அமித் ஷாவிற்கு பின்னடைவு?

Updated : மார் 01, 2020 | Added : மார் 01, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
டில்லியில் நடைபெற்ற கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை, 42ஐ தொட்டுள்ளது; 200க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அமெரிக்க அதிபர் டிரம்ப் டில்லியில் இருக்கும் போது இந்தக் கலவரம் நடந்தது, மத்திய உள்துறை அமைச்சகத்தை பெரும் தர்மச்சங்கடத்தில் தள்ளியிருக்கிறது.டில்லி போலீஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரத்தின் கீழ் வருகிறது.
delhiush, amitshah, ajitdoval, delhiviolence, BJP, homeminister, HMamitshah, nsa, nsadoval, congress, cong, alagiri, tncongchief, rajini, rajinikanth, polticalparty, abinandhan, iaf, indianairforce, இந்தியவிமானப்படை, அபிநந்தன், அரசியல்கட்சி, ரஜினி, ரஜினிகாந்த், அழகிரி, தமிழககாங்தலைவர்அழகிரி, காங்கிரஸ், காங், டில்லிகலவரம், உள்துறைஅமைச்சர், அமித்ஷா, தேசியபாதுகாப்புஆலோசகர், தோவல், அஜித்தோவல், டில்லி உஷ்,

டில்லியில் நடைபெற்ற கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை, 42ஐ தொட்டுள்ளது; 200க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அமெரிக்க அதிபர் டிரம்ப் டில்லியில் இருக்கும் போது இந்தக் கலவரம் நடந்தது, மத்திய உள்துறை அமைச்சகத்தை பெரும் தர்மச்சங்கடத்தில் தள்ளியிருக்கிறது.டில்லி போலீஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரத்தின் கீழ் வருகிறது. அப்படியிருக்கையில், இந்த கலவரத்தில், டில்லி போலீஸ் ஏன் முறையாக செயல்படவில்லை என கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இந்நிலையில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சமீபத்தில், கலவரம் நடந்த பகுதிகளுக்கு நேரில் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார். இது. 'டிவி'க்களில், 'லைவ்' ஆக காட்டப்பட்டது.'உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த விஷயத்தில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஏன் தலையிடுகிறார்... இவருடைய வேலை, தெருக்களில் சுற்றுவது கிடையாதே...பாதுகாப்பு தொடர்பாக திட்டங்களைத் தீட்டி, அவற்றை அமல்படுத்துபவருக்கு, இங்கே என்ன வேலை' என, மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுந்தது.

'கலவரப் பகுதிகளைப் பார்வையிட்டு, எனக்கு தகவல் தெரிவியுங்கள்' என, பிரதமர் மோடி தோவலிடம் சொன்னதால் தான், அவர் அங்கு சென்றார் என, சொல்லப்படுகிறது. கடந்த ஆகஸ்டில், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அங்கு பிரச்னை ஏற்பட்ட போதும், இதே போல காஷ்மீர் தெருக்களில் சென்று மக்களைச் சந்தித்தவர் தோவல்.

முந்தைய பா.ஜ., ஆட்சியில் ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக இருந்தாலும், தோவல் தான் போலீஸ் விவகாரங்களில் அதிகாரம் செலுத்தி வந்தார். இப்போதைய பா.ஜ., ஆட்சியில் அமித் ஷா உள்துறை அமைச்சரானதும், தோவல் இந்தப் பக்கம் வருவதில்லை. அமித் ஷாவிற்கும், இவருக்கும் ஆகாது என, அதிகாரிகள் சொல்கின்றனர்.

மத்திய கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் உள்ள தோவலை, பிரதமர் மோடி, கலவர பகுதிகளை பார்வையிட்டு, சர்வே செய்ய அனுப்பியதால், மோடிக்கும், அமித் ஷாவிற்கும் இடையே உறவு சரியில்லை என, அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.


ரஜினி கட்சி ஆணையத்தில் பதிவாகிறதா?

இதோ, அதோ என சொல்லிக் கொண்டே வந்த ரஜினி, ஒருவழியாக கட்சி ஆரம்பிக்கப் போகிறார். இதற்கான ஆயத்தங்களில் ரஜினி இறங்கிவிட்டார். புதுக்கட்சி துவக்கினால், அதன் பெயர், கொடி, கொள்கைகள், விதிமுறைகள் என அனைத்தையும், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.இதற்கு ஆலோசனை பெற, ரஜினி ஆதரவாளர்கள் சிலர், சமீபத்தில் டில்லி வந்திருந்தனர். இவர்கள் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களைச் சந்தித்து தேவையான ஆவணங்கள் குறித்து கேட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஒரு வழக்கறிஞர் மூலமாக, முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவரை, ரஜினி தொடர்பு கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவரும்,புதுக்கட்சி துவங்குவது குறித்து, ரஜினிக்கு சில ஆலோசனைகளை வழங்கிஉள்ளாராம்.இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, அநேகமாக தமிழ்ப் புத்தாண்டில் ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


பதவியில் தப்புவாரா அழகிரி?


தமிழக காங்கிரஸ் என்றாலே கோஷ்டி பூசல் தான். மாநில தலைவராக ஒருவர் நியமிக்கப்படுவதற்கு முன்பாகவே, அவருக்கு எதிராக, ஆளாளுக்கு டில்லிக்கு புகார் அனுப்பிய வண்ணம் இருப்பர்.

