'மறக்காம கூப்பிடுமா...' 'ஜொள்ளு' அதிகாரி லொள்ளு!

Added : மார் 03, 2020
Advertisement
வெ யில் கொளுத்தும் முன்னே... கோடை வரும் பின்னே!'' என்றவாறே, மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''என்னக்கா... வரும்போதே 'செம பில்டப்' கொடுக்றீங்க?'' மித்ரா கேட்டதும், ''வெயில்தான் காரணம். சரி கிளம்பு, கலெக்டர் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வந்திடலாம்'' என்றதும், வண்டியில் ஏறி உட்கார்ந்தாள் மித்ரா.கலெக்டர் ஆபீஸ் பார்க்கிங் ஏரியாவில், இடம் இல்லாததால், வெயிலில்
 'மறக்காம கூப்பிடுமா...' 'ஜொள்ளு' அதிகாரி லொள்ளு!

வெ யில் கொளுத்தும் முன்னே... கோடை வரும் பின்னே!'' என்றவாறே, மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''என்னக்கா... வரும்போதே 'செம பில்டப்' கொடுக்றீங்க?'' மித்ரா கேட்டதும், ''வெயில்தான் காரணம். சரி கிளம்பு, கலெக்டர் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வந்திடலாம்'' என்றதும், வண்டியில் ஏறி உட்கார்ந்தாள் மித்ரா.கலெக்டர் ஆபீஸ் பார்க்கிங் ஏரியாவில், இடம் இல்லாததால், வெயிலில் வண்டியை நிறுத்திய சித்ரா, ''என்ன மித்து, எம்.எல்.ஏ.,க்களுக்கு மாதிரி, இடமில்லாம போச்சு,''''என்னக்கா... சொல்றீங்க, புரியலையே!''''திஷா' கமிட்டி கூட்டம் நடந்தப்ப, மேடையில எம்.பி.,க்கள் மட்டுமே உட்கார இடமிருந்துச்சாம். கூட்டத்துக்கு வந்த, தாராபுரம், காங்கயம்எம்.எல்.ஏ.,க்கள், மேடையில உட்கார இடமில்லாததால், பார்வையாளர் பகுதியில், உட்கார்ந்தாங்களாம்,''''அடடே... அப்புறம்?''''கூட்டத்தில், ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து, எம்.பி.,க்கள் சரமாரியாக கேள்வி கேட்டாங்களாம். 'எங்ககிட்ட எதுவுமே சொல்றதில்லை. என்ன வேலை நடக்குதுன்னு கேட்டாலும், பதிலில்லை,'ன்னு அதிகாரிங்க மீது புகார் சொன்னாங்களாம்,''''திருப்பூர் எம்.பி., ''ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணி குறித்து, எங்கிட்ட கலந்து பேசலைன்னா, ஒவ்வொரு வேலையின் தரம் ஆய்வு செய்ய, 'திஷா' கமிட்டிக்கு உரிமை இருக்குனு'னு 'டோஸ்' விட்டாராம். இதைக்கேட்டு அதிகாரிகள் 'வெலவெலத்து' போயிட்டாங்களாம்,''''ஆமாங்க்கா... அவங்க சொன்னது உண்மைதானே,'' சொன்ன மித்ரா, எதிரே வந்த பத்திர பதிவுத்துறை வாகனத்துக்கு வழிவிட்டாள். அதைப்பார்த்த சித்ரா, ''இப்பதான் ஞாபகத்துக்கு வருது. பத்திர ஆபீஸ் கட்டட விவகாரத்துல மாநகராட்சி அதிகாரிகளும் 'தில்லுமுல்லு'க்கு உடந்தையாக இருக்காங்க'' என்றாள்.''எந்த இடத்திலீங்க்கா?''''நெருப்பெரிச்சல் பக்கத்தில, தானமாக கிடைச்ச இடத்தில், கட்டியிருக்காங்க. ஆனா, வழியை இன்னும் ஒப்படைக்கலையாம்,''''அதுசரிங்க்கா... உள்ளூர் திட்டக்குழுமம் என்ன பண்றாங்க!''''அவங்களையே காணோம். அந்த ஆபீஸ் கட்றதுக்கு இடத்தை தானமா கொடுத்தவர், 60 கடை கட்றாராம். எந்த பெர்மிஷனும் வாங்கலயாம். கார்ப்ரேஷன்காரங்களும் 'கப்சிப்'னு இருக்கறத பார்த்தால், 'சம்திங்... சம்திங்'னு தோணுது,''''ஓ... அதானே பார்த்தேன்,'' என சிரித்த மித்ரா, ''அக்கா... தண்ணி குடிச்சுட்டு வந்திற்றேன்,'' என்று போன வேகத்தில் திரும்பி வந்தாள்.''