எங்கள் மாநிலத்தில் குடியிருக்கும் வங்கதேசத்தவர்கள் இந்திய குடிமக்களே: மம்தா

Added : மார் 03, 2020 | கருத்துகள் (103)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் குடியிருக்கும் வங்கதேசத்தவர்கள் அனைவரும் இந்திய குடிமக்கள் தான் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்.பி.ஆர்., உள்ளிட்ட சட்டங்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்நிலையில் காலியாகாஞ்ச் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மம்தா
MamataBanerjee,Bangladeshis,Indian,citizens,WestBengal,மம்தா,மம்தா_பானர்ஜி

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் குடியிருக்கும் வங்கதேசத்தவர்கள் அனைவரும் இந்திய குடிமக்கள் தான் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்.பி.ஆர்., உள்ளிட்ட சட்டங்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்நிலையில் காலியாகாஞ்ச் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மம்தா கூறியதாவது: வங்கதேசத்தில் இருந்து வந்து மேற்குவங்கத்தில் குடியிருக்கும் மக்கள் அனைவரும் இந்திய குடிமக்கள் தான். அவர்கள் புதிதாக குடியுரிமை வேண்டி விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு இந்திய குடியுரிமை இருக்கிறது.


latest tamil news



அவர்கள், இந்தியாவில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் ஓட்டு போடலாம். நாட்டின் பிரதமர், மாநில முதல்வரை தேர்வு செய்யலாம். குடியுரிமை விவகாரத்தில் ஒருவரை கூட மேற்குவங்கத்தில் இருந்து நாங்கள் வெளியேற்ற மாட்டோம். மேற்குவங்கத்தை இன்னொரு டில்லியாக்க அனுமதிக்க மாட்டோம். டில்லி வன்முறையை தடுக்க மோடி அரசு தவறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jeeva - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-மார்-202018:36:59 IST Report Abuse
jeeva இஸ்லாமியர்களே இப்போவாவது உங்களுக்கு புரிகிறதா இல்லை புரியாதவர்களை போல இருக்குறீர்களா. ராணுவம், ராணுவம், படிப்பு, சலுகைகள் என வங்காள தேசத்து மக்களுக்கு நீங்க உங்களது சலுகைகளில் பங்கிட தயாரா? இன்று உங்களுக்கு நாளை உங்க பிள்ளைகளுக்கு நாளை மறுநாள் அணைத்து சிறுபான்மையினருக்கு போட்டிக்கு பக்கத்துக்கு நாட்டினரை அழைத்தாள் பின் பாகிஸ்தானியரும் இது என் நாடு என வந்து பங்காளி சண்டைக்கு நிற்பார்கள். இன்று நீங்க கைகளில் பிடித்துள்ள இந்திய தேசிய கோடி எதற்காக என்று கொஞ்சம் சிந்தியுங்கள்.
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
04-மார்-202015:31:20 IST Report Abuse
Indian  Ravichandran மத்திய அரசு இன்னும் தூங்கி வழிகிறதயே இது காட்டுகிறது, மம்தாவின் ஓலம் சவடால் மத்திய அரசின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது, முறையற்ற குடியேறிகள்தான் மேற்குவங்கத்தில் பாதி மக்கள், அனைவரின் ஆதார் மற்றும் பாஸ் போர்ட் அனைத்தையும் முடக்கிவிட்டு புதிய சட்டப்படி அடையாள அட்டை வழங்க வேண்டும் குறைந்தது ஒன்றரைக்கோடி வெளியேற்ற போடமுடியும் அவர்களாகவே வெளியேறியும் போய்விடுவார். இதை செய்யவில்லை என்றால், மம்தாவை பொறுத்தவரை நீங்கள் கிள்ளுகீரைதான்.
Rate this:
Cancel
Gandhi - Chennai,இந்தியா
04-மார்-202014:47:46 IST Report Abuse
Gandhi இந்திய எல்லை மாநிலத்தின் முதல்வரின் பொறுப்பற்ற பேச்சு, இந்திய எல்லையின் பலவீனத்தை காட்டுகிறது. மம்தாவின் ஆணவ போக்கு, இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிக்க வைத்துவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X