சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'ராகுலை விட்டா வேறு யாரும் இல்லையோ?'

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
'ராகுலை விட்டா  வேறு யாரும் இல்லையோ?'

காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர், திருச்சி வந்தார். அப்போது, நிருபர்களிடம் அவர், 'குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை மொழி, மதம், ஜாதி, இனம்
ரீதியாக பார்க்காமல், நாட்டின் பிரச்னையாக கருத வேண்டும்.

'தடியடி, துப்பாக்கிச் சூடு, கைது நடவடிக்கை வாயிலாக, எந்தப் போராட்டத்தையும், எந்த அரசும் தடுக்க முடியாது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை, எந்த அரசியல் கட்சியும் துாண்டி விடவில்லை. தாங்கள் பாதிக்கப்படுவதாக உணர்வதால் தான், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் தலைவராக மீண்டும், ராகுல் விரைவில் பொறுப்பேற்பார் என, நம்புகிறேன்' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'ராகுலை விட்டா, காங்கிரசுல வேறு யாரும் கிடையாதுன்னு சொல்றாரு... தலைமைப் பதவியை அடைய, தனக்கும் தகுதி இல்லைன்னு நினைக்கிறாரோ...' எனக் கிண்டலடிக்க, மற்றவர்கள், 'ஆமாமாம்...' என, முணுமுணுத்தனர்.

'விந்தியாவும் முதல்வர் கனவு காண்கிறாரோ!'

ஜெயலலிதாவின், 72வது பிறந்த நாளையொட்டி, சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், ஆட்டையாம்பட்டியில் பொதுக்கூட்டம் நடந்தது.

நடிகை விந்தியா, 'மறைந்த, முன்னாள் முதல்வர்கள், எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை உருவாக்கியது, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். வேளாண் துறையில் சிறந்து விளங்கும், சேலம் மாவட்ட விவசாயி, இ.பி.எஸ்., தற்போது முதல்வராக உள்ளார்.

'தமிழகத்தில், ஐந்து முதல்வர்களை கொடுத்த மாவட்டம், சேலம் என்பதில் பெருமை கொள்ள வேண்டும். தி.மு.க.,வில், மாவட்டம் முதல், மாநிலத் தலைவர் வரை, வாரிசுகள் தான், பதவிக்கு வர முடியும். அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டர் கூட, முதல்வராக முடியும் என்பதற்கு, முதல்வர், இ.பி.எஸ்., சாட்சி' என்றார்.

அ.தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர், 'இங்கே பொதுக் கூட்டத்தில் பேசினா, தானும் முதல்வராகலாம்ங்கிற ஆசை, விந்தியாவுக்கு, இந்நேரம் வந்திருக்குமோ...' எனக் கூறிச் சிரிக்க, மற்றவர்களும் ஆமோதிப்பது போல் சிரித்தனர்.

'தைரியம் தான் பிரேமலதாவுக்கு!'

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டியில், நிர்வாகி இல்ல திருமண விழாவில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பங்கேற்றார். அப்போது, நிருபர்களிடம் அவர், 'ராஜ்யசபா எம்.பி., 'சீட்' குறித்து, ஏற்கனவே, அ.தி.மு.க.,வுடன் பேசி இருக்கிறோம். அதன்படி, எங்களுக்கு நிச்சயம் சீட் தருவர் என்ற நம்பிக்கை உள்ளது. நகராட்சி, மாநகராட்சி தேர்தலில், விஜயகாந்த் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார். மாநகராட்சி தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து தான் போட்டியிடுவோம்.'குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து, பெரும்பாலான மக்களுக்கு தெரியவில்லை. ஆனால், எதிர்க்கட்சியினர், சி.ஏ.ஏ., சட்டத்தை அரசியலாக்கி, மதம் மற்றும் மொழி வாரியாக துாண்டி விடுகின்றனர். தமிழகத்தில், 2021ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'எவ்வளவு தோல்வியைச் சந்திச்சாலும், மனம் தளராம பேசுறாங்களே... தைரியம் தான்...' எனக் கூற, மற்றவர்கள் ஆமோதித்தனர்.

.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
01-மார்-202018:15:24 IST Report Abuse
Anantharaman Srinivasan ராஜ்யசபா சீட் கிடைக்க வாய்ப்பில்லை என்றாலும் ஏமாற்றத்தை காட்டிக்கொள்ளாமல் பிரேமலதா சமாளிக்கிறார். கூடிய சீக்கிரம் ரஜினிவிடு தூது நடைபெறும். ராமதாஸ் முட்டுக்கட்டை போடுவார்..
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-மார்-202006:20:22 IST Report Abuse
D.Ambujavalli எடப்பாடியார் தொண்டராக இருந்து முதல்வராக ஆனதுபோல், இன்னொரு ‘கூவத்தூருக்கு’ இவர் ஸ்பான்சர் செய்யும் வாய்ப்பு வரவேண்டுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X