சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 02, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

தி.மு.க., மாநில இளைஞரணி செயலர், உதயநிதி: இளைஞர்களுக்கு, தி.மு.க., வேலை வாய்ப்பை உருவாக்கி தருகிறது. ஆனால், அ.தி.மு.க., அரசு, டி.என்.பி.எஸ்.சி., வேலை வாய்ப்பில் முறைகேடு செய்துள்ளது. சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெறும்; முதல்வர் நாற்காலியில், ஸ்டாலின் அமர்வார்.

'டவுட்' தனபாலு: தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் உங்கள் அப்பா ஸ்டாலின் அமர்ந்தால், செய்தித் துறை அமைச்சர் பதவி உங்களுக்குத் தான் என்பதில், எவ்வித, 'டவுட்'டும் இல்லை. எனினும், தி.மு.க., மீண்டும் பதவிக்கு வரவே முடியாது என, அ.தி.மு.க.,வினர் அடித்து கூறுகின்றனரே!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: வரும், 2021ல், கருணாநிதி, ஜெயலலிதா என்ற, இரு பெரும் தலைவர்கள் இல்லாத நிலையில், பொது தேர்தலை சந்திக்க உள்ளோம். அவர்கள் இருந்திருந்தால், வட மாநில அரசியல் ஆலோசகர்கள், இறக்குமதியாகி இருக்க முடியாது. 37 எம்.பி., தொகுதிகளிலும், தி.மு.க., பணத்தை இறக்குமதி செய்துள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளன.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்லும் இரு பெரும் தலைவர்கள் இல்லாத நிலையிலும், பா.ம.க.,வால் சோபிக்க முடியவில்லையே; அது ஏன் என்பது தான் மிகப் பெரிய 'டவுட்' ஆக உள்ளது. 37 தொகுதிகளில், தி.மு.க., பணத்தை இறக்குமதி செய்துள்ளது என, புள்ளிவிபரமாக கூறுகிறீர்கள்; போலீசிடம் பிடித்து கொடுத்து விட வேண்டியது தானே!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தீர்மானம்: டில்லி கலவரம் குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழுவை, மத்திய அரசு அமைக்க வேண்டும். மேலும், தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கையை கைவிட வேண்டும். இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். வெறுப்பு பிரசாரத்தை தடுக்க, சட்டம் இயற்றப்பட வேண்டும்.

'டவுட்' தனபாலு: உங்கள் தீர்மானத்தை பார்க்கும் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேசிய கட்சி போல மாறுகிறதோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. ஏனெனில், உள்ளூரில் ஏராளமான பிரச்னைகள் இருக்கையில், டில்லி கலவரம், தேசிய மக்கள்தொகை பதிவேடு என, திருமாவளவன், 'கிளப்புகிறார்!' எனினும், உங்கள் கட்சியின் தீர்மானத்தால், மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ளாது என்பதில் மட்டும் டவுட்டே கிடையாது!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
03-மார்-202018:33:56 IST Report Abuse
karutthu உள்ளூரில் ஏராளமான பிரச்னைகள் இருக்கையில், டில்லி கலவரம், தேசிய மக்கள்தொகை பதிவேடு என, திருமாவளவன், 'கிளப்புகிறார்' ,,,,,, திருமா தான் எம் பீ ஆனபிறகு தேசிய அரசியலுக்கு செல்கிறார் அதிலொன்றும் தப்பில்லையே
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
03-மார்-202009:22:58 IST Report Abuse
a natanasabapathy சாதி அரசியல் செய்பவர்களால் எதையும் சாதிக்க இயலாது பிறர் காலில் விழுந்து காசு சம்பாதிக்க மட்டுமே முடியும்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-மார்-202006:01:28 IST Report Abuse
D.Ambujavalli இந்த tnpsc முறைகேடு தற்போது 2006 லெவலிலேயே ஆரம்பித்ததாக புகைய ஆரம்பித்துள்ளதே அப்போது யார் ஆட்சி, யார் துறை அமைச்சர் என்று தோண்டும்போது நிறைய பாம்புக்குட்டிகள் வருமே கொள்ளையடிப்பதில் மன்னாதி மன்னர்கள் யார் என்று மக்களுக்குத் தெரியாதா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X