பொது செய்தி

இந்தியா

சென்னையில் அமையுமா சுப்ரீம் கோர்ட் கிளை? மீண்டும் வலுக்கிறது கோரிக்கை

Updated : மார் 02, 2020 | Added : மார் 02, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement

சென்னை உள்ளிட்ட, நான்கு முக்கிய நகரங்களில், உச்ச நீதிமன்றத்தின் கிளைகள் அமையுமா என்ற, எதிர்பார்ப்பு மீண்டும் எழுந்துள்ளது.latest tamil newsடில்லி, சென்னை, மும்பை, கோல்கட்டா நகரங்களில், உச்ச நீதிமன்ற கிளைகள் அமைக்கப்பட வேண்டும் என, பார்லிமென்ட்டிலும் சமீபத்தில் குரல் ஒலித்துள்ளது. நாட்டின் தலைநகரான டில்லியில், உச்ச நீதிமன்றம் அமைந்துள்ளது. உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். இங்கு அளிக்கப்படும் தீர்ப்பே இறுதியானது; அதற்கு மேல், 'அப்பீல்' இல்லை.


latest tamil newsஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர, சாதாரணமானவராலும் முடியுமா என்பது கேள்விக் குறி தான். பொதுவாக, பின்பலம் உள்ளவர்களால் மட்டுமே, உச்ச நீதிமன்றம் வரை சென்று, வழக்குகளை நடத்த முடியும்; பொருள் செலவு தான் காரணம். சென்னை, மும்பை, கோல்கட்டா, டில்லியில், உச்ச நீதிமன்றத்தின் மண்டல கிளைகள் அமைப்பதுஅவசியம் என, பார்லிமென்ட் நிலைக் குழு மற்றும் சட்ட கமிஷன் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில், உச்ச நீதிமன்ற கிளை அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பல ஆண்டு களாக உள்ளது.சமீபத்தில், ராஜ்யசபாவில், தி.மு.க., - எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், உச்ச நீதிமன்ற கிளைகள் அமைவதின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அவருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதைதொடர்ந்து, அட்டர்னி ஜெனரலான, கே.கே.வேணுகோபாலை, வில்சன் சந்தித்து, நான்கு முக்கிய நகரங்களிலும், உச்ச நீதிமன்ற கிளைகளை அமைப்பதன் தேவையை வலியுறுத்தினார்.

இது குறித்து, மூத்த வழக்கறிஞர், பி.வில்சன் கூறும்போது, ''மேல்முறையீட்டு மனுக்களை, உச்ச நீதிமன்ற கிளைகளும்,அரசியலமைப்பு சட்டம் சார்ந்த வழக்குகளை, உச்ச நீதிமன்ற முதன்மை பெஞ்சும் விசாரிக்கலாம்; ஒவ்வொரு கிளையிலும், ௧௫ நீதிபதிகளை நியமிக்கலாம்.'இதனால், உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு, பதவி உயர்வுக்கும் வாய்ப்பு அதிகம்,''என்றார்.

மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா முன்னாள், எம்.பி.,யுமான, பி.எஸ்.ஞானதேசிகன் கூறியதாவது: டில்லிக்கு சென்று, மூத்த வழக்கறிஞரை நியமித்து, உச்ச நீதிமன்றத்தில் வாதாட ஏற்பாடு செய்வது, சாதாரணமானவருக்கு சாத்தியம் அல்ல.விசாரணை பட்டியலில் இருக்கும் வழக்குகள், விசாரணைக்கு எட்டாமல் போகலாம்; விசாரணைக்கு வந்தாலும் தள்ளி வைக்கப்படலாம்.சில மாநிலங்களில், உயர்நீதிமன்ற கிளைகள், முக்கிய நகரங்களில் இருப்பது போல், உச்ச நீதிமன்ற கிளைகளையும், டில்லிக்கு வெளியில் ஏற்படுத்தலாம்.

