யுனெஸ்கோ தர அந்தஸ்திற்கு கீழடி உயரும்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'யுனெஸ்கோ' தர அந்தஸ்திற்கு கீழடி உயரும்

Added : பிப் 29, 2020
Share

சிவகங்கை : கீழடியை 'யுனெஸ்கோ' தர அந்தஸ்திற்கு உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்,'' என சிவகங்கையில் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: கீழடியில் மிகப்பெரிய தொழில்பூங்கா அமைய உள்ளது. அங்கு அருங்காட்சியகம் கட்ட 2 ஏக்கர் நிலம் அரசு ஒதுக்கிவிட்டது. ரூ.12.5 கோடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கட்டி, 14 ஆயிரம் அகழாய்வு பொருட்களை காட்சிபடுத்த உள்ளோம். கீழடியை பார்த்து தான் மத்திய அரசே ஆதிச்சநல்லுார் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அகழாய்வு பணியை நடத்த முன்வந்துள்ளது. இங்கு 8 வது அகழாய்வு பணி தமிழக அரசால் மேற்கொள்ளப்படும். கீழடி தொழிற்சார்ந்த நாகரீகம் என அறிந்துள்ளோம்.

ஆதிச்சநல்லுார் முதுமக்கள் தாழி உள்ள அகழாய்வு இடம். தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லுார் உள்ளிட்ட 3 முக்கிய அகழாய்வு தளம் அமைந்துள்ளன. மாநில அரசு 40, மத்திய அரசு 65 அகழாய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது.ஆதிச்சநல்லுார் அகழாய்வு ஆவணங்கள் மத்திய அரசிடம் உள்ளது. இதை மத்திய அரசே வெளியிட வேண்டும் என விரும்புகிறோம். உலக தமிழர்கள் வந்து தரிசிக்கும் புண்ணிய தலமாக கீழடி அருங்காட்சியகம் விளங்க உள்ளது. கீழடியில் 6 வது கட்ட அகழாய்வு 8 மாதங்கள் நடைபெற உள்ளது.

தமிழக அரசை பொருத்தமட்டில் கீழடியை யுனெஸ்கோ' தர அந்தஸ்திற்கு உயர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளது, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X