ஏன்டி... அதுக்குள் வந்திட்டே'' ''அக்கா... தண்ணி இல்லைங்க்கா,'' என்றாள் மித்ரா.''மித்து. வாட்டர் கேன் உற்பத்தியாளர்கள் 'ஸ்டிரைக். அதனால, தண்ணி கிடைச்சிருக்காதுடி,''''ஆமாங்க்கா... மறந்தே போச்சு. நம்ம மாவட்டத்ல கூட, 'மினரல் வாட்டர் பிளான்ட்' சரியா இருக்கான்னு அதிகாரிங்க யாரும் கண்டுக்கறதில்ல. கேட்டா, 'உத்தரவு வரலீங்க'ன்னு ஒரே மாதிரி பதில் சொல்றாங்க,'' ஆதங்கப்பட்டாள் மித்ரா.இருவரும், ஐந்தாவது தளத்துக்கு செல்ல காத்திருந்தனர். 'லிப்ட்' வந்தவுடன், அதிலிருந்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் வெளியேறினர்.அவர்களை பார்த்த சித்ரா, ''மித்து, இவங்க பேரை சொல்லிட்டு, உடுமலையில் ஒரு டாக்டர் ஓவரா 'சீன்' போட்றாராம்,'' என்றாள். ''எந்த டாக்டர்?'' ''உடுமலையிலுள்ள கவர்மென்ட் டாக்டர் ஒருத்தர், தன்னிச்சையா அடிக்கடி 'ரெய்டு' போறாராம். கடைக்காரர்களை மிரட்டி, சத்தம் போடறாராம். அவர் ரெய்டு நடத்றதுக்கு ரூல்ேஸ இல்லை. இவரை பத்தி 'விஜய' அதிகாரிகிட்ட புகார் செஞ்சும் ஒரு பிரயோஜனமும் இல்லையாம்,'' ''அடேங்கப்பா...''''இருடி., அதே துறைய பத்தி இன்னொரு மேட்டரும் சொல்றேன், கேட்டுட்டு சொல்லு. ஆபீசருக்கு, 'சாரதியாக' இருப்பவர், ஆண்டிபாளையம் பிரிவிலுள்ள கோழிக்கடைக்கு போய், 'லைசென்ஸ்' இருக்கா?'னு மிரட்டுற தொனியில் கேட்டிருக்கார். இல்லேன்னா, டபுள் மடங்கு பைன் ஆகும். எனக்கு பாதி கொடுங்க. நா பாத்துக்கறேன்,'னு சொல்லியிருக்கார்,''''உடனே, கடைக்காரர் லைசென்ைஸ காட்டியதும், 'சாரதி' எஸ்கேப்பாம்,'' என கூறி சிரித்தாள் சித்ரா.''தடி எடுத்தவனெல்லாம், தண்டல்காரன் ஆன கதையாட்டம் இருக்குது,'' என்ற மித்ரா, பைல் கட்டுடன் சென்றவரை பார்த்து, ''சண்முகம் அண்ணா, நல்லாயிருக்கீங்களா?'' என பேசி நகர்ந்தாள்.ஐந்தாம் தளத்தில், உள்ள கல்வித்துறை அலுவலகத்துக்குள் சித்ரா சென்றதும், மித்ரா வெளியே காத்திருந்தாள். சில நிமிடங்களில் அவள் திரும்பியதும், ''ஏங்க்கா... ஓ.கே., ஆயிடுச்சா?'' மித்ரா கேட்டதும், ''இல்லம்மா, நெக்ஸ்ட் வீக் வரச் சொல்லீட்டாங்க,'' என்ற வாறே 'லிப்ட்' நோக்கி நகர்ந்தாள்.இருவரும், கீழிறங்கி கேன்டீனுக்குள் சென்றனர். காபி வாங்கி, அருகிலுள்ள மரத்தடியில் அமர்ந்து அருந்தினர். அப்போது, விவசாயிகள் சிலர் உயர் மின் கோபுரம் அமைப்பது குறித்து பேசி சென்றனர்.அதைக்கேட்ட சித்ரா, ''பல்லடத்தில், இ.பி., டவர் எதிர்ப்பு கூட்டத்தில், பங்கேற்ற எம்.பி.,க்கள் 'சிஏஏ' எதிர்ப்பு பிரசாரம் செஞ்சதில், சில விவசாயிகளுக்கு கோபம் வந்திடுச் சாம். 'இதென்ன கட்சிக்கூட்டமா? அது... இதுன்னு பேசிட்டுனு சொல்லி, நிறைய பேர் வெளியே போயிட்டாங்களாம்,'' என்றாள்.''இப்படித்தான், எதையாவது பேசி, ஏதாவது பஞ்சாயத்தை இழுக்கிறது. இதேமாதிரிதான், '... நல்லுார்' ஸ்டேஷனிலும் ஒரு பிரச்னை,''''அது...என்னக்கா?''''