சென்னையில், உச்ச நீதிமன்ற கிளை அமைய வேண்டும் என்ற, கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இங்கு அமைந்தால், வழக்காடிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் சவுகரியமாக இருக்கும். மண்டல அளவில் உச்ச நீதிமன்ற கிளைகள் அமையும்போது, அந்தந்த மாநில மக்களின் உணர்வுகள், நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

வழக்குக்காக, டில்லி செல்ல வேண்டிய அவசியமில்லை; செலவு மிச்சம். மேலும், ஒவ்வொரு முறை நடக்கும் விசாரணையின் போதும், மனுதாரர்கள் நேரில் வந்து கவனித்துக் கொள்ளலாம்.ஆரம்ப கட்டமாக, 'சர்க்யூட் பெஞ்ச்' என்ற, அளவிலாவது துவங்கலாம். நிர்வாக தலைமை அலுவலகம், அந்தந்த மண்டலங்களில் நிரந்தரமாக இருக்க வேண்டும்.நீதிபதிகள் மட்டும் வந்து, வழக்குகளை விசாரிக்கலாம். அடுத்த கட்டமாக, மண்டல கிளைகளை நிரந்தரமாக அமைக்கலாம்.இவ்வாறு, அவர்கூறினார்.

இந்திய பார் கவுன்சில் துணை தலைவரும், மூத்த வழக்கறிஞருமான, எஸ்.பிரபாகரன் கூறியதாவது: உச்ச நீதிமன்ற கிளைகளை, முக்கிய நகரங்களில் ஏற்படுத்துவது அவசியம் தான். குறைந்தபட்சம், மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிப்பதற்கு என, மண்டல அளவில் ஏற்படுத்த வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தால், அதிகமான வழக்குகளை விசாரிக்க முடியவில்லை.தென் மாநிலங்களில் இருந்து, ௧௦ சதவீத வழக்குகள் கூட, மேல்முறையீடுக்காக, உச்ச நீதி மன்றம் வருவதில்லை; ஆனால், பஞ்சாப் போன்ற, டில்லி அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து, 60சதவீதம் வரை, மேல்முறையீட்டு வழக்குகளாக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் ஆகின்றன.

வசதியின்மையால், தென் மாநிலங்களில் இருந்து வரும் வழக்கு எண்ணிக்கை குறைகிறது.எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளை விசாரிக்க, மேல்முறையீட்டு விசாரணை நீதிமன்றங்கள்அவசியம். இதை ஏற்படுத்தும்படி, உச்ச நீதிமன்றத்திடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்.இவ்வாறு, அவர்கூறினார்.
-- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
02-மார்-202021:45:31 IST Report Abuse
Sampath Kumar இது மிகவும் பயன் உள்ள நீண்டநாள் கோரிக்கை மதுரைக்கு சீனை ஹை கோர்ட் கிடைத்தது போல ரைம்ஸ் மருத்துவ மணி கிடைத்தது போல தமிழ் நாட்டி உச்ச நீதி மன்றம் கிளை அமைந்தால் மிக சிறப்பு
Rate this:
Cancel
v.subramanian - madurai,இந்தியா
02-மார்-202021:45:22 IST Report Abuse
v.subramanian ஏற்கெனவே சென்னை ஜனத்தொகையில் வீங்கிப்போயிருக்கிறது பூமியின் வெப்பத்தால் கடற்கரை நகரங்கள் சிறுது சிறிதாக கடலில் முழுகும் அபாயம் உள்ளதாக சொல்கிறார்கள் நான் ஏற்கெனவே எழுதியதை போல் தெற்கே உள்ள கடற்கரை இல்லாத நகரங்கள் மதுரை திருச்சி சேலம் திருநெல்வேலி கோவை போன்ற நகரங்களை எப்போதாலிருந்தே மேம்படுத்துங்கள் அதன் தொடர்ச்சியாக இந்த நகரங்களில் எதாவது ஒன்றில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்கலாம் ஏற்கெனெவே உயர்நீதிமன்ற கிளை உள்ள மதுரையில் அமைக்கலாம் ஏற்கெனவே சென்னையில் உள்ள எல்லா சாலைகள் மேலேயும் பிளை ஓவர் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் டிராபிக் தாங்கமுடியாமல் யோசித்து நல்ல முடிவு எடுங்கள்
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
02-மார்-202017:40:05 IST Report Abuse
S.Baliah Seer ஒவ்வொரு மாநிலத்திலும் உச்சநீதிமன்ற கிளைகள் இருப்பது தான் தர்மம்.அது மட்டுமல்ல ஒரு மாநில உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட ஒருநபர் தன் மாநிலத்தின் உயர் நீதி மன்றம் மூலம் மேல் முறையீடு செய்ய சட்டம் மாற்றி அமைக்கப்பட்ட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X