சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ஏமாற்று வேலைக்கு இஸ்லாமியர் பலியாகக் கூடாது!

Updated : மார் 03, 2020 | Added : மார் 02, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஏமாற்று வேலைக்கு இஸ்லாமியர் பலியாகக் கூடாது!

கு.காந்தி ராஜா, எண்ணுார், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சி.ஏ.ஏ., - என்.பி.ஆர்., போன்ற சட்டங்கள் அத்தியாவசியமானது. இவை தேச நலனுக்கானது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட இச்சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

இது, மத அடிப்படையில் அல்ல; அப்படியிருந்தால் இதன் வரம்புக்குள் கிறிஸ்துவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். இவை அனைத்து மதத்தினர்களின் நலனுக்குமானவை. சி.ஏ.ஏ., என்றழைக்கப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டம், இஸ்லாமியர் உட்பட எவருக்கும், எவ்வித பாதிப்பையும் உருவாக்க போவதில்லை. ஆனால், அதை, ஒரு பெரும் பூதம் போல்,சித்தரித்து, எதிர்க் கட்சிகள் பீதியை கிளப்பிக் கொண்டிருக்கின்றன. இஸ்லாமியர் போராட்டம் நடத்த துாண்டி, பெரும் கலவரங்களை உருவாக்க, எதிர்க் கட்சிகள் முயற்சித்து கொண்டிருக்கின்றன.

இச்சட்டத்தை எதிர்க்கும், காங்கிரஸ், தி.மு.க., போன்ற கட்சிகள், உண்மையாக காரணத்தை தெரிவிக்க மறுக்கின்றன. மத அடிப்படையில் பாதிக்கப்பட்டோருக்கு தான், குடியுரிமைவழங்கப்படுகிறது; பாதிக்கப்பட காரணமாக இருப்போருக்கும், குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என, கோரினால், அதை விட முட்டாள்தனம், வேறு ஏதேனும் இருக்க முடியுமா?இலங்கை மக்களுக்கு, குடியுரிமை அளிப்பது என, இந்திய அரசு முடிவெடுத்தால், அகதிகளாக வரும் தமிழர்களுக்கு தான், குடியுரிமை வழங்க முடியும்; சிங்களர்களுக்கு கூடவா வழங்க முடியும்?

பல ஆண்டுகளாக இடம் பெயர்ந்த, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டு இஸ்லாமிய மக்களை இணைத்து, குடியுரிமை வழங்க வேண்டும்; ஆனால், அந்நாட்டு பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டு குடும்பங்களை இழந்து அகதிகளாக இங்கு வந்திருக்கும், ஹிந்துக்கள், கிறிஸ்துவர்களுக்கு இடமளிக்கக் கூடாது. அவர்களுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது என, போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதற்கும், சில கட்சிகள் ஆதரவு தருகின்றன. அனைத்து நாட்டவர்களும் வாழும் நாடாக எப்படி இந்தியா இருக்க முடியுமா? இதற்கெதிராக, தவறாக துாண்டி விடப்பட்டிருக்கும், இஸ்லாமியர்களும், மற்றவர்களும், தாங்கள் நடத்தும் போராட்டங்களை கைவிட வேண்டும். தேர்தலின்போது, ஒட்டு மொத்தமாக இஸ்லாமியர் ஓட்டு கிடைக்கும் என்பதால், தி.மு.க., போன்ற கட்சிகள், போராட்டம் நடத்த துாண்டி விடுகின்றன. அவர்களது ஏமாற்று வேலைகளுக்கு, இஸ்லாமியர்கள் பலியாகக் கூடாது!


'நீட்' தேர்வில் தேர்ச்சி அடைவது சாதாரணம் கிடையாது!


என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிடக் கட்சிகளின் பொற்கால ஆட்சிகளின் தான், தேர்வில் முறைகேடுகள், சர்வ சாதாரணமாக நடக்க துவங்கியுள்ளன. கடந்த, 1967க்கு முன், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகள், ஒரு நாளைக்கு, இரண்டு தேர்வுகள் நடந்து, நான்கு நாட்களில் சுபமாக முடிந்து விடும்.

தேர்வு கண்காணிப்பாளர்கள், மிக நேர்மையாக நடந்து கொண்டனர். தேர்வுகளை கண்காணிக்க, கலெக்டர், தாசில்தார், ஆர்.டி.ஓ., போன்ற 'ரெவின்யு' அதிகாரிகள் எல்லாம் வர மாட்டார்கள். பறக்கும் படைகள், பறக்காத படைகள் எல்லாம், தேர்வு மையங்களை வட்டமிட்டு, கண்காணிப்பு செய்ததாக வரலாறு இல்லை. தேர்வு முடிவுகள் பத்திரிகைகளில் தான் வெளியாகும்.மதிப்பெண்ணை தெரிந்துக் கொள்ள, ஒரு வாரம் தவம் இருக்க வேண்டும். தேர்வில், 600க்கு, 480 எடுப்பதே குதிரைக் கொம்பு தான். தமிழ் மீடியம் தான், பிரதானமாக இருந்தது; மாணவர்கள் கொஞ்சமாவது ஞானம் பெற்றவர்களாக இருந்தனர்.

