பொது செய்தி

இந்தியா

சபதம்: அனைவருக்கும் நீதி கிடைக்க பிரதமர் மோடி உறுதி

Updated : மார் 02, 2020 | Added : பிப் 29, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
PMModi, NarendraModi, attack, Congress, சபதம், நீதி,பிரதமர் மோடி, உறுதி, அரசு,

பிரயாக்ராஜ்: ''நாட்டில் உள்ள அனைத்து குடிமகன்களுக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதே, அரசின் முக்கிய கடமை. அனைவருக்குமான அரசு, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவருக்குமான நம்பிக்கை ஆகியவையே, இதன் அடிப்படை,'' என, பிரதமர் மோடி பேசினார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரயாக்ராஜில், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான நல திட்ட உதவிகளை வழங்குவதற்கும், புதிய திட்டங்களை துவக்கி வைப்பதற்கும் பிரதமர் மோடி நேற்று வந்தார். நல திட்ட உதவிகளை வழங்கிய பின், பிரதமர் பேசியதாவது:

நாட்டை ஆளும் அரசுக்கு, பல முக்கிய, கடமைகள் உள்ளன. ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதே, அரசின் முக்கிய கடமை. அனைவருக்குமான அரசு, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரது மீதான நம்பிக்கை ஆகியவையே, இதன் அடிப்படை அம்சங்கள். நாட்டில் உள்ள, 130 கோடி மக்களுக்கும் சேவை செய்வதையே, மத்திய அரசு, முக்கிய கடமையாக கருகிறது.

உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்கும் சேவை செய்வதுதான் அரசின் முதல் கடமை. இதற்கு முன் இருந்த அரசு மாற்றுத்திறனாளி மக்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றார்.

எங்களுக்கு முன், மத்தியில் இருந்த அரசுகள், மாற்றுத் திறனாளிகள் நலனில் அக்கறையுடன் செயல்பட்டது இல்லை.ஆனால், மாற்றுத் திறனாளிகளின் பிரச்னைகளை அறிந்து, அவற்றுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை, பா.ஜ., தலைமையிலான அரசு செய்து வருகிறது.


9,000 முகாம்கள்

முந்தைய அரசுகள், மாற்றுத் திறனாளிகளுக்காக, ஒரு சில முகாம்களை அமைத்தன. ஆனால், பா.ஜ., அரசு, கடந்த ஐந்தாண்டுகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில், 9,000 முகாம்களை அமைத்துள்ளது. முந்தைய அரசு, மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களுக்காக, 380 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்தது. ஆனால், பா.ஜ., அரசு, 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை மாற்றுத் திறனாளிகளுக்காக அளித்துள்ளது.

இந்த உபகரணங்கள், மாற்றுத் திறனாளிகளின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருக்கும். பொறுமை, திறமை, மதிநுட்பம் ஆகியவை தான், மாற்றுத் திறனாளிகளின் உண்மையான பலம். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதும், முகாம்களை அமைப்பதும், எதிர்காலத்தில் பல சாதனைகளுக்கு வழி வகுக்கும்.

கடந்த ஐந்தாண்டுகளில், நாட்டில் உள்ள பல்வேறு தெருக்கள், 700 ரயில்வே ஸ்டேஷன்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றில், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப் பட்டு உள்ளன. மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், பா.ஜ., அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதன் மூலம், அவர்களுக்கு கிடைக்கும் பலன்களின் அளவு அதிகரித்துள்ளது.


5 சதவீதம்

உயர் கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு, 3லிருந்து, 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் நலனுக்காகவும், பா.ஜ., அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கு முன், மருத்துவத்துக்காக முதியோர் செலவிடும் தொகை, மிகவும் அதிகமாக இருந்தது. தற்போது அந்த தொகை, கணிசமாக குறைந்துள்ளது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கை தான், இதற்கு காரணம். இவ்வாறு, அவர் பேசினார்.


நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல்

உத்தர பிரதேசத்தில், பண்டல்கண்ட் அதிவிரைவு நெடுஞ்சாலை திட்டத்துக்கு, பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். 14 ஆயிரத்து, 849 கோடி ரூபாய் செலவில், இந்த திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. சித்ரகூட், பாண்டா, ஹமீர்பூர், ஜலாவுன் ஆகிய மாவட்டங்கள் வழியாக, இந்த சாலை அமைக்கப்படவுள்ளது.

முன்னாள் பிரதமர், மறைந்த மொரார்ஜி தேசாயின், 124வது பிறந்த நாளையொட்டி, அவருக்கு, பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். நாட்டுக்காக அவர் ஆற்றிய பணிகளையும், அவர் நினைவு படுத்திஉள்ளார்.


