பொது செய்தி

தமிழ்நாடு

எங்கே செல்லும் இந்த பாதை: சங்கடம் தரும் சர்ச்சை சினிமாக்கள்

Updated : மார் 01, 2020 | Added : மார் 01, 2020 | கருத்துகள் (72)
Share
Advertisement
சென்னை: கருத்து சுதந்திரம்என்ற பெயரில் ஜாதி மோதலை உருவாக்கும் வகையில் திரைப்படங்கள் தயாரிப்பது வீண் பிரச்னையை கிளப்பத் துவங்கியுள்ளது.தமிழ் சினிமாவில் சமீப காலமாக கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சர்ச்சையான படங்களை இயக்குவதிலும் தயாரிப்பதிலும் சிலர் ஆர்வம் காட்டுகின்றனர்.சர்ச்சை குறிப்பிட்ட ஜாதி பற்றி பேசுவதாக சொல்லப்படும் கர்ணன் என்ற படத்தில்
பாதை, சங்கடம், சர்ச்சை, சினிமாக்கள், கர்ணன், திரெளபதி, தலைவி, அதிமுக, திரையுலகம்,

சென்னை: கருத்து சுதந்திரம்என்ற பெயரில் ஜாதி மோதலை உருவாக்கும் வகையில் திரைப்படங்கள் தயாரிப்பது வீண் பிரச்னையை கிளப்பத் துவங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் சமீப காலமாக கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சர்ச்சையான படங்களை இயக்குவதிலும் தயாரிப்பதிலும் சிலர் ஆர்வம் காட்டுகின்றனர்.


சர்ச்சை


latest tamil news


குறிப்பிட்ட ஜாதி பற்றி பேசுவதாக சொல்லப்படும் கர்ணன் என்ற படத்தில் தனுஷ் நடித்துள்ளார். தாணு தயாரிக்கும் இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு சிலஜாதி அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'இப்படம் வெளியானால் தென் மாவட்டத்தில் கலவரம் வெடிக்கும்' என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.'பழைய சம்பவத்தை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டும்போது தேவையற்ற சர்ச்சை உருவாகும்' என்கின்றனர். படத்திற்கு எதிர்ப்பு இருந்தாலும் இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதற்கு முன் மாரி செல்வராஜ் இயக்கிய 'பரியேறும் பெருமாள்' படம் பலரது பாராட்டையும் வரவேற்பையும் பெற்றாலும் சில வரம்பு மீறிய காட்சிகளுக்கு கண்டனமும் கிடைத்தது.


எதிர்ப்பு


latest tamil news


அதேபோல 1955ம் ஆண்டு எழுதப்பட்ட ஹிந்து திருமணச் சட்டம் குறித்து பேசியுள்ள திரெளபதி படத்தை மோகன் இயக்கியுள்ளார். இப்படம் ெவளியாகி உள்ளது. இதில் வட மாவட்ட மக்களின் வாழ்வியலை கதைக் களமாக வைத்து உள்ளனர். படத்தின் 'டிரெய்லர்' வெளியானதில் இருந்தே எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.'இப்படத்திற்கு மூட நம்பிக்கையை எதிர்ப்பவர்களிடம் இருந்து பிரச்னை வர வாய்ப்பு உள்ளது'என இயக்குனர் கூறியுள்ளார்.


latest tamil news


விஜய் இயக்கியுள்ள தலைவிபடத்திலும் ஜெயலலிதா சோபன்பாபு குறித்த சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை விட சினிமா தொடர்பான காட்சிகள் இதில் அதிகம் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. இப்படம் வெளியாகும்போது அ.தி.மு.க.வினர் கொந்தளிக்க வாய்ப்பு உள்ளது.

சர்ச்சை படங்கள் குறித்து தமிழ் திரையுலகினர் கூறியதாவது: தங்களை பற்றி பெரிதாக பேச வேண்டும்;ஒரே நாளில் 'டிரெண்டிங்' ஆக இதுபோன்ற படங்களை இயக்குகின்றனர். உண்மை. கமல் உள்ளிட்டோர் தொடங்கி வைத்த இப்பயணம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக மக்களை பாதிக்கும் படங்களை எடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும். மக்களை மகிழ்விப்பதற்காகவே சினிமா. உண்மை சம்பவம் என்றபெயரில் வரலாற்றை அவர்களுக்கு ஏற்றவாறு திரிப்பதை அனுமதிக்க கூடாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VSK - CARY,யூ.எஸ்.ஏ
07-மார்-202000:09:55 IST Report Abuse
VSK ரஜினி அஜித் இருவர் மட்டுமே பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படங்களில் மட்டுமே நடித்தவர்கள் .
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
02-மார்-202017:07:26 IST Report Abuse
konanki தமிழ் நாட்டில் நடந்த ஜாதி கலவரங்கள் எதை வேணுமானாலும் ஆராய்ந்து பார்த்தாலும் , பாதிப்பை ஏற்படுத்திய ஜாதி கண்டிப்பாக பிராமண ஜாதி இல்லை என்பது கண் கூடு.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
02-மார்-202016:57:01 IST Report Abuse
konanki அன்வர் ஒரு நல்ல மருத்துவரை அணுகவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X