சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 01, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

தமிழக பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன்: தமிழகத்தில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில், 50 சதவீதம் தமிழ் தான் இடம்பெற வேண்டும். அதற்கான சட்டங்கள் இங்கு உள்ளன. அதை கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.

'டவுட்' தனபாலு: ஒரு வகையில் இது சரி தான். எனினும், தமிழக அரசு அலுவலகங்கள், சேவை மையங்களில், தமிழ் தான் பிரதான தொடர்பு மொழியாக, பேச்சு மொழியாக இருக்க வேண்டும் என, அரசு வலியுறுத்துவதில்லையோ என்ற, 'டவுட்' எழுகிறது. ஏனெனில், வருகைப் பதிவேட்டில், அரசு அலுவலர்கள், ஆங்கிலத்தில் தான் கையொப்பம் இடுகின்றனர்; கடித போக்குவரத்து, உத்தரவு, ஆங்கிலத்தில் தான் உள்ளது. இந்நிலை எப்போது மாறுமோ?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தேசிய அளவில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேவைப்பட்டால், 2021 மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து, ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த, தமிழக அரசு முன்வர வேண்டும்.

'டவுட்' தனபாலு: 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என, 100 ஆண்டுகளுக்கு முன்னரே, பாரதியார் பாடியுள்ளார். அந்த காலத்திலேயே, ஜாதிகளால் எழும் கொடுமைகளை அவர் கண்டித்துள்ளார். ஆனால், நீங்கள், இந்த, 21ம் நுாற்றாண்டிலும், ஜாதிவாரி ரீதியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிறீர்களே; அதன் பின்னணியில் வேறு ஏதேனும் ரகசிய காரணம் இருக்குமோ என்ற, 'டவுட்' எழுகிறது.
பிராமணர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்: பிராமணர்களை பற்றி தரக்குறைவாக பேசிய, தி.மு.க., - எம்.பி., - ஆர்.எஸ்.பாரதியை, தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி, ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர், நீதிபதிகளுக்கு கடிதம் எழுத வேண்டும்.

'டவுட்' தனபாலு: இப்படி, 'மைல்ட்'டாக தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும், வாய் தடித்து பேசுவோர் திருந்த மாட்டார்கள். அதனால், மூன்றெழுத்து மந்திரத்தை, அதாங்க, 'ஓட்டு' என்ற மந்திரத்தை பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில், 'வழக்கு' என்ற நான்கெழுத்து நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும். இதன் மூலம் தான், ஜாதியை பற்றி குறிப்பிடுவது தமிழகத்தில் தடை செய்யப்படும் என்பதில், 'டவுட்'டே இல்லை.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Rahman - Madurai,இந்தியா
02-மார்-202009:32:18 IST Report Abuse
Abdul Rahman தீயமுக முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலோடு தீயமுக அழியும். கவலை வேண்டும். தீயமுக இந்துக்களுக்கு மட்டும் எதிரான கட்சி அல்ல, இஸ்லாமியருக்கு தான்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
02-மார்-202006:16:08 IST Report Abuse
D.Ambujavalli இன்று மட்டும் என்றில்லை பிராமணர்களின் அனுஷ்டானங்கள், புழக்கவழக்கங்கள், பேச்சுநடை என்று கேலி செய்வது, மக்களிடையும், திரைப்படங்கள் நாடகங்களிலும் தொடரத்தான் செய்கிறது ‘மலையைப் பார்த்து நாய் குறைக்கிறது’ என்று செல்வதால் மென்மேலும் சீண்டுகிறார்கள் தேர்தல் வரும்போது மட்டும், நாங்கள் எவரையும் குறைத்து மதிப்பீடு செய்வதில்லையாக்கும் என்று ஒட்டிக்கொள்வார்கள் இவர்களுக்குத் தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X