பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினியை சந்தித்தது ஏன்?: ஹஜ் கமிட்டி தலைவர் விளக்கம்

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 29, 2020 | கருத்துகள் (101)
Share
Advertisement
rajini, rajinikanth, abubakkar, haj,Muslims, CAA, Nrc, ரஜினி, ரஜினிகாந்த், அபூபக்கர், ஹஜ்கமிட்டி, முஸ்லிம்கள், சிஏஏ, என்ஆர்சி,

இந்த செய்தியை கேட்க

சென்னை: சிஏஏ குறித்து, ரஜினி தெரிவித்த கருத்து, முஸ்லிம்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதற்கு நன்றி தெரிவிக்கவே அவரை சந்தித்தேன் என, தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினியை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் சந்தித்து பேசினார். அப்போது, சிஏஏ.,வால் பாதிப்பு ஏற்படும் என்று ரஜினியிடம் அபூபக்கர் விளக்கியதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் அபூபக்கர் நிருபர்களிடம் கூறுகையில், மரியாதை நிமித்தமாகவும், நன்றி தெரிவிக்கவே ரஜினியை சந்தித்தேன். பொது பிரச்னைகள், குடும்ப நலன் குறித்து விவாதித்தோம். அவர் எனது குடும்ப நண்பர். ரஜினிக்கு மத வேறுபாடு கிடையாது என்பது அனைவருக்கும் தெரியும். பல விஷயங்களை பரிமாறி கொண்டோம். முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தால், முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்றார். இது முஸ்லிம்கள் மனதில் அழுத்தமான நம்பிக்கையை கொடுத்தது. இதற்கு நன்றி தெரிவிக்கவும், டில்லி கலவரத்திற்காக குரல் கொடுத்ததற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் சந்தித்தேன். அரசியல் நோக்கம் இல்லை.

டில்லி வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம் என்றார் நடிகர் ரஜினி. அதே நேரம் சிஏஏ சட்டம் குறித்து விளக்குவதற்காக இஸ்லாமிய பிரதிநிதிகளை சந்திக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர், சனியன்று ரஜினியை சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அபுபக்கர், ரஜினி கூறிய கருத்துக்கள் இஸ்லாமியர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. சிஏஏ சட்டத்தை ஆதரிப்பதாக கூறிய ரஜினியின் கருத்தை உள்நோக்கத்துடன் பார்க்கக் கூடாது. மதக் கலவரம் ஏற்படாமல் தடுக்க வேண்டிய கடமை அனைவருக்குமே உண்டு என்றார்.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ரஜினிக்கு புரிய வைக்க வேண்டியது இல்லை. அனைத்தும் அவருக்கு தெரியும். சிஏஏ, என்ஆர்சி குறித்து படித்து வைத்துள்ளார். நமக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அளவுக்கு திறமை உள்ளது. இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஹிந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் எல்லாரும் ஒரே நாட்டு மக்கள். ஒரே தொப்புகள் கொடி உறவுகள். நமக்குள் பாகுபாடு கூடாது. பொருளாதாரத்தில், இந்தியா சிறப்பாக வர வேண்டும் என்பது தான் ரஜினியின் எண்ணமாக உள்ளது. எனது எண்ணமும் தான். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news
பாதுகாப்பு குறைப்பு

'துக்ளக்' விழாவில், முரசொலி, திக குறித்து நடிகர் ரஜினி தெரிவித்த கருத்து தொடர்பாக எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. ரஜினியை, நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர் திருநாவுக்கரசு சந்தித்து பேசினார். அப்போது, ரஜினியின் கோரிக்கையை ஏற்று, பாதுகாப்பை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பாதுகாப்பு பணியில் 5 போலீசார் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை 3 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
01-மார்-202015:05:05 IST Report Abuse
Cheran Perumal முஸ்லிம்களால் நடத்தப்பட்ட டில்லி கலவரம் இந்துக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. இது ரஜினிக்கு புரிந்தால் அவர் நடுநிலைவாதி. இல்லையென்றால் அவரும் மற்றொரு ஸ்டாலின்தான்.
Rate this:
Share this comment
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
01-மார்-202012:13:28 IST Report Abuse
ManiS Those who oppose why didnt they say the correct reason for it? Explain it in public. Dont say that some may happen. You are trying to fool ... people.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
01-மார்-202010:26:39 IST Report Abuse
mindum vasantham சுடலை இங்க இருக்குற இஸ்லாமியர் எல்லாம் சந்திக்க மாட்டார் ஒன்லி வங்கதேசம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X