கன்னையா குமார் மீது தேசதுரோக வழக்கு: டில்லி அரசு ஒப்புதல்| AAP Government Gives Nod To Prosecute Kanhaiya Kumar In JNU Sedition Case | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கன்னையா குமார் மீது தேசதுரோக வழக்கு: டில்லி அரசு ஒப்புதல்

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 29, 2020 | கருத்துகள் (77)
Share
புதுடில்லி: டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார், மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்ய டில்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது.கடந்த 2016 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேஎன்யு., வில் நடந்த போராட்டத்தின் போது தேசத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கன்னையா குமார் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் மீது தேச துரோக வழக்கு தொடர அனுமதி

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார், மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்ய டில்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது.latest tamil news


கடந்த 2016 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேஎன்யு., வில் நடந்த போராட்டத்தின் போது தேசத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கன்னையா குமார் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் மீது தேச துரோக வழக்கு தொடர அனுமதி கேட்டு டில்லி அரசிடம், 2019 ஜன.,14, டில்லி போலீசின் சிறப்பு பிரிவினர் அனுமதி கேட்டிருந்தனர். இது நிலுவையில் இருந்தது. இதனையடுத்து, நினைவுட்டல் கடிதம் அனுப்பும்படி போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டது.


latest tamil news


இதனையடுத்து, டில்லி போலீசின் சிறப்பு பிரிவினர், கடந்த வாரம் கன்னையா குமார் மீது தேச துரோக வழக்கின் கீழ் வழக்கு தொடர அனுமதிக்கும்படி ஆம் ஆத்மி அரசுக்கு கடிதம் அனுப்பினர்.இதனை ஏற்று கொண்ட டில்லி அரசு, கன்னையா குமார் மீது தேசதுரோக வழக்கு தொடர அனுமதி வழங்கியுள்ளது. டில்லி அரசின் அனுமதியை தொடர்ந்து, இந்த போராட்டத்தில் பங்கேற்ற உமர்காலித், அனிர்பன்பட்டாச்சார்யா, அகிப் உசேன், உமர் குல் உள்ளிட்டோர் மீது தேசதுரோக வழக்கு தொடரப்படும்.
இது தொடர்பாக கன்னையா குமார் டுவிட்டரில், என் மீது வழக்கு தொடர அனுமதி அளித்த டில்லி அரசுக்கு நன்றி. இந்த வழக்கை தீவிரமாக எடுத்து கொண்டு, விரைவு நீதிமன்றத்தில் உடனடியாக விசாரணையை துவக்கும்படி போலீசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். இதன் மூலம் டிவியில் விவாதம் நடப்பதை தவிர்த்து, கோர்ட் மூலம் நீதி கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏ ராஜிவ் சதா கூறுகையில், இது வழக்கமான நடைமுறை. எந்த வழக்கிலும் தலையிடுவதை மாநில அரசு கொள்கையாக கொண்டிருக்கவில்லை என்றார்.
டில்லி பா.ஜ., தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில், தற்போதைய அரசியல் சூழ்நிலையை மனதில் கொண்டு, கன்னையா குமார் மீது வழக்கு தொடர கெஜ்ரிவால் அனுமதி வழங்கியுள்ளார். இந்த முடிவை வரவேற்கிறோம். இதனை தான் நாங்கள் நீண்ட காலம் கேட்டு வந்தோம். சட்டம் முடிவு செய்யட்டும் என்றார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X