்கிறோம். இதனை தான் நாங்கள் நீண்ட காலம் கேட்டு வந்தோம். சட்டம் முடிவு செய்யட்டும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CSCSCS - CHENNAI,இந்தியா
01-மார்-202013:06:24 IST Report Abuse
CSCSCS இவனை பார்த்தால் படித்த மாணவனைப்போலவே இல்லையே. முட்டாளுக்கு தனது உரிமையைப்பற்றி பேசத்தெரித்த அளவுக்கு தேசப்பற்றும் கடமையும் தெரியாது போலும். இந்த மாதிரி தேச விரோத செயல்களுக்கு பாக்கிஸ்தான் அல்லது சீனாவில் கொடுக்கப்படும் அதே தண்டனை முறை பின் பற்றப்படவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Gandhi - Chennai,இந்தியா
01-மார்-202012:14:58 IST Report Abuse
Gandhi அமெரிக்கா ஜனாதிபதி வெளிநாட்டு மீடியாக்களுடன் டெல்லியில் இருக்கும் போது ஒண்ணுமில்லாத CAA வை வைத்து பெரிய கலவரத்தை உருவாக்கி 40 உயிரை பறித்து உலகம் முழுதும் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் இவர் போன்றவர்களின் துரோகத்தை விட பாகிஸ்தான் & பங்களாதேஷி தீவிரவாதிகள் செய்யும் அட்டூழியங்களை இந்தியா எளிதாக எதிர்கொள்கிறது .
Rate this:
Share this comment
Cancel
Jana - rajapalayam,இந்தியா
01-மார்-202011:07:28 IST Report Abuse
Jana அஹமட் ஆர் பாக்கிஸ்தான் பிரியும்போது மதசார்பின்மை என்று கூறி இஸ்லாமிய குடியரசு என்று மாற்றினார்கள் என்பதற்கு விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X