கவர்மென்ட் ஸ்கூலில் படிக்கிற ஒரு பொண்ணை காணோம்னு சொல்லி, பேரன்ட்ஸ் புகார் கொடுத்தாங்க. உடனே அந்த அதிகாரி, அதே கிளாஸில் படிக்கிற, ஏழெட்டு ஸ்டூடண்ட்ைஸ ஸ்டேஷன் கூட்டிட்டு போயி விசாரிச்சாராம்,''''சாயந்திரம், 6:00 மணியாகியும், புள்ளைங்கள காணாமேன்னு, பேரன்ட்ஸ் விசாரிச்சிட்டு ஸ்டேஷனுக்கு போய் சத்தம் போட்டிருக்காங்க. ஆனாலும், கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு, அதிகாரி பதில் சொல்ல, ஒருத்தர் எஸ்.பி., ஆபீசுக்கு சொல்லிட்டார்,''''அங்கிருந்த ஒரு அதிகாரி போனில் கூப்பிட்டு விளாசவும், எல்லோரையும் திருப்பி அனுப் பிட்டாராம். இப்படித்தான் அவரு, ஸ்டேஷனுக்கு எந்த லேடீஸ் வந்தாலும், தன்னோட நம்பரை கொடுத்து, 'மறக்காம கூப்பிடுமா'னு 'ஜொள்ளு' விடறா ராம். ஏற்கனவே, அவர் மேல, 'கம்ப்ளைன்ட்' இருந்தாலும், இன்னும் மாறலையாம்,'' விளக்கினாள் சித்ரா.''அக்கா, ஒரு லேடி அதிகாரியும் இவரைப்போலவே ரொம்ப 'அசால்ட்டாம்,''''யாருடி அவங்க?''''உடுமலை - வாழவாடியில், 750 கிலோ ரேஷன் அரிசி, கடத்த முயன்ற ஒருத்தரை, ஆர்.ஐ,. பிடிச்சு, 'புட்செல்'லுக்கு தகவல் கொடுத்தாரு. ஆனா, அதிகாரி கண்டுக்கலையாம். இதனால, அந்நபரை, விடுவிச்சிட்டாங்களாம்,''''ஓ... அவங்களா, அவங்கள பத்தி ஏற்கனவே பலரும், 'பல்லவி' பாடிட்டிருக்காங்க,'' என்ற சித்ரா, ''மித்து... சொல்ல மறந்துட்டேன். போன வாரம், ரிஜிஸ்டர் ஆபீஸ் பத்தி பேசினோமில்ல,''''சொல்லுங்க்கா... என்னாச்சு?''''அந்த அதிகாரி, புரோக்கர்களை கூப்பிட்டு 'எவ்ளோ பண்ணித்தர்றேன். என்னைப்பத்தி தப்புத்தப்பா சொன்னது யாரு? இனிமேல், யாரும் ஆபீசுக்குள்ள வரக்கூடாதுன்னு' சொல்லிட்டாங்களாம்,'' ''பார்க்கலாங்க்கா.. இது எத்தனை நாளைக்குன்னு'' என்ற மித்ரா ''காங்கயத்தில், இலங்கை தமிழர் முகாமில், போலீசை தாக்கிட்டாங்களாம்,''''இது எப்ப நடந்தது?''''முகாமில் கஞ்சா புழங்குவ தால, உளவுத்துறை போலீஸ் ஒருத்தர் விசாரிக்க போனப்ப, போதையில் இருந்த நபர், அவரை தாக்கிட்டார். விஷயம் தெரிஞ்சதும், போலீஸ் போய், அள்ளிட்டு வந்து ஸ்டேஷனில் 'வச்சு வெளுத்துட்டாங்களாம்,''''இத்தனைக்கும் அவர், ராமேஸ்வரம் கேம்பிலிருந்து வந்து தங்கியிருக்காராம். இப்ப பிரச்னையாயிட்டதால, அவரை அங்கயே அனுப்புங்கனு, மத்தவங்க சொல்றாங்களாம்,''''பார்த்துக்க மித்து. ஒரே ஸ்டேட்டில் இருந்து வந்த, அதுவும் சொந்தக்காரை திருப்பி அனுப்புனு சொல்றாங்க. அப்ப 'சிஏஏ'வும் அதையேதான் சொல்லுது. அதுக்கு ஏன், இப்படி எதிர்ப்பு காட்டறாங்க?''''அக்கா... சபாஷ் சரியா சொன்னீங்க,'' என்ற மித்ரா சொன்னதும், ''ஓ.கே., மித்து, வா போகலாம்,'' என்றாள்.இருவரும், சென்ற போது, அங்கிருந்த கனரா வங்கி கிளை போர்டு சித்ராவின் கண்ணில்பட்டது.அதைப்பார்த்த சித்ரா, ''மித்து, அவிநாசியிலுள்ள வங்கியில், ஓ.ஏ., ஒருத்தர் 'சூைஸட்' மேட்டர் பெரிசாயிடுச்சாம். வங்கியில், அதுவும் 'ஸ்டாப்' ஒருத்தர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நிலைமை இருக்கும்போது, அந்த பிரச்னையில், தனி கவனம் செலுத்தி இருக்க வேண்டும்,''''ஆனா, உயரதிகாரிகள், எதையும் கண்டுக்கலயாம். அதைப்பத்தி கேட்டா, 'என்னோட 'நாலேட்ஜ்'க்கு எதுவும் கொண்டு வரல. விசாரிச்சுட்டு, நடவடிக்கை எடுப்போம்னு' சமாளிக்கிறாராம்,'' என்றவாறே, வண்டியை ஸ்டர்ட் செய்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X