டெஸ்ட் கிரிக்கெட்; தொடரை வென்றது நியூசிலாந்து

Updated : மார் 02, 2020 | Added : மார் 02, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

கிறைஸ்ட்சர்ச்; நியூசிலாந்தில் நடந்த இந்தியாவுடனான 2 வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரை வென்றது.latest tamil newsநியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்திய அணி வீழ்ந்தது. இரண்டாவது போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷமி 4, பும்ரா 3 விக்கெட் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 ரன் முன்னிலை பெற்றது.


latest tamil newsஇரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு பிரித்வி ஷா (14), மயங்க் அகர்வால் (3) ஏமாற்றினர். கிராண்ட்ஹோம் பந்தில் கேப்டன் கோஹ்லி (14) அவுட்டானார். ரகானே 9 ரன்கள் எடுத்தார். பவுல்ட் 'வேகத்தில்' புஜாரா (24), உமேஷ் (1) புஜரா (24) சிக்கினர். 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் எடுத்தது. ஜடேஜா ஆட்டமிழக்காமல் 16 ரன் சேர்த்தார். மற்றவர்கள் சோபிக்கவில்லை.


latest tamil newsமுதல் இன்னிங்ஸில் 7 ரன் முன்னிலை பெற்ற நிலையில் நியூசிலாந்துக்கு 132 ரன் இலக்கு நிர்ணயித்தது இந்தியா. தொடர்ந்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி36 ஓவரில் 3 விக்கெட் இழந்து 132 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரை வென்றது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
02-மார்-202020:31:34 IST Report Abuse
Krishnamurthy Venkatesan ஷிகர் தவான், ரோஹித், அஸ்வின் போன்ற வீரர்கள் இல்லாததும் ஒரு காரணம்.
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
02-மார்-202018:24:03 IST Report Abuse
Poongavoor Raghupathy Kohli is an unfit Captain though he is a good Batsman. Dhoni won many mtches due to his cool and intelligent cricket. Kohli is bound to loose due to his over emotional unintelligent strategies. Kohli always plays good batting only when the team is in a comfort zone but under crisis Kohli flops. Kohli can not lead his team to victory when in crisis. Nervousness and over emotion are the basic negative quality for a Captain.
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
02-மார்-202017:26:36 IST Report Abuse
karutthu பொதுவாக டெஸ்ட் மேட்ச் ல் டிரா வாகும் இந்தியா மூன்று ஒன்டே இரண்டு டெஸ்ட் ம் தோல்வி .ஆகையால் ஐந்து டி டுவெண்ட்டி மேட்ச் ல் கிடைத்த கோப்பையை நியூஸிலாந்திடம் கொடுத்து விட்டு இந்தியா விற்கு வந்து சேருங்கள் விளையாட்டிற்கான பணத்தை வாங்காதீர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X