முஜிபுர் ரகுமான் நுாற்றாண்டு விழாசிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி

வங்கதேசத்தில் நடைபெற உள்ள, அந்நாட்டின் நிறுவனர் ஷேக் முஜிபுர் ரகுமானின் நுாற்றண்டு பிறந்தநாள் விழாவில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். இது குறித்து, பிரிட்டனுக்கான வங்கதேச துாதர் சைதா முனா தஸ்னீம் கூறியதாவது:'வங்கதேச தந்தை' என போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரகுமான் நுாற்றாண்டு பிறந்தநாள் விழா, வரும், 17ம் தேதி டாக்காவில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். வங்கதேச விடுதலைக்கு, இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. பாகிஸ்தானில், கராச்சி சிறையில் இருந்து முஜிபுர் ரகுமானை விடுவிக்க, இந்தியாவின் அப்போதைய பிரதமர், மறைந்த இந்திரா, பிரிட்டன் பிரதமர் எட்வர்ட் ஹீத் ஆகியோர் பெருமுயற்சி மேற்கொண்டனர். அதனால், ஓராண்டு முழுவதும் கொண்டாட உள்ள, முஜிபுர் ரகுமான் நுாற்றாண்டு விழாவின் துவக்க நிகழ்ச்சியில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது சாலப் பொருத்தமானது.

'குடியுரிமைத் திருத்தச் சட்டம், இந்தியாவின் உள் விவகாரம்' என, வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில், சிறுபான்மையினரான ஹிந்துக்கள், கணித அறிவாற்றல் காரணமாக, நிதித் துறையில் சிறப்பான நிலையில் உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
01-மார்-202015:40:56 IST Report Abuse
spr முதலில் நிர்பயா வழக்கில் நீதி கிடைக்குமா சொல்லுங்கள் ஒரு வழக்கிலேயே நீதிமன்றம் ஆடிப்போய் விட்டது. சட்டத்தில் உள்ள ஓட்டைகள், சிறைத்துறை அலுவலகம் நீதிமன்ற தீர்ப்பை மதித்து தண்டனையை நிறைவேற்றவில்லை. வழக்கறிஞர்கள் மாறி மாறி தீர்ப்பை நிறைவேற்ற முடியாமல் தடுக்கிறார்கள். நீதிபதிகளின் முந்தைய தவறான தீர்ப்பே அவர்களைக் கட்டிப் போட்டிருக்கிறது அரசும் வேடிக்கை பார்க்கிறது ஊடகங்கள், செய்தித்தாள்கள் பெண்ணீயப் போராளிகள் எதிரிக்கட்சிகள் என எவருமே வாய் திறக்கவில்லை இதில் இப்படியொரு வாக்குறுதி வெட்கமாக இல்லை
Rate this:
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
01-மார்-202013:55:05 IST Report Abuse
Ashanmugam அனைவருக்கும் " ..." கிடைக்காவிட்டாலும், நீதி கிடைத்தால் போதும். தர்மம் தழைத்தோங்கும். அதர்மம் அழியும்.
Rate this:
Cancel
01-மார்-202008:08:29 IST Report Abuse
ஆப்பு நீதிபதிகளுக்கே நீதி கிடைக்குதான்னு டவுட் வருதே தனபாலு...
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
01-மார்-202011:01:36 IST Report Abuse
Malick Rajaஆப்பு .. உங்களுக்கு தெரியும் ஒரு ஆள் ஒரு பெண்ணை திருமணம் செய்துவிட்டு அதை வாழவும் வைக்கவில்லை ..விவாகரத்தும் செய்யவில்லை .. அப்படிப்பட்டவர் நீதியை வழங்கமுடியுமா? ஆனால் நம் பிரதமரோ நீதியை ரயில்வே பிளாட்பாரத்தில் டீ தூக்கி.. சாய் ..சாய் .கரம் சாய் ..என்று கூவி படித்து சட்டத்தை கரைத்துக்குடித்தவர் அல்லவா.. அவரே சொல்வார் நான் ஒரு ஏழை தாயின் மகன் ..பிளாட்பாரத்தில் தேநீர் விற்றேன் என்று .. ஆனால் அவரிடம் அரசியல் அறிவியல் முதுகலை பட்டம் இருக்கிறது .....
Rate this:
Abdul Rahman - Madurai,இந்தியா
01-மார்-202013:56:27 IST Report Abuse
Abdul Rahmanஉன் போன்ற துரோகிகளால் தான் இஸ்லாமியர்களுக்கு உலகெங்கும் அவமரியாதை. ஒரு மாபெரும் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் , சூ வை கழட்டி செக் பன்றன். நீ எல்லாம் எப்போ தான் திருந்துவியோ....
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
01-மார்-202019:24:25 IST Report Abuse
Malick Rajaஉள்ளதை சொன்னா உனக்கு ஏன் பித்துபிடிக்கிறது .. குஜராத்தில் ஒரு அம்மையார் தனது கணவனால் கைவிடப்படாமலும் ,கைவிட்டும் ..இருக்கிறாரே அவரது கணவர் முதலில் அவருக்கு நீதி வழங்கிவிட்டு நாட்டுக்கு நீதி வழங்குவதுதான் நியாயம் .. நியாயமாக இருக்க தவறியவர் நீதியை எப்படி வழங்க முடியும் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X