தற்போது, பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 தேர்வுகள், மார்ச்சில் துவங்கி, 20 நாட்களுக்கு மேல் நடக்க போகிறது. இந்த தேர்வுகளில் மாணவர்கள், தில்லுமுல்லுகள், தில்லாலங்கடி வேலைகள்எதுவும் செய்யாமல், செவ்வனே நடத்தி முடிக்க, அரசு தேர்வுத் துறை, தடாலடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகமெங்கும், கலெக்டர்கள் தலைமையில், 4,000 பறக்கும் படைகள் சுழன்று சுழன்று பணியாற்றப் போகிறார்களாம்; கேள்வித்தாள்கள், 'லீக்' ஆகாமல் தடுக்க,கடுமையான போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கிறார்களாம்!

எந்த மாநிலத்திலும், இந்த அளவுக்கு, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்த கெடுபிடிகள் காட்டப்படுகிறதா என, தெரியவில்லை. கல்விக்காக, 34,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தாலும், என்ன பயன் கண்டு உள்ளது,கல்வித்துறை!பிளஸ் 2 தேர்வில், 1,200க்கு, 1,195 மார்க் எடுத்தாலும், 'நீட்' தேர்வில், 720க்கு, 300 எடுக்கவே, பகீரதன முயற்சி செய்கின்றனர், மாணவர்கள். அமெரிக்காவில் இருந்து, நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, இங்கு பாடங்கள் நடத்தினாலும், 'நீட்' தேர்வில், அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சிஅடைவது, சாதாரணம் கிடையாது!


தி.மு.க., பொதுச் செயலராக இஸ்லாமியர்!


அ.ஷாகுல் அமீது, கோவையிலிருந்து எழுதுகிறார்: தி.மு.க., பொதுச் செயலர், பேராசிரியர் அன்பழகன், வயது மூப்பின் காரணமாக, உடல் நலம் குன்றி, 'சீரியஸ் கண்டிஷனில்' இருப்பதாக செய்திகள் வருகின்றன. புதிய பொதுச் செயலரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு என்றைக்குமே, தி.மு.க.,தான், பாதுகாவலனாக இருந்து வருகிறது.

'எந்தக் கட்சி என்ன கூறினாலும், முதல்வர், இ.பி.எஸ்., என்ன சொன்னாலும், எங்களைப் பொருத்தவரை, தி.மு.க., மீது தான் நம்பிக்கை உண்டு. அதனால், தலைவர் ஸ்டாலின், எங்களது நம்பிக்கையை உறுதி செய்யும் விதமாக, ஓர் இஸ்லாமியரையே, தி.மு.க., பொதுச் செயலராக நியமிக்க வேண்டும். அப்பப்பப்பா... நினைக்கவே பரவசமாக இருக்கிறது!

ஒருவேளை, கட்சியிலுள்ள இஸ்லாமியர்களில் அந்தளவிற்கு அனுபவமுள்ள நிர்வாகி யாரும் இல்லை என, அவர் கூறுவாரேயானால், அவரை பெரிதும் நம்பி இருக்கும், தலித் இனத்தைச் சேர்ந்தவரை பொதுச் செயலராக்க வேண்டும். பத்திரிகைகளில் வெளிவருவது போல, தான் சொல்வதை கேட்பவரையோ, தன் மகன் சொல்பவரை கேட்பவரையோ, பொதுச் செயலராக நியமிக்கும் சிந்தனை, ஸ்டாலினுக்கு இருக்காது என, நம்புவோம். பத்திரிகைகள் வழக்கம் போல், ஸ்டாலினுக்கு கெட்ட பெயரை உண்டாக்குவதாக தோன்றுகிறது. இந்த விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, நல்லதொரு முடிவை எடுத்து, தான் அப்பழுக்கற்றவர் என்பதை, ஸ்டாலின் நிரூபிக்க போகிறார் பாருங்கள்!

