கொரோனா இல்லை என நிரூபிக்க கோழிக்கறியை ருசித்த அமைச்சர்| On Stage, Telangana Ministers Eat Chicken To Dispel Coronavirus Fears | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனா இல்லை என நிரூபிக்க கோழிக்கறியை ருசித்த அமைச்சர்

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 29, 2020 | கருத்துகள் (26)
Share

இந்த செய்தியை கேட்க

ஐதராபாத்: கோழிக்கறி, முட்டை மூலம் கொரோனா வைரஸ் பரவும் என பரவிய வதந்தியை பொய் என நிரூபிக்க, தெலுங்கானா மாநில அமைச்சர்கள், பொது மேடையில் கோழிக்கறியை ரசித்து, ருசித்து சாப்பிட்டனர்.



latest tamil news


சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் மையமாக வைத்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. வூஹான் நகரில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து தான் கொரோனா பரவியதாக மனிதர்களுக்கு பரவியதாக சீனா கூறியுள்ளது. இந்த வைரசால், அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், தெலுங்கானாவில், கோழிக்கறி மற்றும் முட்டை மூலம் கரோனா பரவுவதாக வதந்தி கிளம்பி மாநிலம் முழுவதும் பரவியது. இதனையடுத்து, இந்த வதந்தி பொய் என நிரூபிப்பதற்காக ஐதராபாத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில், கே.டி.ராமராவ், எடீலா ராஜேந்தர், தலசனி ஸ்ரீநிவாஸ் யாதவ் மற்றும் சிலர் மேடையிலேயே கோழிக்கறி ருசித்து சாப்பிட்டனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X