சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

ரஜினி முடிவுக்காக காத்திருக்கும் ராதாரவி!

Added : மார் 03, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 ரஜினி முடிவுக்காக காத்திருக்கும் ராதாரவி!

நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க மாவட்ட மாநாடு, தர்மபுரியில் நடந்தது. இதில், பா.ஜ.,வில் சமீபத்தில் இணைந்த, நடிகர் ராதாரவி பங்கேற்றார். அப்போது, நிருபர்களிடம் அவர், 'குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, தி.மு.க., மூன்று கோடி பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். கையெழுத்து போட்டவர்களிடம் விசாரித்தால், 'எதற்காக கையெழுத்து வாங்கினார்கள் என, தெரியவில்லை' என்கின்றனர்.

'சட்டசபையில், குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி கேட்ட போது, இது குறித்து தெரியாததால், பதில் சொல்ல முடியாமல் ஓடியவர் தான்,
ஸ்டாலின். ரஜினிகாந்த் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாகவும், டில்லி
கலவரத்தை கண்டித்தும் பேசியுள்ளார். அரசியல் குறித்து, அவரது முடிவு வரட்டும், பார்ப்போம்' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'அடக்கி வாசிச்சா, பின்னாடி பலன் கிடைக்கும்ன்னு, கணக்கு போட்டு பேசுறாரு பாருங்க...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
04-மார்-202012:41:12 IST Report Abuse
Malick Raja இவர் தாமரையை இவர் வீட்டில் மலரவைத்தாலே போதும் .. இவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டவர் .. அடுத்து பிஜேபி யிலிருந்து நீக்கப்படுவார் காரணம் இவரது வாய்த்தொழில் அதுபோல இருக்கும் ..நாக்கில் சனி என்பது எப்படி இருக்கும் என்று கேட்டால் ராதாரவி பெயர் என்பதே சரியானதாகும் என்பதை தன்னாலேயே வலிந்து நிரூபிபவர் . வாழ்க ராதாரவி ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X