இந்திய பெண்கள் 4வது வெற்றி: 'டுவென்டி-20' உலக தொடரில் அபாரம்

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 29, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
T20WorldCup,INDvSL, டுவென்டி-20, கிரிக்கெட், இந்தியா, இலங்கை,

இந்த செய்தியை கேட்க


மெல்போர்ன் : பெண்கள் 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்தது. கடைசி லீக் போட்டியில் இலங்கையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. நேற்று தனது கடைசி லீக் போட்டியில் இலங்கையை சந்தித்தது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.


ராதா கலக்கல்


இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி, திமாஷினி (2) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. மாதவி (12) ஏமாற்ற, சமாரி அதிகபட்சம் 33 ரன் எடுத்தார். ஹன்சிமா, ஹாசினி தலா 7 ரன் எடுத்தனர். ஷஷிகலா (13), நிலாக்சி (8) கைவிட்டனர். இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 113 ரன் எடுத்தது. இந்திய சுழல் வீராங்கனை ராதா, 4 விக்கெட் சாய்த்தார்.


latest tamil news



ஷபாலி மிரட்டல்


எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஜோடி துவக்கம் தந்தது. மந்தனா (17) மீண்டும் ஏமாற்றினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 15 ரன் மட்டும் எடுத்தார். ஷபாலி வர்மா பவுண்டரி மழை பொழிந்தார். ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட ஜெமிமாவினால், ஷபாலி (47) ரன் அவுட்டாக, அரைசத வாய்ப்பை இழந்தார். அடுத்து இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஜோடி அவுட்டாகாமல் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றது. இந்திய அணி 14.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஏற்கனவே ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா, தற்போது தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்தது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
swega - Dindigul,இந்தியா
29-பிப்-202019:08:13 IST Report Abuse
swega சூப்பர்
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
29-பிப்-202015:33:36 IST Report Abuse
siriyaar கொத்தடிமை இன்று செத்த அடிமை ஆனது.
Rate this:
Share this comment
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
29-பிப்-202013:49:01 IST Report Abuse
Rengaraj இன்னும் ரெண்டு போட்டி தான் அசத்துங்க இளம் பெண் சிங்கங்களே நம் நாட்டு மக்கள் அனைவரும் உங்கள் பக்கம் தான் நீங்கள் வெற்றி பெற அனைவரும் பக்க பலமாக இருக்கிறார்கள். உலக கோப்பை உங்களுக்குத்தான் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதுங்கள். உங்கள் வெற்றியை எதிர்பார்த்து உங்கள் சகோதரர்கள் நாங்கள் இருக்கிறோம் ஒரு சரித்திரம் படைப்பீர்கள் என்று இந்த நாடே நம்பிக்கையுடன் காத்துகொண்டு இருக்கிறது.விட்டு விடாதீர்கள். வெற்றி தொட்டுவிடும் தூரம் தான். வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X