நண்பருடன் மொபைலில் பேசிய சிறுமிக்கு நேர்ந்த கதி

Updated : மார் 01, 2020 | Added : மார் 01, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
minor_girl,thrashed,MadhyaPradesh,சிறுமி,மொபைல்

போபால்: ம.பி.,யில், நண்பருடன் மொபைலில் பேசியதற்காக, சிறுமியை அடித்து உதைத்த அவரது குடும்பத்தினர், தலைமுடியை வெட்டி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ம.பி., மாநிலம் அலிராஜ்பூர் அருகே சோந்த்வா பகுதியில், நண்பருடன் மொபைல்போனில் பேசிய சிறுமியை, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளனர். ஊர் மக்கள் முன்னிலையில் சிறுமியின் தலைமுடியையும் வெட்டியுள்ளனர். நிறைய பேர் சுற்றி இருந்தும் யாரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.


latest tamil news



இதுதொடர்பான காட்சிகள் வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிறுமியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-மார்-202012:52:23 IST Report Abuse
தமிழ் . எவன் சொன்னானோ அவன்கிட்ட போய் கேள்
Rate this:
Cancel
sathyam - Delhi,இந்தியா
02-மார்-202011:53:04 IST Report Abuse
sathyam இதை கண்டிக்கும் பெண்ணின் பெற்றோர்கள் யோசிக்கவும். நாடக காதல் எல்லா இடங்களும் உண்டு. அறியாத வயசில் சிறுமிகள் பாழாக காரணம் இது போல அதிகப்படையான சுதந்திரம், கண்டிப்பு இல்லாமை. ஆனால், அதிலும் ஒரு வரைமுறை வேண்டும். வெறித்தனம் வேண்டாம்.
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
02-மார்-202011:04:26 IST Report Abuse
pattikkaattaan சிறு பிள்ளைகள் பெற்றோர் அனுமதியின்றி அடுத்த பலரோடு போனில் பேசுவதை அனுமதிக்க கூடாது. இந்த பெண் அப்படி தவறு செய்திருந்தால் அவளின் பெற்றோர் அந்த பெண்ணை உரிய முறையில் வீட்டிற்குள் வைத்து கண்டிப்பதில் எந்த தவறும் இல்லை.. ஆனால் ரோட்டில் வைத்து பலபேர் முன்னிலையில், முடியை வெட்டி அவமானம் செய்திருப்பது கொடுமையான விஷயம்.. பெற்றோருக்கு சரியான விழிப்புணர்வு இல்லை என்றே நினைக்கிறேன் .. நாளைக்கு அவமானத்தால் அந்த பெண் தற்கொலை செய்துகொள்ளமாட்டாள் என்பது என்ன நிச்சயம்? பின் விளைவுகளையும் யோசிக்கவேண்டும் ..
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02-மார்-202016:40:21 IST Report Abuse
skv srinivasankrishnaveniகொடூரம் வெட்கக்கேடு அந்தப்பொண்ணு தற்கொலை செய்யாமல் பார்க்கவேண்டும் போலீசு சீ கேவலமான பெற்றோர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X