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
04-மார்-202008:55:06 IST Report Abuse
venkat Iyer திமுக பொது செயலாரா?.அதுவும் முஸ்லிம்களுக்கான அல்லது ஆதி திராவிட சமுகத்துக்கா.கேட்கவே நல்லாதான் நமக்கு இருக்கு.அவருக்கு எப்படி இருக்கோ?.
Rate this:
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
03-மார்-202008:43:12 IST Report Abuse
venkat Iyer திரு.காந்தி ராஜா கூறியதன் உண்மையை முஸ்லிம்கள் நிச்சயம் ஏற்று கொள்ள மாட்டார்கள்.இவர்கள் என்.ஆர்.சி யில் வரும் ஆறு கேள்விகளை நீக்கினால் ஏற்று கொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.அதில் பூர்விக விவரங்களை தம்மால் தர இயலாது என்று கூறியுள்ளார்கள்.அப்படி என்றால் காஷ்மீர் வழியாக இந்தியாவில் பல பகுதிகளில் ஊடுருவி நாச வேலைகளை செய்யும் குறிப்பிட்ட முஸ்லிம் தீவிரவாத அமைப்பினை சார்ந்தவர்களை எப்படி அடையாளம் கண்டு பிடிப்பது என்பது குறித்து விளக்கத்தினை இமாம்கள் அரசுக்கு ஆலோசனை சொல்லட்டும்.இந்தியாவில் படிக்கும் ஒரு பெண் மீடியாக்கள் முன் பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் என்று வெளிப்படையாகவே முழக்கம் செய்வதை ஒரு உதாரணமாக நாம் ஏன் கொள்ளக்கூடாது .பள்ளி வாசல் அல்லாவின் புனிதத்தினை முழக்கம் செய்யும் இடத்தில் சிஏஏ பற்றி பரப்புரையை இரண்டு கிமீ தூரம் கேட்கும் ஸ்பீக்கரில் ஒலிபரப்பு செய்கின்றார்கள். வெள்ளிக்கிழமை தோறும் கூடும் பள்ளிவாசல் தொழுகையில் பிஜேபி விஷம் போன்ற கட்சி என்று அங்கு வரும் முஸ்லிம்களுக்கு விஷம பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.எனது முஸ்லிம் நண்பர்கள் என்னிடம் நாங்கள் வாழ முடியாத நாட்டை யாரையும் வாழ விடாதவாறு பேசுகின்றனர்.அவருடைய எண்ணத்தில் விஷம் பிரச்சாரத்தின் தாக்கம் தெரிகிறது. பிரச்சனை வரும் போது நாங்கள் இருக்கின்றோம் என்று சொன்னபோதும் அவன் அழ ஆரம்பித்தான்.எல்லோரையும் பாகிஸ்தானுக்கு விரட்டிவிடுவார்கள் என்பது போலவும்,எங்களுக்கு அரசாங்கம் எவ்வித பாதுகாப்பும்கொடுக்க மாட்டார்கள் என்றும் கூறி கண்ணீர் விட்டான்.இதை பார்க்கும்போது எங்கோ தவறு நடந்து வருகிறது என்பது மட்டும் என்னால் அறிய முடிகிறது.பள்ளிவாசலில் நடக்கும் விஷம் பிரச்சாரங்களை அரசு உளவுத்துறை மூலம் கூர்ந்து கண்காணிக்க வேண்டும்.அல்லது அவர்களில் முக்கியமானவர்களை அழைத்து மத்திய அரசு உண்மை விபரத்தினை தெளிவு படுத்த வேண்டும்.தமிழக அரசும் அதனை உறுதி செய்து பாதிப்பு கிடையாது என்ற விழிப்புணர்வை நடிகர் ரஜினிகாந்த் வரவழைத்து பேசியது போல் பேச அழைக்க வேண்டும்.மதப்போராட்டங்களில் ஆபத்து அனைவருக்கும் உண்டு என்பதை அரசு உணர்ந்து செயல்படும் தருணமாகும்.பரிட்சைகள் ஆரம்பித்துவிட்டனர்.போக்குவரத்துக்கு இடையூறாக போராட்டங்கள் நிகழாமல் பார்த்துகொண்டு அரசு முனைப்பு காட்ட வேண்டும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-மார்-202006:12:44 IST Report Abuse
D.Ambujavalli ‘அண்ணன் ..... திண்ணை’ பழமொழி போல் ஸ்டாலினின் சுற்றம் நட்பெல்லாம் நாக்கில் நீர் சொட்டக் காத்திருக்கையில் முஸ்லிமா, தலித்தா ? பேராசைதான்
Rate this:
karutthu - nainital,இந்தியா
03-மார்-202018:23:07 IST Report Abuse
karutthuதி மு க வில் தான் ஆ.ராசா இருக்கிறாரே பிறகு என்ன ? நல்ல எண்ணம் இருந்தால் ஒரு பிராமணருக்கு பதவி கொடுத்து அந்த சமூகத்தின் ( 8%) நம்பிக்கையை பெறலாமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X