வெவரமான மாணவர்களால் கல்வி அதிகாரிகள் ஓட்டம்...!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'வெவரமான மாணவர்களால் கல்வி அதிகாரிகள் ஓட்டம்...!'

Added : மார் 01, 2020 | கருத்துகள் (1)
Share
'வெவரமான மாணவர்களால் கல்வி அதிகாரிகள் ஓட்டம்...!'

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள, டாக்டர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தேசிய அறிவியல் கண்காட்சி நடந்தது.

இதில், சிறப்பு விருந்தினர்களாக, திருத்தணி வட்டார கல்வி அலுவலர்கள் பாபு, வெங்கடேஸ்வரலு பங்கேற்று, கண்காட்சியை துவக்கி வைத்தனர். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த சிறுதானிய வகைகளான, ராகி அடை, ராகி புட்டு, பழ வகைகளை, இருவரும் சுவைத்தனர். காய்கறி வகைகளில், வெண்டைக்காய், கேரட் ஆகியவற்றை மட்டும், ருசி பார்த்தனர்.

அங்கிருந்த மாணவர்கள், பாகற்காயை எடுத்து காண்பித்து, 'இதையும் சாப்பிடுங்க சார்...' என்றனர். அப்போது, 'ம்ஹும். இந்த காய் கசக்கும்...' என, அங்கிருந்து, வேறு பகுதிக்கு, கல்வி அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர். மாணவர்கள் இருவர், 'இது, கசப்பு தான்; மனித உடம்புக்கு நல்லது என, கல்வி அதிகாரிகளுக்கு தெரியாது போல...' என, 'கமென்ட்' அடித்ததும், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் ரொம்ப வெவரமாக இருப்பர் போலிருக்கிறதே எனக் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X