பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு துவக்கம்; ஜெயித்து காட்டுங்கள் மாணவர்களே..

Updated : மார் 02, 2020 | Added : மார் 01, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
exam,HSC,dinamalar,students,TN,TamilNadu,plus_two,தேர்வு,தினமலர்

இந்த செய்தியை கேட்க

சென்னை: தமிழகம் முழுவதும், நாளை (மார்ச், 2), பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு துவங்குகிறது. தமிழகத்தில் மொத்தம் 8 லட்சத்து, ஆயிரத்து 401 மாணவர்கள் பொதுத்தேர்வினை எழுதுகின்றனர்.

மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வுகளை இந்த ஆண்டு மாணவர்கள் எழுதுகின்றனர். அதன்படி, மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. தேர்வுகள் காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் 1.15 வரை நடைபெறும். வினாத்தாளை வாசிக்க கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. நாளை துவங்கி, மார்ச் 24ம் தேதி தேர்வுகள் முடிவடையும். ஏப்ரல் 24-ம் தேதி ரிசல்ட் வெளியாகும். இதில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் உயர்படிப்புக்கு செல்ல முடியும்.


latest tamil news




தேர்வு எழுதும் மாணவர்களுக்கு...


* தேர்வுக்கு முதல் நாள் நள்ளிரவு வரை படிக்க வேண்டாம். அதிகாலையில் எழுந்து படியுங்கள். அப்போது தான் பாடம் மனதில் பதியும்.

* இதுவரை படிக்காத பாடங்களை படிக்காமல், படித்த பாடங்களை மீண்டும் நன்றாக படித்தால் நேரம் வீணாகாது.

* உடல்நிலையை நன்றாகக் கவனித்து கொள்ளுங்கள். தேவையற்ற பிரச்னைகளை சிந்திக்க வேண்டாம்.

* அரைமணி நேரத்திற்கு முன் தேர்வு மையத்திற்கு சென்றுவிடுங்கள்.

* தேர்வுக்கு தேவையான பொருட்கள், ஹால் டிக்கெட்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். ஏற்கனவே பயன்படுத்திய பேனாவை எடுத்து செல்லுங்கள்.

* நன்கு தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுங்கள்.

* ஆசிரியர், பெற்றோர் கூறிய அறிவுரைகளை மனதில் நினைத்து தேர்வு எழுதுங்கள்.

* தேர்வு எழுதும் போது பதட்டம் வேண்டாம்

* எழுதி முடிந்த பின் பிழை உள்ளதா, கேள்வி எண்ணை சரியாக எழுதி உள்ளீர்களா என பாருங்கள்.

வெற்றி உங்கள் வசமாகும்.

வாழ்த்துகிறோம்...


கல்விப்பணியில் தினமலர்

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannan rajagopalan - Chennai,இந்தியா
01-மார்-202021:56:13 IST Report Abuse
kannan rajagopalan Best wishes to all the students Taking up the exams. Please keep calm on the exam day. Pray, take blessings from parents and Start in time and Reach the exam centre safely. After receiving the question paper , give a quick look at all the questions. It helps organise how to proceed. Some questions may look tough at first look . But if you think for a while, you will recall the answer. Keep the handwriting clear. Avoid cutting scratching . A clean answer sheet s a different impression in the minds of examiner. If the exam is tough for you, it is most likely to be so for others too. So, after the exam don't dwell on the bad performance. Proceed with the remaining exams and do well. Fear or getting nervous may cumulatively affect the overall performance. Confidence and positive attitude will take you a long way. Success awaits those who say I Can rather than Can I
Rate this:
Cancel
01-மார்-202020:25:28 IST Report Abuse
ருத்ரா All the best சுடர்களே
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
01-மார்-202019:29:14 IST Report Abuse
S.Baliah Seer சிம்னி விளக்கில் குடிசையில் படித்தேன் ,தெருவிளக்கில் படித்து பெரிய ஆளாய் ஆனேன் என்று சொன்ன காலம் போயே போய்விட்டது இளம் நண்பர்களே.வெறும் உழைப்பும் திறமையும் இருந்தால் மட்டும் போதாது.தெய்வத்தான் ஆகாது எனினும் பணமில்லையேல் முயற்சி தன் மெய்வருத்த கூலியையும் கொடுக்காது.. ஆகவே இந்த தேர்வுகளை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் பரந்து விரிந்த இந்த உலகில் நிச்சயம் நேர்மைக்கு யாராவது உதவுவார்கள் என்ற தன்னம்பிக்கையை முதலாக வைத்து தேர்வை எழுதுங்கள்.இந்த தேர்வுகள் முடிவல்ல.ஆரம்பம் என்று மனதில் நிறுத்துங்கள்.புன்னகையுடன் தேர்வை சந்தியுங்கள்.நல் வாழ்த்துக்கள்.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
02-மார்-202005:28:17 IST Report Abuse
Sanny ஸ்மினிவிலகில் படித்தேன் ......// எப்படி சொல்வதைவிட மொபைல் பவிக்கவில்லை, TV சீரியல் பார்த்ததில்லை இன்று எழுதினால் நல்லாக இருக்கு,....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X