தமிழக காங்., தலைவராக அழகிரி நியமிக்கப்பட்ட பின், புகார்கள் குறைந்து அமைதி நிலவியது. ஆனால் தற்போது நிலைமை மோசம் என, டில்லி காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அழகிரிக்கு எதிராக, தினமும், கடிதங்கள், மெயில், வாட்ஸ்ஆப் மூலமாக புகார்கள் வருகிறதாம். இந்த லிஸ்டில், சில, 'வீடியோ'க்களும் உள்ளதாம். தமிழக இளைஞர் காங்கிரசுக்கான பதவி உட்பட சில பதவிகளுக்கு, அழகிரி, சிலரை சிபாரிசு செய்து டில்லிக்கு அனுப்பியுள்ளார். இதற்கு எதிராகத் தான் தமிழக காங்கிரசார், டில்லிக்கு புகார் அனுப்பி வருகின்றனர். காங்கிரஸ்காரர்கள் ஒரு பக்கம் என்றால், தி.மு.க.,வினரும், அழகிரி மீது புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அழகிரி சிபாரிசு செய்துள்ளவருக்கு, அந்தப் பதவிகள் கிடைக்காது என, டில்லி தலைவர்கள் சொல்கின்றனர். ஏற்கனவே, காங்கிரஸ் நொந்து நுாலாக இருக்கும் நிலையில், அழகிரிக்கு எதிரான புகார்களால், சீனியர் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் இடையே கருத்து வேறுபாடும் ஏற்பட்டுள்ளதாம்.


இளைஞர்களைத் தயார் செய்யும் அபிநந்தன்

தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்திய விமானப் படையின், 'விங் கமாண்டரு'மான அபிநந்தன் வர்த்தமானை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில், நம் ராணுவத்தின் பாலகோட் தாக்குதலையடுத்து, இந்தியாவில் அத்து மீறி நுழைந்த பாக்., போர் விமானங்களைத் துரத்திச் சென்று வீழ்த்தியவர் அபினந்தன். இதில், பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார். இவருக்கு இந்திய அரசு, 'வீர் சக்ர' விருதை வழங்கி கவுரவித்தது.தற்போது, 'வெஸ்டர்ன் கமாண்டில்' முழு நேர போர் விமான பைலட் ஆக பணியாற்றி வரும் அபிநந்தன், விரைவில், 'குரூப் கேப்டன்' பதவி உயர்வு பெற உள்ளார்.

போர் விமானங்களை எப்படி கையாள வேண்டும், எதிரிகளை எதிர் கொள்வது எப்படி என, தன் பாலகோட் அனுபவத்தை வைத்து, இந்திய விமானப்படையின் இளம் பைலட்களுக்கு, அவர் தீவிர பயிற்சி அளித்து வருகிறார். இவருடன் பறக்கும் இளம் பைலட்கள், ஏக சந்தோஷத்தில் இருக்கின்றனர். 'இந்திய ஹீரோ ஒருவருடன் நாங்கள் பறந்து கொண்டிருக்கிறோம். அவருடைய அனுபவங்கள் தான் எங்களுக்கு மிகப் பெரிய பலம்' என, அவரை புகழ்ந்து தள்ளுகின்றனர், இந்த இளம் பைலட்கள்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-மார்-202023:40:26 IST Report Abuse
Ramesh R சின்ன பின்னடைவு அல்ல - பெரும் பின்னடைவு
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
04-மார்-202013:58:07 IST Report Abuse
Sridhar நிலைமையை பார்க்கும்போது இனக்கலவரதாயும் மீறி உளவுத்துறை அதிகாரி கொல்லப்படுதல், போலீஸ் உயர் அதிகாரி மீது தாக்குதல் போன்றவை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனும் வகையில் பார்க்கப்படுவதால், டோவலின் ஈடுபாடு அவசியமாகிறது. மேலும் பிஜேபியில் பெரும்பாலோர் கொள்கைப் பிடிப்புடன் தலைமைக்கு கட்டுப்பட்டு செயலாற்றக் கூடியவர்கள். வேறு கட்சிகள் மாதிரி மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர்கள் அல்ல.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
03-மார்-202018:14:21 IST Report Abuse
RajanRajan இந்த டில்லி கலவரம் பாக்கிஸ்தான் கைக்கூலிகள் சார்ந்த எதிரிக்கட்சிகளால் ட்ரம்ப் இந்திய வருகையை சாதகமாக்கி குழப்பத்தை உருவாக்க பட்டது . இதனால் அமித்ஷாவுக்கோ மோடிக்கோ அஜீத்துக்கோ எந்த பின்னடைவோ நிச்சயமாக இல்லை. ஆனால் எதிர்க்கட்சி அரசியல் சார்ந்த கலவரக்காரர்கள் முகத்திரையை கிழித்தெடுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது. இன்றும் மோடி CAA அமல் படுத்துவதில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என தெளிவாக கூறியுள்ளதை நினைவு கூரவேண்டும். இங்குள்ள கிசுகிசுக்கள் அத்தனையும் மக்களால் புறக்கணிக்க படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X