பயங்கரவாதத்தின் மையம்: பாக்.,ஐ விமர்சித்து ஐ.நா., அலுவலகம் முன் போஸ்டர்

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 29, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஜெனிவா: '' சர்வதேச பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான் ராணுவம்'' என்ற போஸ்டரை, சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் முன்பு பாகிஸ்தானை சேர்ந்த சிறுபான்மையினர் வைத்துள்ளனர்.



latest tamil news



இது தொடர்பாக போஸ்டரை வைத்த சிறுபானமயினரின் பாதுகாப்பு தன்னார்வ அமைப்பு கூறுகையில், 9/11 தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்பகுதியாக பாகிஸ்தான் திகழ்ந்து வருகிறது. ஆப்கன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள, வடக்கு வஜீரிஸ்தான் பகுதி, உள்ளூர் மற்றும் அல்கொய்தா, தலிபான் உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக உள்ளது. சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் சட்டவிரோதமாக உதவி வருகிறது. இதனை கண்டித்தே, ஐ.நா., அலுவுலகம் முன்பு பேனர் வைத்து போராட்டம் நடத்தினோம். இந்த பகுதியிலும், மற்ற பகுதியிலும் பயங்கரவாத செயல்களுக்கு , பாகிஸ்தான் அரசு பங்களிப்பை அளிப்பதுடன், பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி செய்கிறது.


latest tamil news




பாகிஸ்தானில் முறைப்படுத்தப்படாத நிதி கட்டமைப்புகள் காரணமாக, பயங்கரவாத அமைப்புகளுக்கு தாராளமாக சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்படுகிறது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் ஒருங்கிணையவும், திட்டமிடவும், பணம் வசூல் செய்யவும் முடியும். இந்த பிரச்னையை சரியாக கையாள தெரியாத அரசு, நிர்வாகம், மற்றும் அரசியல் தலைவர்களே காரணம்.இந்த பிரச்னையை தீர்க்க பாகிஸ்தான் அரசும் விரும்பவில்லை. இதனால், ஐ.நா., பாகிஸ்தானை அழைத்து, தனது மண்ணில் சட்ட விரோத செயல் தொடர்வதை நிறுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gandhi - Chennai,இந்தியா
01-மார்-202012:10:19 IST Report Abuse
Gandhi அமெரிக்கா ஜனாதிபதி வெளிநாட்டு மீடியாக்களுடன் டெல்லியில் இருக்கும் போது ஒண்ணுமில்லாத CAA வை வைத்து பெரிய கலவரத்தை உருவாக்கி 40 உயிரை பறித்து உலகம் முழுதும் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ் AAP கட்சிகளின் துரோகத்தை விட பாகிஸ்தான் & பங்களாதேஷி தீவிரவாதிகள் செய்யும் அட்டூழியங்களை இந்தியா எளிதாக எதிர்கொள்கிறது .
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
01-மார்-202007:40:14 IST Report Abuse
ஆரூர் ரங் பயங்கரவாதத்தின் மையம்: மூர்க்க மார்க்கம் தான்னு நேரடியா எழுதியிருக்கலாம்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
01-மார்-202006:38:38 IST Report Abuse
blocked user பாகிஸ்தான் சிறுபான்மையினர் சிறப்பாக செய்து இருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட அழுத்தம் கொடுத்தாலும் பாகிஸ்தான் அரசே தீவிரவாத ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து மாறாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X